/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
மானம், ரோஷம், இன்னும் பாக்கி இருக்கா?
/
மானம், ரோஷம், இன்னும் பாக்கி இருக்கா?
PUBLISHED ON : ஜூன் 17, 2023 12:00 AM

ஜி.ரங்கராஜன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவின் போது, செங்கோல் முன், பிரதமர் மோடி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கியதை, பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், 'டுவிட்டர்' பக்கத்தில், 'மோடிக்கு மூச்சிருக்கா... மானம், ரோஷம்?' என்று தரக்குறைவாக பதிவிட்டிருந்தார். அந்த அமைச்சரிடம் கேட்க விரும்புவதாவது...
* தமிழை காட்டுமிராண்டி மொழி என்று வசை பாடிய, ஈ.வெ.ரா., சிலையை, திராவிடச் செம்மல்கள் வெட்கம் கெட்டு, சூடமேற்றி வணங்குகின்றனரே... அது ஏன்? அப்படிப்பட்ட உங்களுக்கே இன்னும் மூச்சு உள்ளதே!
* மக்கள் வரிப்பணத்தை திருடுவோரும், போலி மத சார்பின்மைவாதிகளுமான தி.மு.க., தலைவர்கள் முன், கழகத்தினர் நெற்றியில் மண் ஒட்ட விழுந்து வணங்குகின்றனரே... அவர்களுக்கு மாலை யிட்டு மகிழ்கின்றனரே... அது எந்த வகையில் மானமுள்ள செயலாகும்?
* மாநிலம் முழுதும், 'டாஸ்மாக்' மதுவையும், அது போதாதென்று கள்ளச் சாராயத்தையும் ஆறாக ஓடவிட்டு, ஏழைப் பெண்களின் தாலிக்கு உலை வைக்கிறீர்களே...
* திராவிட மாடல் அலங்கோல ஆட்சியில், மணல் கொள்ளையரை பற்றி புகார் தெரிவித்த அரசு அதிகாரி, அவரின் அலுவலகத்திலேயே வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இவற்றில் எல்லாம் போகாத உங்கள் திராவிட மாடல் அரசின் மானம், ரோஷம், தமிழ் மன்னர்கள் மாண்பை குறிக்கும் செங்கோலை பிரதமர் வணங்கியதால் போய்விடுமா?இதற்கெல்லாம் பதில் சொல்லுங்கள் மந்திரி மனோ தங்கராஜ்... நாக்கில் நரம்பின்றி, நேர்மையின் சின்னமான பிரதமர் மோடியை வசை பாடிய உங்களுக்கும், உங்களை போன்ற ஜந்துக்களை சகித்துக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும், மானம், ரோஷம், இன்னமும் பாக்கி இருக்கிறதா?
பா.ஜ., ஒன்றும் தி.மு.க., அல்ல!
எஸ்.ஜெயராஜ், நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'எதிர்காலத்தில், தமிழரை பிரதமராக்க வேண்டும்' என்று கூறினார்.
இதுபற்றி கருத்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், 'தமிழரை பிரதமராக்கப் போகிறேன் என, அமித் ஷா கூறியது மகிழ்ச்சியாக உள்ளது. மோடி மீது அவருக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை; 2024ல் தமிழிசை, முருகன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என நினைக்கிறேன்' என்று அங்கலாய்த்து, பா.ஜ., கட்சிக்குள் சிண்டு முடிய முயன்றிருக்கிறார்; இது பா.ஜ.,விடம் பலிக்காது.
பா.ஜ., ஒன்றும், தி.மு.க., போல குடும்ப கட்சி அல்ல. பா.ஜ.,வில், தலைமை பதவியை அலங்கரிக்க ஒருவரல்ல, இருவரல்ல... நுாற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தகுதியான நபர்கள் உள்ளனர். ஸ்டாலினுக்கு தெரிந்தது தமிழிசையும், முருகனும் தான் என்றால், அதற்கு நாம் என்ன செய்வது?
முதல்வர் ஸ்டாலினுக்கு, மு.க.முத்து என்ற ஒரு அண்ணன் இருக்கிறார். இது, அவருக்கு நினைவிருக்கிறதா, இல்லை மறந்து விட்டாரா என்று தெரியாது. இன்று ஸ்டாலின் இருக்கும் இடத்திற்கு, முதலில் முத்துவை தான், கருணா நிதி, 'தயார்' செய்தார்; ஏனோ அந்த திட்டம், 'ஒர்க் அவுட்' ஆகவில்லை. மு.க.முத்து நடித்த, 'அணையா விளக்கு' திரைப்படத்தில், அவரே ஒரு பாடலை தன் சொந்த குரலில் பாடியுள்ளார். அதாவது,
'யாரும் வருவார்!
யாரும் தொழுவார்!
நாகூர் ஆண்டவன் சன்னிதியில்!
நீயும் ஒன்று நானும் ஒன்று
நபிகள் நாயகம் முன்னிலையில்!' என்பது தான் அந்த பாடல்.
