/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
நீதிமன்றங்களின் நேரத்தை மிச்சப்படுத்தலாமே?
/
நீதிமன்றங்களின் நேரத்தை மிச்சப்படுத்தலாமே?
PUBLISHED ON : நவ 19, 2024 12:00 AM

கே.என்.ஸ்ரீதரன், சிட்னி, ஆஸ்திரேலியாநாட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும், மாறி மாறி ஒருவர் மீது ஒருவர், அவதுாறு வழக்கு போடுகின்றனர். 'உங்கள் வழக்குகளையே விசாரித்துக் கொண்டிருந்தால் போதுமா? வேறு வழக்குகள் இல்லையா?' என்று, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
'நாட்டு நலனில் அக்கறை இன்றி, ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டேஇருந்தால், அடுத்த தலைமுறை எப்படி நடந்து கொள்ளும்...' என்றும் கவலை தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த பிரதமர் மோடியையும், அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலையையும், மற்ற கட்சியினர் எப்படியெல்லாம் மேடைகளில் தரக்குறைவாக பேசுகின்றனர், அருவருக்கத்தக்க வகையில் கேலிச் சித்திரம் வரைகின்றனர் என்று, எல்லாருக்கும் தெரியும். இதையெல்லாம் எதிர்த்து வழக்கு போட்டால்,அதன் எண்ணிக்கை பல ஆயிரங்களை தாண்டும்.
ஆட்சிக்கு வரும் வரை, 'ஜனநாயகம், பேச்சுரிமை, எழுத்துரிமை' என்று பேசுவதும்,ஆட்சிக்கு வந்த பின், மாற்று கருத்து சொல்பவர்களை சிறையில் அடைப்பதும், அவர்கள் மீது வழக்கு போடுவதும் தமிழகத்தில் சகஜம். இப்படிப்பட்ட நியாயமற்ற நடவடிக்கைகள், நீதிமன்றத்தின்வேலைப் பளுவை அதிகரிக்கின்றன.
ஆர்.எஸ்.எஸ்., இயக்கம், ஆண்டுதோறும்விஜயதசமியை ஒட்டி, ஊர்வலம் நடத்த, தமிழக அரசிடம் அனுமதி கேட்கும்; தி.மு.க.,அரசு, ஒவ்வொரு ஆண்டும் அனுமதி மறுக்கும். பிறகு நீதிமன்றம் தலையிட்டு, இந்த விவகாரத்தை, அவசர வழக்காக கருதி அனுமதி வழங்கும். இதனால் அன்று பட்டியலில் இடம்பெறும் மற்ற வழக்குகளின் விசாரணை தள்ளி போகும். தேவையா இது? ஜனநாயக உரிமையை, அரசு ஏன் மறுக்க வேண்டும்?
நீதி வேண்டி பாமர மக்கள் தொடுத்த வழக்குகள் ஆயிரக்கணக்கில் நிலுவையில் உள்ளன என்பதை, அரசியல் கட்சிகள் நினைவில் கொள்ள வேண்டும்.
தேவையற்ற அவதுாறு வழக்குகள் குறைந்தால், நீதிமன்றங்களின் நேரம் மிச்சப்படும்.
சீமானிடமிருந்து கொத்து கொத்தாக கழள்கின்றனரே!
எஸ்.செபஸ்டின்,
சிவகாசி, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்:
'நாம் தமிழர்' கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்கட்சியை
கருணாநிதி,ஜெயலலிதா காலத்திலேயேதுவங்கியதாக பெருமை பேசுகிறார். ஆனால்
இவருக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட கட்சிகள், பார்லி.,யிலும், சட்டசபையிலும்
அமர்ந்து விட்டன.
இவரது கட்சியினர் ஒருவர் கூட, இந்த சபைகளுக்கு
உள்ளே செல்ல முடியவில்லை., கட்சியின்வளர்ச்சி, 8.5 சதவீதத்தைத்தாண்டவில்லை.
இந்த வளர்ச்சி மேலும் கூடுமா அல்லது குறையுமா என்றும் தெரியவில்லை.
அப்படியே வளர்ந்தாலும், ஆட்சியைப் பிடிக்குமா என்பதும் சந்தேகமே. தேர்தலில் டிபாசிட் கிடைத்தால் நிம்மதி; இல்லையேல், 'அம்பேல்' தான்!
தன்
பாதுகாப்பிற்காகவும்,பொழுதுபோக்கிற்காகவும்தான் சீமான் கட்சி
நடத்துகிறார். தெரியாமல் தான் கேட்கிறோம்... ஏன் இவரதுஒரு தொண்டர் கூட,
'ஏண்ணே... நாம ஆட்சிக்குவர்றது எப்போண்ணே...'என கேட்பதே இல்லையா?இறுமாப்பு
பேச்சு பேசும் சீமானை, இனி யாரும் கூட்டணியில் கூட சேர்த்துக் கொள்ள
மாட்டார்கள் போலிருக்கிறது.
