sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

ஆடிட், யோகாவுக்கு பிராமணர் வேண்டுமா?

/

ஆடிட், யோகாவுக்கு பிராமணர் வேண்டுமா?

ஆடிட், யோகாவுக்கு பிராமணர் வேண்டுமா?

ஆடிட், யோகாவுக்கு பிராமணர் வேண்டுமா?

9


PUBLISHED ON : செப் 20, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 20, 2024 12:00 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.முகம்மது இஸ்மாயில், ராமநாதபுரத்தில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடைபெற்ற தி.மு.க., பவள விழாவில் பேசிய அக்கட்சியின் அமைச்சர் துரைமுருகன், அநாவசியமாக ஆவேசப்பட்டு, வார்த்தைகளைக் கொட்டி, பிராமண சமுதாயத்தை தாக்கி உள்ளார்.

'தற்போதுள்ள சரித்திரத்தில் என்ன கேடு?ஹரப்பா, மொஹஞ்சதாரோ திராவிட நாகரிகம் என்றோம். அது ஆரியர்கள் நாகரிகம் என, சமீபத்தில் டில்லி அரசு, இந்தியாவின் சரித்திரத்தை மாற்றி எழுதுவதற்காக அமைத்துள்ள கமிட்டி கூறுகிறது. அதாவது, அந்த ஆரிய நாகரிகம் சரஸ்வதி நாகரிகம் என்கிறது. கமிட்டியில்,17 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் அரசு அதிகாரிகள்; மீதி, 14 பேரும் பிராமணர்கள். எனவே, மறுபடியும் பழைய பல்லவியை பாட வேண்டிய நிலை. இதே நிலை தொடர்ந்தால், தி.மு.க., தன் வீரியத்தைக் காட்டும் நிலை வரும்' என உரையாற்றியுள்ளார்.

ஒரு காரியம் செய்வோமா துரைமுருகன்?ஜெர்மனியை ஆண்ட ஹிட்லர், யூதர் ஒருவர் கூட தன் நாட்டில் இருக்கக் கூடாது என்பதற்காக, அவர்களை சித்ரவதை செய்து கொன்று குவித்ததை போல, இந்தியாவில் உள்ள பிராமணர்கள் அனைவரையும் கொன்று குவித்து விடுவோமா?

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணங்கள்உட்பட, கடந்த மூன்றாண்டுகளாக ஆட்சியில் அமர்ந்திருக்கும் திராவிட மாடல் கழக அரசு செய்யும் மற்றும் செய்து கொண்டிருக்கும் அக்கிரமங்களையும், அநியாயங்களையும் கண்டு கொள்ளாமல்,மத்திய அரசு அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதற்காக, எதை வேண்டுமானாலும் பேசுவதா?

அதே கூட்டத்தில், 'மாநில சுயாட்சி கொள்கை, நம் உயிர் நாடி கொள்கையில்ஒன்று. இப்போதுள்ள சூழலில் மாநில சுயாட்சியை வென்றெடுக்க வேண்டும்'என சூளுரைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அதிகப்பிரசங்கித்தனமாக மத்திய அரசையும், பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் வரம்பு மீறி தாக்கிய மேற்கு வங்க தீதி மம்தா பானர்ஜியை, உச்ச நீதிமன்றம் அடக்கி வைத்திருப்பதை மறந்து விடாதீர்கள்.

உங்களுக்கு திருமணம் செய்து வைக்க, பிராமணப் பெண் வேண்டும்; உங்கள் வருமான வரி கணக்குகளை சமர்ப்பிக்க பிராமண ஆடிட்டர் வேண்டும்; உடலில் உபாதைகள் உண்டானால், அதை சீராக்க பிராமண டாக்டர்கள் வேண்டும்; நீங்கள் யோகாசனம் பயில வேண்டும் என்றால், அதில் விற்பன்னர்களான பிராமணர்கள் வேண்டும்.

உங்களுடையை சேனலில் ஒளிபரப்ப ராமானுஜ ஐயங்கார் காவியம் வேண்டும்; உங்கள் குடும்பத்தினர் கோவில்களில் வழிபட்டு, அபிஷேக ஆராதனைகளும், யாகங்களும் நடத்த பிராமணர்கள் வேண்டும்; ஆனால், பிராமணர்கள் ஒருவரும் தமிழகத்தில் வாழக்கூடாது.

நன்றாக இருக்கிறதய்யா உங்கள் கொள்கை!

மத்திய அரசு நியமித்துள்ள அந்த சரஸ்வதிநாகரிகம் கமிட்டியில் சேர்க்க, அண்ணன் துரைமுருகனாருக்கு தெரிந்த தகுதியும், திறமையும் வாய்ந்த, பிராமணர்கள் அல்லாத, 14 பேரை பிரதமர் மோடிக்கு பரிந்துரை செய்து, நியமனம் செய்ய கோருங்களேன் பார்க்கலாம்!



மாபாதகத்தை தடுக்க வேண்டும்!


அ.யாழினி பர்வதம், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், ராஜஸ்தானில் இருந்து சென்னை எழும்பூருக்கு ரயிலில் வந்த 1,700 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

அதுபோல சென்ட்ரல்ரயில் நிலையத்திலும், 1,556 கிலோ கெட்டுப்போன இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள், இறைச்சி மூட்டைகளை நெருங்கும்போதே, வாந்தி வரும் அளவுக்கு துர்நாற்றம் வீசியிருக்கிறது.

