sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

பதில் சொல்வாரா முதல்வர்?

/

பதில் சொல்வாரா முதல்வர்?

பதில் சொல்வாரா முதல்வர்?

பதில் சொல்வாரா முதல்வர்?

3


PUBLISHED ON : ஏப் 18, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 18, 2024 12:00 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மக்களை பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கும் மதவாதத்திற்கு தான் நாங்கள் எதிரிகள்; மதத்திற்கு அல்ல' என்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

அப்படியெனில், சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போன்ற நோய்களுடன் ஒப்பிட்டு, அதை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று பேசிய தன் மகன் உதயநிதியை தண்டிக்காவிட்டாலும், கண்டிக்கவாவது செய்திருக்கலாமே?

அடிக்கடி ஹிந்துக்களுக்கு எதிராக எதையாவது பேசி, எங்கள் மனதை நோகடிக்கும் ஆ.ராஜாவை கட்சியில் ஓரம் கட்டாமல், தொடர்ந்து எம்.பி.,யாக நீட்டிக்க வைத்து, தற்போதைய தேர்தலில் போட்டியிட அனுமதியும் கொடுத்து அழகு பார்ப்பது ஏன்?

பிற மதத்தினரின் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் முதல்வரே, தீபாவளி, விநாயக சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி போன்ற ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல மறுப்பது ஏன்?

ஓட்டுக்காக ஹிந்து கோவிலுக்கு சென்று பயபக்தியுடன் வழிபடும் திருமாவளவன், மற்ற நேரங்களில் ஹிந்து மதத்திற்கு எதிராக எப்போதும், எதையாவது உளறிக் கொண்டே இருப்பார். அவரை கூட்டணியில் சேர்த்தது ஏன்? மதத்தின் பெயரில் செயல்படும் கட்சியுடன்கூட்டணி அமைத்து ஏன்?



வசதிகள் மட்டும் வேண்டுமா?


மைதிலி வெங்கட்ராமன், பெங்களூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்தல் அதிகாரிகள் தற்போது, மாங்கு மாங்கென்று விளம்பரங்கள் வெளியிடுவதைப் பார்க்கும்போது, ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற அவர்களின் தவிப்பு புரிகிறது.

ஓட்டு போடாதவர்கள், அரசின் பாதுகாப்பு வேண்டும்; குடிநீர் சரிவர கிடைக்க வேண்டும்; அடிப்படை வசதிகள் அனைத்தும் வேண்டும். 'வரி கட்டுகிறோம்' என வாதிடுவர். ஆனால், அந்தப் பணிகளைச் செய்ய, நல்ல அரசு வேண்டுமே... இதைப் பற்றி சிந்திக்க மறுக்கின்றனர்.

'ராமன் ஆண்டால் என்ன... ராவணன் ஆண்டால் என்ன...' என்ற கணக்கில், யாரெல்லாம் ஓட்டுப் போடவில்லையோ, அவர்களுக்கு இரண்டு மாத ஓய்வூதியம் நிறுத்தப்பட வேண்டும்; ஓய்வூதியமில்லாத முதியோருக்கு வேறுவிதமாக தண்டனை தரவேண்டும்.

அரசு அலுவலகத்தில் வேலை பார்த்தாலும் சரி, தனியார் அலுவலகத்தில் வேலை பார்த்தாலும் சரி... இரண்டு மாதம் ஊதியம் கொடுக்கக் கூடாது; அவர்களுக்குரிய விடுமுறையையும், 50 சதவீதம் ரத்து செய்ய வேண்டும்.

இந்த அறிவிப்பை உச்சநீதிமன்றமும், மத்திய தேர்தல் ஆணையமும் ஒரு சட்டமாக நிறைவேற்ற வேண்டும். அப்போது தான், மக்களுக்கு பொறுப்புணர்ச்சி வரும்.



ஆரோக்கியமான அரசியல் பேசலாமே!


