PUBLISHED ON : ஜன 04, 2025 12:00 AM

ஜெ.மனோகரன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்தில்,33 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது' என்று வானிலை ஆய்வு நிலைய தென் மண்டல அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருந்தாலும், பல்வேறு இடங்களில்,நீர்நிலைகள் துார் வாரப்படாததால், மழைநீர் வீணாக கடலில் கலந்துள்ளதை அறிந்து,வேதனையே மிஞ்சியது!
நீர்நிலைகளை துார்வார ஒதுக்கப்பட்ட நிதி எங்கே தான் சென்றது?
சிலைகள் வைப்பதில் காட்டும் அக்கறையை,ஆர்வத்தை மழை நீர்சேமிப்பதில் காட்டி இருந்தால், இந்நிலை ஏற்பட்டு இருக்காதே!
இன்றும் பல ஊர்களில் ஆற்றுப் பாலங்கள்இல்லாததால், ஆபத்தான நிலையில், கழுத்தளவு தண்ணீரில் பள்ளி மாணவர்கள்,பொதுமக்கள் ஆற்றைக் கடந்து செல்லும்பரிதாப நிலையை பத்திரிகைகளில் பார்க்கிறோம்.
இவையெல்லாம் அரசின் பார்வைக்கும் வராது; அதற்கான தீர்வும் கிட்டாது!
ஆனால், சென்னையை அடுத்த முட்டுக்காடு என்ற இடத்தில், 525 கோடி ரூபாயில், கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க முனைப்பு காட்டுவர்.
ஆட்சி அதிகாரம் நிலையற்றது; அதை தக்க வைக்க வேண்டும் என்றால், மக்களின்நலன் சார்ந்த விஷயங்களில் மட்டும் கவனம்செலுத்துங்கள். வெறும் சிலைகளுக்கு திறப்பு விழா நடத்துவதால் மட்டும், பசித்த வயிறும் நிறைந்து விடாது; விவசாயிகள் வாழ்வும் செழித்து விடாது!
இதை மனதில் ஏற்க தவறினால், வரும் சட்டசபை தேர்தலில், மக்கள் உங்களை மனதில் ஏற்க மறுத்து விடுவர்!
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
த.யாபேத்
தாசன், பேய்க்குளம், துாத்துக்குடி மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்
:'அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட பின்,பல்வேறு இடங்களிலும்இதே போன்ற
பிரச்னையைகிளப்பி, ஹிந்துக்களின் தலைவர்களாக மாற சிலர் நினைக்கின்றனர்; இதை
ஏற்க முடியாது.
'அனைவரும் தங்கள் விருப்பப்படி வழிபாட்டு முறையை
பின்பற்றலாம் என்பதே நம் பாரம்பரியம்.விதிகள் மற்றும் சட்டங்களுக்கு
கட்டுப்பட்டு, இணக்கமாக வாழ்வது மட்டுமே தற்போது தேவை'என்று பேசியுள்ளார்,
ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்.
உ.பி.,யில் மதுரா, சம்பல் போன்ற
பகுதிகளில்உள்ள மசூதிகளில், தொல்லியல் துறை ஆய்வுக்கு நீதிமன்றம்
உத்தரவிட்டதை அடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்துகலவரங்கள் நடந்தன. இதைத்
தொடர்ந்து, தன் நிலைப்பாட்டை கூறிஉள்ளார், மோகன் பகவத்.
பிரச்னையை
கிளப்பி ஆதாயம் அடைய நினைக்கும் ஹிந்து தலைவர்கள், அவரது கருத்தை ஏற்க
வேண்டும். மீண்டும்மீண்டும் வரலாற்றை தோண்டிஎடுத்து, சரி செய்தபடியேஇருக்க
முடியாது. அப்படிசெய்தால் சிறுபான்மையினர் மட்டுமல்ல, ஹிந்துக்கள் கூட
ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
வரலாறு நெடுக தவறுகள்,அத்துமீறல்கள் நடந்துள்ளதுதான்; அதை சரி செய்வதேநம்முடைய வேலையாகஇருக்க முடியாது, கூடாது.
ஏனெனில், இப்போது இருக்கும் இஸ்லாமியர் எவரும் அதற்கு காரணமல்ல எனும்போது, அவர்களை தண்டிக்க கூடாது.
பெரும்பான்மையாகஇருந்தாலும்,
சிறுபான்மையாக இருந்தாலும் பொதுவாகஇந்தியர்கள் அமைதியானவர்கள்;
சகிப்புத்தன்மை நிறைந்தவர்கள். இதுதான் நிதர்சனம்!
அமைதி மற்றும்
ஒற்றுமையுடன் தேச நலனுக்கு பாடுபட வேண்டும்; அதுதான் இன்றைய தேவை. மாறாக,
மசூதிகள்தோறும்தோண்டி ஆராய்ந்து கொண்டுஇருந்தால், வீண் கலவரங்களும்,
குழப்பங்களுமே மிஞ்சும்.