இந்த இறைச்சியைத் தான், ஹோட்டல்களுக்கு சப்ளை செய்கின்றனராம். மசாலா சேர்த்து வறுத்த பின், அந்த கெட்டுப்போன இறைச்சியைத்தான் காசு கொடுத்து வாங்கி சாப்பிட்டு, ஆரோக்கியத்தைகெடுத்துக் கொள்கிறோம் என்பதை நினைத்தாலே மனம் பதைபதைக்கிறது.

கடந்தாண்டுகளில் கூட நாய்க்கறி போலிருந்த ராஜஸ்தான் ஆட்டுக்கறி பறிமுதல் நடந்தது. அது இன்றும் தொடர்கிறது என்றால், மக்கள் நலனில்விளையாடும் இந்த பாதக செயலில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை தர வேண்டும்.

ஆனால், ரயிலில் இதுபோன்ற பார்சல்கள்அனுப்புவோர், பெறுபவர் முகவரி இல்லாமல் தான்வருவதாக சொல்கின்றனர். அது எப்படி சாத்தியம்? பெரிய அளவில் அனுப்பப்படும் பார்சல்களை பரிசோதிக்காமல், அனுப்புனர், பெறுனர் ஆதாரமில்லாமல் ரயில்வே நிர்வாகம் எப்படி ஏற்கிறது?

அப்படியானால் இந்த அநியாய மோசடியில், ரயில்வே ஊழியர்களுக்கும்தொடர்பு உண்டா என்ற சந்தேகம் எழுகிறதே.

இதுபோன்ற கெட்டுப் போன இறைச்சியை வாங்கிப் பயன்படுத்தும் ஹோட்டல்களையும் கண்டறிந்து 'சீல்' வைக்க வேண்டும். ரயில்வே நிர்வாகம், அதீத அக்கறை உடன் இந்த மாபாதகத்தைஉடனடியாக தடுக்க வேண்டும். ரயிலில் தடுக்கப்பட்டால் தனி வாகனம் வாயிலாக, கெட்டுப்போன இறைச்சி கொண்டுவர வாய்ப்பு இருப்பதால், சாலைமார்க்கத்தையும் கண்காணிக்க வேண்டும்.

அரசு இவ்விவகாரத்தில் போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு, மக்கள் ஆரோக்கியத்தை காக்க வேண்டும்.



விஞ்ஞானத் துடன் மெய்ஞ்ஞானமும் அவசியம்!


அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை, நாகை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த, 1970ல் எங்கள் பக்கத்து கிராமமான மஞ்ச கொல்லை குமரன் நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்தேன். அப்பள்ளியில்வெள்ளிக்கிழமை தோறும்,மும்மத பிரார்த்தனை பாடல்களை ஆசிரியர்களும்,மாணவர்களும் சேர்ந்து பாடுவர்.

மாதம் ஒருமுறை, மாணவர்இலக்கிய மன்றம் வாயிலாக தலைவர்களின் பிறந்தநாள்கூட்டம் நடக்கும். அதில்,நானும் பங்கேற்று பல தலைவர்கள் குறித்து பேசி, என் பேச்சாற்றலை வளர்த்தெடுத்தேன். இதை எதற்காக கூறுகிறேன் என்றால், பள்ளி வாழ்க்கையில் எனக்கு அமைந்த இத்தகைய நீதி போதனை வாய்ப்புகள் தான், அறவழியில் வாழ என்னை தயார்படுத்தியது.

சமீபத்தில் ஓரிரு அரசு பள்ளிகளில் ஆன்மிகம் என்ற பெயரில் யாரோ ஒருவர், அரைவேக்காட்டுத்தனமான விஷயங்களை அடாவடியாக பேசியுள்ளார். இதனால், 'பள்ளிகளில் இனி ஆன்மிக நிகழ்ச்சிகள்கூடாது, அறிவியல் மட்டுமே பகுத்தறிவை வளர்க்கும்' என்று, அரசு முடிவெடுப்பது நியாயமல்ல.

இன்று, வேளுக்குடி கிருஷ்ணன், சுகி சிவம், மங்கையர்க்கரசி என, எத்தனையோ ஆன்மிகவாதிகள் பக்தி வாயிலாக நீதி போதனைகளை, வாழ்க்கை நெறிகளை போதித்து, மனிதனை மாமனிதனாக்குகின்றனர்.அவர்களை போன்றவர்களைக் கொண்டு, பள்ளிகளில் ஆன்மிக நிகழ்ச்சிகள்நடத்துவது குற்றமாகாதே.

கம்பராமாயணம், பெரியபுராணம் பாடத் திட்டத்தில்இருக்கும்போது,அதையொட்டிய நிகழ்ச்சிகள் நடத்துவதும் தவறல்லவே.விஞ்ஞானம் அறிவை வளர்க்கும்; மெய்ஞ்ஞானம்ஆத்மாவை மேம்படுத்தும்.விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும் மனிதனுக்கு இரு கண்கள் போல.

எனவே, மாணவர்களுக்குநீதி போதனையாக பக்திஇலக்கியங்களையும் போதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.








      Dinamalar
      Follow us