தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/நீதிக்கு முன் அனைவரும் சமம்!

நீதிக்கு முன் அனைவரும் சமம்!

நீதிக்கு முன் அனைவரும் சமம்!


PUBLISHED ON : நவ 28, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 28, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: உலகிலேயே ஜனநாயக முறையில் ஆட்சி செய்யும் மிகப்பெரிய நாடு, இந்தியா. ஜனநாயகத்தை தாங்கி நிற்கும் நான்கு துாண்களாக, சட்டங்கள் இயற்றும் பார்லிமென்ட், நிர்வாகத்துறை, நீதித்துறை, பத்திரிகைத்துறை உள்ளன. இந்த நான்கும், தங்கள் கடமையை சரியாக செய்யும் பட்சத்தில், எந்தவொரு தவறும் நடைபெறாது.

ஆனால், இங்கு சட்டம் இயற்றுபவர்கள் கூட, அந்த சட்டத்தை மதித்து நடப்பது இல்லை.

அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்கும் போது, ‘இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு, ஒளிவு மறைவு இன்றி, கடமையை செய்வேன்’ என்று உறுதிமொழி எடுக்கின்றன; ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் இதே உறுதி மொழியை எடுத்து தான், தங்கள் பணியில் அமர்கின்றனர்.

ஆனால், ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளில் பெரும்பாலானோர், தாங்கள் எடுத்த உறுதிமொழியின்படி நடப்பது இல்லை.

ஆட்சியாளர்கள் மற்றும் நிர்வாகத் துறை அதிகாரிகள் தவறு செய்யும் போது, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க, நீதிமன்றங்களையே நாம் நாட வேண்டியுள்ளது.

அவ்வகையில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் துாணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா அதை நிறைவேற்றாமல், சட்டத்தை அவமரியாதை செய்துள்ளார்.

தற்போது, தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள, 17 பக்க தன்நிலை விளக்கத்தை, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து விட்டு மன்னிப்பும் கோரியுள்ளார்.

இது எப்படி இருக்கிறது என்றால், ‘ஒருவரை கொல்வது மிகப்பெரிய குற்றம் என்பது தெரியும்; ஆனாலும் கொன்று விட்டேன்; என்னை மன்னித்து விடுங்கள்’ என்பது போன்று உள்ளது.

பல ஆயிரம் போலீசாரை வரவழைத்து, பக்தர்களை பயமுறுத்திய கலெக்டர், தன் தவறில் இருந்து தப்பிக்க, கோவில் தேவஸ்தானம் மீது பழியை போட்டு தப்பித்துக்கொள்ள முயற்சி செய்துள்ளார்.

தற்போது, உச்ச நீதிமன்றத்தில் கலெக்டர், போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் வினய் மற்றும் கோவில் செயல் அலுவலர் செல்வி ஆகிய நான்கு பேர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் இந்த நான்கு பேர் மீதும் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை, ஒட்டுமொத்த இந்தியாவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளது.

நீதிக்கு முன் அனைவரும் சமம் என்பது உண்மை என்றால், இவர்கள் அனைவரும் பாரபட்சம் இல்லாமல் தண்டிக்கப்பட வேண்டும்.

அப்போது தான் நீதிமன்றத்தின் மீது, 144 கோடி இந்தியருக்கும் நம்பிக்கை பிறக்கும்!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us