sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

வெறுப்பு அரசியலால் வெற்றி பெற முடியுமா?

/

வெறுப்பு அரசியலால் வெற்றி பெற முடியுமா?

வெறுப்பு அரசியலால் வெற்றி பெற முடியுமா?

வெறுப்பு அரசியலால் வெற்றி பெற முடியுமா?


PUBLISHED ON : செப் 08, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 08, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜி.சூர்ய நாராயணன், விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சுதந்திரத்திற்கு பின், அதிக காலம் நம் நாட்டை ஆண்ட கட்சி, காங்கிரஸ். ஆனாலும், பெரிதாக எதையும் சாதிக்கவில்லை.

தங்களிடம் உள்ள தலைவர்களை முன்னிறுத்தி, தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற நிலை வந்தபோது, பொருளாதார மேதை மன்மோகன் சிங்கை முன்னிறுத்தி, இரண்டு முறை ஆட்சியை பிடித்தது. ஆனாலும், அக்கட்சியினால், துணிச்சலான ஓர் முடிவையோ, ஊழல் அற்ற ஆட்சியையோ கொடுக்க முடியவில்லை.

இதுவே, காங்., கட்சியின் வீழ்ச்சிக்கு காரணம். ஆனால், அந்த உண்மையை இன்றளவும் புரிந்து கொள்ளாமல் இருப்பது தான் வியப்பு!

அதேநேரம், குஜராத் மாநிலத்தில் வளர்ச்சி அரசியலை காட்டிய பா.ஜ., கொஞ்சம் கொஞ்சமாக பிற மாநிலங்களில் தங்கள் ஆட்சியை நிலைநிறுத்தியது. அத்துடன், அக்கட்சியில், தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாகி விட முடியாது.

மேல்மட்டத்தில் இருந்து அடிமட்ட தொண்டர்கள் வரை கட்டுக்கோப்பான அமைப்பாக இருக்கிறது.

ஆனால், காங்., கட்சியிலோ, மாநிலம் தோறும் எவர் பல்லக்கு ஏறுவது என்பதில் தான் போட்டி இருக்கிறதே தவிர, பல்லக்கை சுமக்க எவருக்கும் விருப்பமில்லை.

அதற்கேற்ப, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் குடும்ப உறுப்பினர்களான சோனியா, ராகுல், பிரியங்கா போன்றோர், காங்., கட்சியை தங்கள் குடும்ப சொத்தாக நினைக்கின்றனரே தவிர, அதை ஜனநாயக அமைப்பாக எண்ணவில்லை.

இதோ, மூன்றாவது முறையும் பா.ஜ.,விடம் ஆட்சியை பறிகொடுத்தும், மக்கள் பிரச்னைகளை முன்னெடுத்து போராடுவது இல்லை.

பார்லிமென்ட்டில் காங்., - எம்.பி.,க்கள் தங்கள் தொகுதி பிரச்னைகளை பேசியதை விட, 'அதானி, அம்பானி' என்று முழங்கியதும், மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., மீது அவதுாறு பரப்பியதும் தான் அதிகம்.

இப்போதும் கூட பாருங்கள்... தேர்தல் கமிஷன் மீது குற்றம் சொல்லிக் கொண்டு புறப்பட்டு விட்டார், காங்., - எம்.பி., ராகுல்!

அக்குற்றச்சாட்டையாவது உருப்படியாக சொல்கிறாரா என்றால், அதுவும் இல்லை. போலி வாக்காளர் பெயர் பட்டியலை வைத்து, ஓட்டு திருட்டு செய்து பா.ஜ., தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது என்று கூறுகிறார். போலி வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் கமிஷன் நீக்கினால், அதற்கும் எ திர்ப்பு தெரிவிக்கிறார்.

ராகுலின் இந்த தெளிவற்ற நடவடிக்கைகளால் தான், காங்., தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்த மாநிலங்களில் கூட, இன்று கால் ஊன்ற முடியவில்லை.

வெறும் வெறுப்பு அரசியல் செய்து வந்தால் போதும், வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கிறார். வெறுப்பு, கசப்பை தான் தருமே தவிர, இனிப்பை தராது என்பதை ராகுல் எப்போது தான் உணர்ந்து கொள்ளப் போகிறாரோ!

ஓட்டை இழந்து விடாதீர்!


கு.அருணாச்சலம், கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை துவக்கி, இரண்டாவது மாநாட்டை நடத்தி முடித்த நடிகர் விஜய், தற்போது வரை அரசியல் கட்சித் தலைவராக தன்னை மாற்றிக் கொள்ளவில்லை.