இதை, அனைவரும் மனதில் வைத்து செயல்பட்டால், இந்தியா வல்லரசுநாடுகளில் ஒன்றாகபரிணாமம் எடுக்கும் என்பது சர்வ நிச்சயம்!
சபாஷ்... சரியான தீர்ப்பு!
அ.குணசேகரன்,
வழக்கறிஞர்,புவனகிரி, கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்'
கடிதம்: தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக, சரியாக தகவல்கிடைக்காதபோது,
சிலர் உயர்நீதிமன்றம் வரை சென்று, அதன் மீது வழக்கு தொடுத்து,தாங்கள்
கேட்ட தகவல்களை பெறுகின்றனர்.
அவ்வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம்,
நீர்வளத்துறையில் உதவி பொறியாளராக பணியாற்றிய காளிப்ரியன் என்பவரது
பணிப்பதிவேடு, சொத்துக் கள் மற்றும் கடன்கள் உள்ளிட்ட விபரங்களை, அதே
மாவட்டம், திம்மபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன், தகவல் அறியும் உரிமை
சட்டத்தின் கீழ், பொதுத் தகவல் அலுவலரிடம் கேட்டுள்ளார்.
அதற்கு,
'அரசு ஊழியர் தொடர்பான தனிப்பட்ட விபரங்களை வழங்க முடியாது' என்றும்,
'அவற்றுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் விலக்கு
அளிக்கப்பட்டுள்ளது' என்று கூறி தகவல் மறுக்கப்படவே, இதை எதிர்த்து,
சீனிவாசன்உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார்.
இந்நிலையில், உயர்
நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன், 'பொதுவாக,அரசு ஊழியர்களின்
பணியைபாதிக்கும் வகையிலான தகவல்களை பொதுவெளியில் வெளியிட முடியாது
என்றாலும், அரசு ஊழியர்களின் சொத்துக்கள் மற்றும்கடன்கள் குறித்து
விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க முடியாது என
மறுக்கமுடியாது' எனக் கூறி, 'அரசுஊழியர்களின் சொத்துக்கள்மற்றும் கடன்கள்
குறித்த விபரங்கள் தனிப்பட்ட விபரங்கள் அல்ல என்பதால்,அவற்றின் ரகசியம்
காக்க முடியாது' என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கி, மனுதாரர் கேட்ட
விபரங்களை இரண்டு மாதங்களில் தர வேண்டும் என, தகவல் ஆணையத்திற்கு உத்தரவு
பிறப்பித்துள்ளார்.
இதன் வாயிலாக, அரசு அதிகாரிகள், அரசு
பணியில்சேர்ந்த பின், லஞ்சம் வாங்கிகுவித்த சொத்துக்களின் விபரங்களையும்,
அவர்கள்குடும்ப உறவுகள் பெயர்களில் வாங்கியுள்ள சொத்துக்கள் குறித்தும்
அறிய முடியும்!
இனி, சமூக ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி, பல அரசு அதிகாரிகளின் ஊழல்களைஅம்பலப்படுத்துவர் என்பது நிச்சயம்!
அரசு பரிசீலிக்குமா?
என்.
பாடலீஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
சென்னையில் இயங்கும் மாநகரப் பேருந்துகளையும்,மாநகரில் உள்ள
அனைத்துசிக்னல்களையும், ஜி.பி.எஸ்.,கருவி வாயிலாக இணைக்கும்திட்டம்
செயல்படுத்தப்படஉள்ளதாக, பத்திரிகையில்செய்தி வெளியாகி இருந்தது. இது ஒரு
நல்ல திட்டம்.
இதன் வாயிலாக, மாநகரப் பேருந்துகள் விரைவாகவும்,
சிக்னல்களில்தங்கு தடையின்றியும் செல்ல முடியும். இதேபோல், ஆம்புலன்ஸ்
வண்டிகளில் இத்திட்டத்தை செயல்படுத்தினால், அவசர உதவி தேவைப்படும்
நோயாளிகளுக்கு விரைந்துசிகிச்சை அளிக்க முடியும்.
ஏனெனில், தற்போது
சென்னையில், பல சிக்னல்களில் உயிருக்குப் போராடும்நோயாளிகளுடன், ஆம்புலன்ஸ்
வண்டிகள்காத்திருப்பதை தினமும்பார்க்கிறோம். சிலசிக்னல்களில் அரை கிலோ
மீட்டர் துாரத்திற்குப் பின், போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வண்டிகள்
நிற்பதைக் காண முடிகிறது.
எனவே, இத்திட்டத்தை ஆம்புலன்ஸ்
வண்டிகளுக்கும் செயல்படுத்த சுகாதாரத் துறையும், காவல்துறையும் முன்வர
வேண்டும். இதன் வாயிலாக,விலைமதிப்பற்ற பல உயிர்கள் காப்பாற்றப்படும்.
தமிழக அரசு, இதை பரிசீலிக்குமா?