/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
கள்ள ஓட்டு போடுவதை நியாயப்படுத்தலாமா?
/
கள்ள ஓட்டு போடுவதை நியாயப்படுத்தலாமா?
PUBLISHED ON : அக் 31, 2025 12:00 AM

கே.என்.ஸ்ரீதரன், பெங்களூருவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்பது ஆட்சியைப் பிடிக்க பா.ஜ., - அ.தி.மு.க.,  செய்யும் சூழ்ச்சி என்றும், தேர்தல் ஆணையம் பா.ஜ., அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார், தமிழக முதல்வர் ஸ்டாலின்.
'திருமங்கலம் பார்முலா' என்றால் என்ன என்பதை உலகுக்கு உணர்த்திய, தி.மு.க., தேர்தல் ஆணையம் குறித்து இவ்வாறு கூறுவது வியப்பல்ல!
சரியான வாக்காளர் பட்டியல் இருந்துவிட்டால், வரப்போகும்  தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற முடியாது என்ற சந்தேகம் முதல்வருக்கு வந்து விட்டது போலும்; அதுதான், தேர்தல் ஆணையத்தின் மீது குற்றஞ்சாட்டுகிறார்!
இறந்து போனவர்கள் மற்றும் வேறு நகரங்களுக்கு குடிபெயர்ந்தவர்களின் பெயர்களை நீக்காமல், வாக்காளர் பட்டியல் இருந்தால், அது மொத்த வாக்காளர்களின் சரியான எண்ணிக்கையை எப்படி பிரதி ப லிக்கும்? அதேபோன்று, மொத்த வாக்காளர் களில் ஓட்டளித்தவர்களின் சதவீதம் குறித்த கணக்கும்  தப்பாகிவிடுமே!
இதெல்லாம் முதல்வருக்கு தெரியாதா?
ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் தகுதியா ன புதிய வாக்காளர்களை சேர்ப்பதும்,  இறந்து போனவர்களின் பெயர்களை நீக்குவதும், இரட்டை  வாக்காளர்களை  முறைப்படுத்துவதும் தேர்தல் ஆணையத்தின் கடமை.
பீஹார், அசாம் போன்ற மாநிலங்களில்  சட்ட விரோதமாக  குடியேறிய சிறுபான்மை யினர் மற்றும் வங்கதேச அகதிகள் அதிகம். சமீபத்தில் பீஹாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை உச்ச நீதி மன்றமே தடை செய்யவில்லை.
அப்படியிருக்கும்போது, 'சிறுபான்மை மக்களின் ஓட்டுரிமையை பறிக்கும் முயற்சி இது' என்று, எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஸ்டாலின் கூறுகிறார்?
நேர்மையாக, நியாயமாக தேர்தலை நடத்துவது தேர்தல் கமிஷன்  பொறுப்பு என்றால், அதற்கு  ஒத்துழைப்பது, அரசியல் கட்சிகளின் கடமை.
எனவே,  கள்ள ஓட்டு போடுவதை நியாயப்படுத்தாமல்,  வாக்காளர்களுக்கு பணமும், பரிசு  பொருட்களும் கொடுக்காமல், தி.மு.க., முதலில் தேர்தலை சந்திக்கட்டும்; அதன்பின், தேர்தல் ஆணையத்தின் மீது கு ற்றஞ்சாட்டலா ம்!
மக்கள் என்ன கேனையர்களா? ந.கலையமுதன், மணப்பாறை,  திருச்சி மாவட்டத்தி 
லிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., ஆட்சியில் பாலாறும், 
தேனாறும்  ஓடுவது போன்று, ஆட்சியாளர்கள் விளம்பரங்கள் வாயிலாக ஒரு மாயையை 
கட்டவிழ்த்து கொண்டுஇருக்கின்றனர்.
இந்நிலையில், 'விழுப்புரம் 
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் டீன் குடியிருப்பில் தண்ணீர் 
தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது' என்று உண்மையை போட்டுடைத்துள்ளார்,
 விக்கிரவாண்டி தொகுதி  தி.மு.க., -- எம்.எல்.ஏ., சிவா.
பல 
மாவட்டங்களில் நடைபெற்று வந்த மேம்பால பணிகள், வரும் சட்டசபை தேர்தலை 
முன்னிறுத்தி, அவசர அவசரமாக முடிக்கப்பட்டு திறப்பு விழாவும் கண்டுள்ளன.
அதேநேரம், மேம்பாலங்களுக்கு கீழ் உள்ள  சுரங்கப்பாதைகளில் மழைநீர் வடியவோ, கடந்து செல்லவோ சரியான கட்டுமானம் அமைக்கப்படவில்லை.