அதுபோல, பாரதிய ஜனதா கட்சியில், அனைவருமே தொண்டர்கள் தான். 'பாரத் மாதா கீ ஜெய், வந்தே மாதரம்' என்ற இரு கோஷங்களை தவிர, வேறு தனிப்பட்ட யார் பெயரையாவது குறிப்பிட்டு சொல்லி, 'வாழ்க... வாழ்க...' என்று முழங்கி கேட்டு இருக்கிறீர்களா? அதுதானய்யா பா.ஜ.,
எப்படி அமெரிக்க ஜனாதிபதியாக ஒருவர், இரு முறைக்கு மேல் பதவி வகிக்க கூடாதோ, அதுபோல, பா.ஜ., கட்சியிலும் ஒருவர் இரு முறைக்கு மேல், தலைமை பதவியில் இருக்க முடியாது. நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் சுப்ரமணியன் ஆகியோரை, அவர்கள் மத்திய அமைச்சர்களாகும் வரை யாருக்காவது தெரியுமா?
அதுபோல, அடுத்த பிரதமராக ஒரு தமிழர் தான் வர வேண்டும் என்றால், அந்த தமிழர், நீங்கள் (கழக தலைவர் மற்றும் இங்குள்ள அரசியல் கட்சிகள்) நினைத்தே பார்த்திராத, முற்றிலும் தகுதியான, திறமையான ஒருவராகவே இருப்பார்.
அதுவரை, அவரா... இல்லை இவரா என்று, கற்பனை செய்து பொழுது போக்கி கொண்டிருங்கள். மறுபடியும் ஒருமுறை சொல்கிறோம்.... பா.ஜ., ஒன்றும் தி.மு.க., அல்ல!
தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி!
ரேவதி
பாலு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒவ்வொரு ஆண்டும்
தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில், இந்த ஆண்டு தமிழக
மாணவர்கள் பங்கேற்காதது, ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலுக்கியிருக்கிறது.
இந்தப்
போட்டிகளில், மாணவர்கள் பெறும் பதக்கங்கள் அடிப்படையில், மதிப்பெண்
வழங்கப்பட்டு, உயர்கல்வியில் சேரும் போது, விளையாட்டு வீரர்களுக்காக ஒதுக்
கீடு செய்யப்பட்ட இடங்களில், அவர்கள் சேருவதற்கான தகுதியை பெறுவர்.
ஒவ்வொரு
ஆண்டும், பள்ளிகளுக்கான தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க, மாணவர்களை
தேர்வு செய்து அனுப்பும்படி, தேசிய விளையாட்டு கூட்டமைப்பு பள்ளிக்கல்வி
துறைக்கு கடிதம் அனுப்பும்; அதேபோல, இந்த ஆண்டும் கடிதம்
அனுப்பப்பட்டுள்ளது. இருந்தும், தமிழக அரசின் சார்பாக, எந்த நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை.
இந்த விவகாரத்தில், 'அதிகாரிகளின் கவனக்குறைவால்
தான், தமிழக மாணவர்கள் பங்கேற்க முடியாத நிலை உருவானது' என்கிறார்,
உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கத்தின் செயலர்.
அதேநேரத்தில், 'தகவல்
பரிமாற்ற பிரச்னையால், தேசிய விளையாட்டு போட்டிகளில், தமிழக மாணவர்களால்
பங்கேற்க முடியவில்லை' என்கிறார், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர்
உதயநிதி.
இது குறித்து, தீவிர விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கை
எடுக்கப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த காலதாமதமான நடவடிக்கையால்,
எந்தப் பலனும் இல்லை.
அமைச்சர்கள், பிரபலங்களின் பிள்ளைகளைப் போல,
அரசு பள்ளிகளில் படிக்கும் சாதாரண மாணவர்களால், வெளிநாட்டிற்கு சென்று,
விளையாட்டு சம்பந்தமாக பயிற்சி எடுக்க முடியாது. அங்கே நடக்கும்
போட்டிகளில் கலந்து கொள்வதும் சாத்தியமானதல்ல.
அதனால், அரசுப்
பள்ளி மாணவர்களுக்கு, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பது பெரிய இலக்காக
இருக்கும். அந்த வாய்ப்பு, இந்த ஆண்டு மறுக்கப்பட்டது, தமிழக மாணவர்களுக்கு
இழைக்கப்பட்ட அப்பட்டமான அநீதி!
'தகவல் பரிமாற்றம் சரியில்லை'
உள்ளிட்ட காரணங்களைக் கூறி, ஒருவரையொருவர் குற்றம் சாட்டும் அதிகாரிகளின்
மெத்தனத்தாலும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் அலட்சியப் போக்காலும், தேசிய
போட்டிகளில் நம் மாணவர்கள் பங்கேற்காமல் போனது, துரதிருஷ்ட மானது. இந்த
விஷயத்தில் தவறு செய்த அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டியது அவசியம்!