வி.சந்திரமோகன், பெரிய நாயக்கன் பாளையம், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், அ.தி.மு.க., சார்பில் கலந்து கொண்ட ஒருவர், தி.மு.க., அரசின், 'மகளிர் உரிமைத் தொகை' பற்றி பேசும்போது, தமிழகத்தில் உள்ள பெண் வாக்காளர்கள் 3.25 கோடி பேரில், 1.17 கோடி பேருக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படுவதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.

'அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்' என்று தான் வாக்குறுதி கொடுக்கப்பட்டதே அன்றி, 'அனைத்து பெண் வாக்காளர்களுக்கும்' எனச் சொல்லவில்லை!

அந்த வாக்குறுதி, பின்னர், 'தகுதியுள்ள' என்ற வகையில், சில வரைமுறைகளுடன் ஆய்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அது குறித்த விமர்சனத்தை, தாராளமாக எவரும் முன் வைக்கலாம்.

அரசு ஊழியர்களாக உள்ள குடும்பத் தலைவிகளுக்கும் அத்தொகை வழங்கப்பட வேண்டுமா என, சாமானியனான எனக்கே கேள்வி எழும்போது, ஒரு அரசு, அது பற்றி சிந்திப்பதில் தவறென்ன?

பொது விவாதங்களில் கலந்து கொள்வோர் இத்தகைய விஷயங்களில் உன்னிப்பாக ஆராய்ந்து கருத்து தெரிவிப்பது நல்லது.



வாயால் கெடும் தி.மு.க.,


அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கான பிரசார பீரங்கியாக களமிறங்கியவர், நடிகர் வடிவேலு.

தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்று கட்சியாக தே.மு.தி.க., கோலோச்சிய காலம் அது. விஜயகாந்த் மீது இருந்த பொறாமை அனைத்தையும், பிரசாரம் மூலம் தீர்த்துக் கொண்டார் வடிவேலு.

தகாத வார்த்தைகளைப் பேசி, விஜயகாந்தை கேவலப்படுத்தினார். விளைவு... மொத்தமுள்ள 234 தொகுதிகளில், வெறும் 23 தொகுதிகளைப் பெற்று, மாபெரும் தோல்வியை தி.மு.க., சந்தித்தது; எதிர்க்கட்சியாகக் கூட, சட்டசபையில் அமர முடியவில்லை.

தற்போது, பா.ஜ.,வின்அண்ணாமலையைப் பார்த்து, அதே பொறாமையைக் கக்குகிறது தி.மு.க.,

அண்ணாமலையை ஆட்டுக்குட்டி என்றும், அதை விருந்து வைப்போம் என்றும் பேசுகிறது. அரசியலில் போட்டி இருக்கலாம்; பொறாமை இருக்கக் கூடாது. ஜூன் 4ல் என்ன பதிலை மக்கள் சொல்லப் போகின்றனரோ தெரியவில்லை!



ராமதாஸ் சொன்னது எ ன்னாச்சு?


ஜி.ரங்கராஜன், சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ---'பா.ம.க.,வில், என் குடும்பத்தினரை சேர்த்து, பதவியை ஒருபோதும் தர மாட்டேன். அப்படி ஒருவேளை நடந்தால், என்னை முச்சந்தியில் நிற்க வைத்து, மக்கள் சவுக்கடி கொடுக்கலாம்' என, வீர வசனம் பேசியவர், அக்கட்சி நிறுவனர் ராமதாஸ். தற்போது, தன் மருமகள் போட்டியிட வாய்ப்பு கொடுத்து உள்ளார்.

இதை நினைக்கும் போது, 'என்னடி மீனாட்சி... சொன்னது என்னாச்சு' என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. ராமதாசின் மார்பு துடிக்குதோ இல்லையோ, இவரை எண்ணி, நம் மனம் தான் 'படபட'வென்று அடிக்கிறது!

கொடுத்த வாக்கை தவற விட்ட மருத்துவர் ராமதாசுக்கு, மக்களும், கட்சித் தொண்டர்களும், பொய்யே பேசாத அரிச்சந்திரன் படத்தை, இ-மெயிலிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும். அதன் மூலம், 'சத்தியம் தவறாமை' என்ற சொல் உள்ளது என்பதை, ராமதாசின் நினைவில் நிறுத்த முடியும்.








      Dinamalar
      Follow us