இதனால், தற்போது பெய்து வரும் பருவமழையால், இச்சுரங்கப் பாதைகளில் மழைநீர்
 கடல் போல தேங்கிவிடுகிறது. நீரை வெளியேற்றுவதற்கு பதில், அப்பாதையை  
அடைத்து விடுகின்றனர், நகராட்சியினர்.
இதுதவிர, மாவட்டத்தின் பல இடங்களில் முறையான தார் சாலைகள்அமைப்பதற்கு பதில், பட்டி, டிங்கரிங்வேலைகள் தான் செய்துள்ளனர்.
இன்னும் சில இடங்களில், அதைக்கூட செய்யாமல், சாலைகள் பல்லிளித்து கிடக்கின்றன.
இதுகுறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினால், அவர்களை சமூக விரோதிகள் போல் பார்க்கின்றனர், தி.மு.க., உடன்பிறப்புகள்.
அதேநேரம், பழைய பென்ஷன் திட்டம், பூரண மதுவிலக்கு, பெட்ரோல் - டீசல், 
சிலிண்டர் விலை குறைப்பு என ஏகத்துக்கும், பொய் வாக்குறுதிகளை அள்ளிவிட்டு,
 ஆட்சிக்கு வந்த தி.மு.க., அதில், ஒன்றைக் கூட நிறைவேற்றாமல், சட்டசபை 
தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், 90 சதவீத வாக்குறுதிகளை 
நிறைவேற்றி விட்டதாக புருடா விடுகிறது!
அதுசரி... கேட்கிறவன் கேனையனாக இருந்தால், கேழ்வரகில் நெய் வடியத் தானே செய்யும்!
ஆலைகளுக்கு இழப்பீடு வழங்குமா? கார்த்திக் குமார், திருச்சி யில் இருந்து 
அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நெல் கொள்முதல் செய்யும் அரசு, நெல்லின் 
ஈரப்பதம், 17 சதவீதத்திற்கு மேல் இருந்தால், தள்ளுபடி விலையில் தான் 
கொள்முதல் செய்யும்.
ஆனால், இந்தாண்டு பருவமழையால், கொள்முதல் 
நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகள் நனைந்த 
விவகாரம், அரசியல் ஆக்கப்பட்டுள்ள நிலையில், நெல் கொள்முதல் செய்ய ஏற்ற 
ஈரப்பதத்தை, 17 ல் இருந்து, 22 சதவீதமாக உயர்த்த மத்திய அரசிடம் கோரிக்கை 
விடுத்துள்ளது தமிழக அரசு.
விவசாயிகளின் நலன் கருதி, இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம் தான்.
அதேநேரம், சேதமடைந்த நெல்லுக்கான நஷ்டம் யார் தலையில் விடிகிறது என்பது குறித்து, எவரும் சிந்திப்பதில்லை.
ஈரமான, சேதமடைந்த நெல், தனியார் அரவை முகவர்களுக்கு அனுப்பி 
வைக்கப்படுகிறது.  ஈரமான நெல் மிகுந்த எடை குறைவை ஏற்படுத்துவதுடன்,  
சேதமடைந்த நெல் பழுப்பு நிற அரிசியாகி ஆலைகளுக்கு பெருத்த இழப்பை 
ஏற்படுத்தும். இதற்காக, ஆலைகளுக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படுவது இல்லை.
அரசு கொள்முதல் செய்த நெல்லின் எடைக்கு ஏற்ப,  அரசுக்கு அரிசி சென்று 
விடும். விவசாயிகளுக்கு அவர்கள் உற்பத்தி செய்த நெல்லுக்கான பணம் கிடைத்து 
விடும். ஆனால், சேதமடைந்த தானியங்களால்,  அரிசி ஆலைகளுக்கு மட்டும் கஜானா 
காலியாகும்!
மேலும், அரசு வழங்கும் நெல்லுக்கு, 68 சதவீத அரிசியை 
ஆலைகள் அர சுக்கு திரும்பி வழங்க வேண் டும். இதில், கருப்பு அரிசி, 4 
சதவீதம் வரை இருக்கலாம் என்பது அரசு விதி.
ஆனால், தற்போதைய  அரசு,
 கருப்பு அரிசியை நீக்கி, 68 சதவீத அரிசியை வழங்க நிர்பந்திப்பதால், 
ஆலைகள், 4 சதவீத அரிசி இழப்பையும் ஏற்கவேண்டிய நிலை உள்ளது.
இத்தகைய அவல நிலையில்,  அரவை முகவர்கள் விழிபிதுங்கி, செய்வது அறியாது தவிக்கின்றனர்.
விவசாயிகளின் நலன் பேணும் அரசு, அரவை ஆலைகளின் நலனையும் கருத்தில் வைத்து இழப்பீடு வழங்கலாம் அல்லவா?

