sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

மதுவிலக்காவது, மண்ணாங்கட்டியாவது!

/

மதுவிலக்காவது, மண்ணாங்கட்டியாவது!

மதுவிலக்காவது, மண்ணாங்கட்டியாவது!

மதுவிலக்காவது, மண்ணாங்கட்டியாவது!

1


PUBLISHED ON : அக் 07, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 07, 2024 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.மகேசன், அருப்புக்கோட்டையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்தில்மதுவிலக்கு சாத்தியமில்லை. இங்கு மது விற்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குஇல்லை. மத்திய அரசால் தான்மதுவிலக்கை கொண்டு வர முடியும்' என, தமிழக அமைச்சர் ரகுபதி பேசியிருக்கிறார்.

மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற ஆர்.எஸ்.பாரதியோ, 'பெண்கள் ஒவ் வொருவரும், மது குடிக்கும், 10 பேரை மனமாற்றம் செய்ய வேண்டும்' என்கிறார்.

மற்றொரு கண்டுபிடிப்பாளரான தி.மு.க., நிர்வாகி இளங்கோவன், 'மது போதை, மனிதனின் மதிப்பைக் குறைக்கிறது' என்கிறார்.

கடந்த 2016 தேர்தலின்போது, தமிழகத்தில் மதுப் பழக்கத்தால் இளம் விதவையரின் எண்ணிக்கை பெருகி வருவதாக, தி.மு.க., - எம்.பி., கனிமொழி நீலிக்கண்ணீர் வடித்ததை, யாரும் மறந்து விடவில்லை.

மு.க.ஸ்டாலின் மனது வைத்தால் டாஸ்மாக்கை இழுத்து மூட அரை வினாடி போதுமே! அதற்காக, 'மதுவிலக்கு செய்ய வேண்டியது மத்திய அரசு தான்' என, பிளேட்டை மாற்றிப் போட்டு, எட்டு கோடி தமிழக மக்களை ஏமாற்றுவது ஏன்?

பீஹார், குஜராத், நாகாலாந்து, மிசோரம்மாநிலங்கள், லட்சத்தீவு யூனியன் பிரதேசம் ஆகியவை, பிரதமர் மோடி சொல்லியா மதுவிலக்கை அமல்படுத்தின?

மதுவிலக்கு கொள்கையில், தி.மு.க.,வைநேரடியாக எதிர்க்க திராணி இல்லாத, இரட்டை வேடதாரியான திருமாவளவன், நாடு முழுதும் மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்தி,புதுடில்லியில் அல்லவா மாநாடு நடத்திஇருக்க வேண்டும்?

'பல லட்சம் கோடிகளுக்கு அன்னிய முதலீட்டை அள்ளி வந்திருக்கும் நீங்கள்,குடிபோதையால் கை நடுங்கிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு, எப்படிவேலைவாய்ப்பை வழங்கப் போகிறீர்கள்?'என்று, மதுஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற ஒரு இளம் பெண், ஆட்சியாளர்களின் புத்தியில் உரைக்கும்படி கேள்வி எழுப்பிஇருக்கிறார். தனக்கு இல்லாத துணிச்சல்,கட்சி நிர்வாகிக்கு வந்ததை எண்ணி, வெட்கித் தலைகுனிய வேண்டும் திருமாவளவன்.

ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதை தான் இது. டாஸ்மாக் தொழிலதிபர்களைக் கொண்ட இரண்டு பெரிய திராவிடக்கட்சிகளும், இப்படி பம்மாத்து காட்டியே, தங்கள் பாக்கெட்டை நிரப்பி, மக்களை ஏமாற்றுகின்றன.

தமிழகத்தில் மது விலக்காவது, மண்ணாங்கட்டியாவது!

கார்கே பேச்செல்லாம் ஜுஜுபி!


ராம்கோ.பாண்டியன், செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: ஜம்மு - காஷ்மீரில், சட்டசபை தேர்தலுக்கான மூன்றாம்கட்ட பிரசாரம் நடந்தது.இதற்கான பொதுக்கூட்டத்தில், காங்., தலைவர்மல்லிகார்ஜுன கார்கே பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார்; உடனே அருகில்இருந்த கட்சி நிர்வாகிகள் அவரை தாங்கி பிடித்து மேடையில் இருந்த இருக்கையில் அமர வைத்தனர்.

சிறிதுநேர ஓய்வுக்கு பின், கார்கே மீண்டும் பேசதுவங்கினார். அப்போது, 'காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கிடைக்க போராடுவோம். எனக்கு, 83 வயது. எனினும் விரைவில் சாக மாட்டேன்; பிரதமர் மோடியை அதிகாரத்தில் இருந்து நீக்கும் வரை உயிரோடுதான் இருப்பேன்' என்று பேசியுள்ளார்.

கார்கே, கட்சிக்காரர்களைஉற்சாகப்படுத்துவதற்காகஇப்படி பேசியுள்ளார்என்று வேண்டுமானால்எடுத்துக் கொள்ளலாமேதவிர, மோடி பிரதமராகஇருக்கும்வரை, பா.ஜ.,வை தவிர வேறுஎந்த கட்சியும், மத்தியில்ஆட்சியை பிடிக்க நினைப்பது, முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்டது போல ஆகிவிடும்.