மதுரை மாநாட்டில் அவர் பேசிய பேச்சை, மாற்றத்தை விரும்புவோரும், இரு திராவிடக் கட்சிகளின் மீது வெறுப்பில் உள்ளோரும், புதிய வாக்காளர்களும் ஏன் அக் கட்சியில் உள்ளவர்களே ரசிக்கவில்லை.

சினிமா பாணியில் பேசியது மட்டும் அல்லாமல், கட்சிக் கொடியை தலையில் கட்டியபடி, தன்னை தற்போது வரை சினிமா கதாநாயகனாகவே பாவித்து காட்சி அளித்தது ரசிக்கும்படி இல்லை.

பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் இருவரையும் அவர்களுக்கு உரிய மரியாதை இல்லாமல் பேசியது மட்டும் அல்லாமல், தன் கட்சி கொள்கைகள் என்னவென்று சரியாக சொல்லத் தெரியாமல், 'தி.மு.க., எதிரி; பா.ஜ., கொள்கை எதிரி' என்று சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளையாக பேசியது சலிப்பையையே ஏற்படுத்தியது.

தப்பும் தவறுமாக மோடியை விமர்சனம் செய்து, தனக்கு அரசியல் ஞானம் பூஜ்யம் என்பதை மதுரை மாநாடு வாயிலாக நிரூபித்துள்ளார்.

இன்னும் இரண்டு மேடைகளில் இப்படி பேசினால், இவருக்கு ஓட்டுப் போட நினைத்தவர்கள் கூட ஓட்டுப் போட மாட்டார்கள்.

பு தி தாக கட்சி ஆரம்பிக்கும் ஒவ்வொருவருமே முதல்வராக ஆசைப்படுவது இயல்பு தான். விஜயும் அதுபோன்று தான் ஆசைப்படுகிறார். ஆனால், கட்சி ஆரம்பித்த உடனேயே வெற்றி பெற்று, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் அளவுக்கு, அவர் ஒன்றும் ஆந்திராவின் என்.டி.ஆர்., இல்லையே!

ஆந்திராவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, கட்சி ஆரம்பித்து காணாமல் போனார். அதனால், 2026 தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டு, விஜய் தன் சுயபலத்தை நிரூபிக்க வேண்டும்.

தேர்தல் முடிவுக்கு பின், கட்சியை எப்படி வழி நடத்துகிறாரோ, அதற்கேற்ப தான் அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெற முடியும்.

அதற்குமுன், அரசியல் பாடத்தை நன்கு படித்து விட்டு மேடை ஏற வேண்டும். சினிமா வசனத்தை மேடைகளில் பேசுவதால் மட்டும் ஓட்டு விழுந்து விடாது என்பதை புரிந்து, செயலாற்ற வேண்டும்!

வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்!


ஜெ.மனோகரன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 2021 சட்டசபை தேர்தல் அறிக்கையில் அளித்த, 505 வாக்குறுதிகளில், 373 வாக்குறுதிகளை, தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை என்று, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். அவருடைய குற்றச்சாட்டு ஒட்டு மொத்த தமிழக மக்களுடைய ஆதங்கத்தின் பிரதிபலிப்பு என்றால் மிகையில்லை!

குறிப்பாக, 3.50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, மாதம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கிடும் முறை, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், காஸ் சிலிண்டருக்கு, 100 ரூபாய் மானியம் உட்பட பல்வேறு வாக்குறுதிகள் அடக்கம்!

எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது ஒரு நிலைப்பாடு; முதல்வராக இருக்கும் போது வேறொரு நிலைப்பாடு என்பது சரியல்ல.

சமீபத்தில் கூட பணி நிரந்தர வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்திய துாய்மை பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.

கொரோனா காலத்தில் தங்கள் உயிரை பணயம் வைத்து பணி செய்தவர்கள் இவர்கள்!

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவர் என்று நம்பிக்கையுடன் ஓட்டளித்தவர்களை, இன்று ஆளும் தி.மு.க., அரசு ஏமாற்றியுள்ளதால், மக்கள் கடும் அதிருப்தியுடன் உள்ளனர் என்பது நிதர்சனம்.

எனவே, 'தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம்' என்று முதல்வர் பொய்யுரைப்பதை விடுத்து, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

இதை முதல்வர் செய்ய மறுத்தால், 2026 சட்டசபை தேர்தல் பிரசாரம் செய்ய வரும் தி.மு.க.,வினரிடம் மக்கள் கட்டாயம் கேள்வி கேட்பர். முன்பு போல் மக்களை அவ்வ ளவு எளிதில் கழகத்தினரால் ஏமாற்றிவிட முடியாது!






      Dinamalar
      Follow us