சட்டசபை தேர்தலுக்குஇன்னும் இருக்கும்
ஒன்றரை ஆண்டுகளில்,கட்சியை வெட்டு ஒண்ணு,துண்டு ரெண்டு என, மற்ற கட்சிகள்
ஆக்கினாலும்ஆச்சரியப்படுவதற்குஇல்லை. ஏனெனில், பொதுமேடைகளில்
வில்லங்கமாகவும், வீரமாகவும் பேசுவதாக நினைத்து, பழம்பெரும் தலைவர்களை
வம்புக்கிழுப்பதை, யாருமே விரும்பவில்லை.
இளைஞர்கள் தன் பின்
நிற்பதாகச் சொல்கிறார். விஜய் தலையைக் கண்டபிறகு, கொத்து கொத்தாகஇவர்
கட்சியிலிருந்து பலரும் இடம் பெயர்ந்து, விஜயுடன் ஐக்கியமாகிக்
கொண்டிருக்கின்றனர்.
இனியும் ஒன்றும் கெட்டுவிடவில்லை... விவேகம், புன்சிரிப்பு, நல்பேச்சு ஆகியவற்றை கைக்கொண்டால் சீமானுக்கு ஓட்டு விழும். செய்வாரா?
நீங்கள் தயா ரா முதல்வரே?
ப.ராஜேந்திரன்,
சென்னையிலிருந்து அனுப்பிய,'இ -மெயில்' கடிதம்: முதல்வர்ஸ்டாலினின்
சமீபத்தியபேச்சு, குதுாகலிக்கும்அவரது மனதைக் காட்டுகிறது;
மக்களின்துயரங்களைப் பற்றி அவர் கவலைப்படவில்லை.
'இந்த ஆட்சி மீது
வைக்கப்படும் விமர்சனங்களுக்கு, முதல்வர் என்ற பொறுப்பில் நின்று, பதில்
சொல்ல வேண்டிய அவசியம் இல்லாதபடி, ஆட்சியின் தன்மையை மக்களின்
முகமலர்ச்சியே பதிலாகச் சொல்லி விடுகிறது' என்கிறார்.
மின்
கட்டணம், சொத்துவரி, பதிவுக் கட்டணம், வீட்டு வரி, குடிநீர் வரி உயர்வு
மற்றும் வாகன வரி உயர்வு போன்ற கட்டண உயர்வுகளை எந்த மக்கள்,
முகமலர்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர்?
மதுவுக்கு அடிமையானவர்களால்
தான் நாங்கள் இடைத்தேர்தலில் ஜெயித்தோம் என்கின்றனர் உங்கள் மந்திரிகள்;
நீங்கள் போதையின் பாதைக்கு யாரும் போக வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டு
கொள்கிறீர்கள். மதுவால் சீரழிந்துகொண்டிருக்கும் குடும்பங்களில் எப்படி
முகமலர்ச்சி இருக்கும்?
ஆசிரியர்களின், 31 அம்ச கோரிக்கைகளை
வலியுறுத்தி, டிட்டோ ஜாக் ஆசிரியர் கூட்டமைப்பினர், பள்ளிக்கல்வி துறையின்
டி.பி.ஐ., வளாகத்தை முற்றுகையிட்டு போராடுகின்றனர்
தங்களது
கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் சத்துணவு
ஊழியர்கள், 'அரசு எங்களை வஞ்சிக்கிறது' என்று குமுறுகின்றனர்
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஊரக வாழ்வாதார இயக்கப்
பணியாளர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, உண்ணாவிரதப்
போராட்டம்நடத்துகின்றனர்
ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி, பெருந்திரள் முறையீடுபோராட்டம் நடத்துகின்றனர்
மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. சென்னையில், மருத்துவர் கத்தியால்
குத்தப்பட்ட சம்பவத்தால் பாதுகாப்பு கோரி போராடுகிறது மருத்துவர் சங்கம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், 'புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து
பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை மூன்றரை
ஆண்டுகள் கழிந்தும் நிறைவேற்றவில்லையே' என்று போராடுகிறது.
மேற்கண்ட விஷயங்களில் நீங்கள் தீர்வு கண்டுவிட்டால், முகமலர்ச்சிஉடன் நின்று உங்கள் முன்னால், 'போஸ்' கொடுப்போம். ரெடியா நீங்கள்?