மோடியின் ஆட்சியால்,நம் நாடு அடைய வேண்டிய பயன்கள் இன்னும்நிறையவே உள்ளன.

நாடு சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் ஆனாலும், ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியால் நம் நாட்டில் தீர்க்கப்படாதபல பிரச்னைகள், இன்னும்உயிர்ப்புடன் இருக்கின்றன.

அதையெல்லாம் தீர்க்கவும், உலகளவில்பொருளாதார வளர்ச்சியில்ஐந்தாவது இடத்தில் இருந்து மேலும் முன்னேறவேண்டியதற்காகவும், ஊழலற்ற துாய்மையான ஒரு அரசும், அரசியலும் தொடர வேண்டும் என்பதற்காகவும், மோடி ஆட்சி நீடிக்க வேண்டும்.

கார்கே பேச்செல்லாம் ஜுஜுபி!

கேள்வி இ ங்கே பதில் எங்கே?


குரு பங்கஜி, சென்னையில்இருந்து அனுப்பிய, 'இ -மெயில்'கடிதம்: --------------------------------நடிகர் விஜய் கட்சி மாநாடு தொடர்பாக, மாநாட்டின் நிகழ்ச்சி நிரல், பாதுகாப்பு ஏற்பாடு, பெண்கள், குழந்தைகள் எண்ணிக்கை, பங்கேற்கும்தலைவர்கள் விபரம் என, 21 குடைச்சல் கேள்விகளை த.வெ.க., கட்சி நிர்வாகிகளிடம் போலீசார் கேட்டுள்ளனர்.

இந்த எக்குதப்பான கேள்விகளானது, நக்கீரனையே மிஞ்சும் வண்ணம் உள்ளன! எய்தவர் எங்கோ இருக்க, அம்பை நொந்து என்ன பயன்!

கேள்விகளை கேட்டவர்களிடமும், கேட்க சொன்னவர்களிடமும், மக்கள் கேட்க விரும்புவது இதுதான்...

 ஆளும் கட்சி மாநாடு நிர்வாகிகளிடமும், இத்தகைய கேள்வி கணைகளை அடுத்தடுத்து தொடுத்து, திக்கு முக்காட வைக்கும் தெம்பு, திராணி உங்களுக்கு உள்ளதா?

 அங்கு, தலைக்கு எத்தனை குவார்ட்டர்மற்றும் பிரியாணி பொட்டலம் கொடுக்கப்பட்டது என்பதை, நா கூசாமல் கூறுவீர்களா?

 அந்நிகழ்வுகளில், தமிழர் கலாசாரத்தை குழிதோண்டி புதைக்கும், ரெக்கார்டு, குத்து டான்ஸ் வகை, எத்தனை தினுசு என்பதை புட்டு புட்டு வைப்பீர்களா?

 அங்கு மதிய, இரவு உணவுக்காக, எத்தனை ஆடு, கோழிகள் தலை வாங்கப்பட்டது என்ற தகவலை, தவறாது தருவீர்களா, கேள்வி சிகாமணிகளே?

 அந்த கட்சி மாநாடுகளில், தலைக்கு கூலி கொடுத்து, ஆள் பிடிக்கும் தலையாரிகள் எத்தனை பேர்? அவர்களின் சம்பள விபரம் போன்றவற்றை, விலாவாரியாக வழங்குவீர்களா ?

 ஆளும் கட்சி மாநாடுகளுக்கு, சாரை சாரையாகவரும் மனித ஆட்டு மந்தை லாரி லோடுகள் எத்தனை? கச்சிதமாக காட்டுவீர்களா?

கோளாறை சீக்கிரம் சரி செய்யணும்!


வி.எச்.கே.ஹரிஹரன்,பாலக்காடு, கேரளாமாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 2021 - 22ம் நிதியாண்டில், வடகிழக்கு மாநிலங்களுக்கு, மோட்டார்வாகனங்களை எடுத்துச் செல்ல, முறைகேடான ஊக்கத் தொகை, தவறான ஓவர்டைம் அலவன்ஸ் ஆகியவற்றுடன், ரயில்வே நிலங்களை சரியாக கணக்கீடுசெய்யாமை ஆகிய காரணங்களுக்காக, தெற்கு ரயில்வேக்கு 20.58 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என, தலைமை தணிக்கையாளர்ஆய்வறிக்கையில் கூறியுள்ளார்.

நிர்வாகத் துறையில் உயர் படிப்பு படித்தவர் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். அவர் தலைமையிலான நிர்வாகத்தில், கோட்ட வருவாய் மற்றும் சிப்பந்திகள்பணித்திறன் ஆகியவை சீர்கெட்டுள்ளன.

தெற்கு ரயில்வேயில் தான் இந்த கதி என்றால்,வடமாநிலங்கள் மிகவும்பின்தங்கி விட்டன. கோளாறைக் கண்டறிந்து சரி செய்யாவிட்டால், தெற்கு ரயில்வே, மிகப் பெரிய நஷ்டத்தைச்சந்தித்து, நாட்டின் பொருளாதாரம் சீர்கெடும்.






      Dinamalar
      Follow us