தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ நாட்டுப்பற்று குறித்து பாடம் நடத்தலாமா?

 நாட்டுப்பற்று குறித்து பாடம் நடத்தலாமா?

 நாட்டுப்பற்று குறித்து பாடம் நடத்தலாமா?

PUBLISHED ON : பிப் 25, 2026 03:18 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 25, 2026 03:18 AM

Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எஸ்.கண்ணபிரான், விருதுநகரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, மே.வங்க அரசின் குறைகளை நிவர்த்தி செய்யவில்லை. இவ்விவகாரத்தில் தேர்தல் கமிஷனை முறையாக செயல்பட வைக்க, உச்ச நீதிமன்றத்தின் குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் அவசியம். எனவே, உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார், முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம்.

பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக வந்து மே.வங்கத்தில் குடியேறி இருப்பவர்களை வெளியேற்றக் கூடாது; அவர்களையும் இந்தியர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்பது தான், மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கொள்கை.

அதற்காகத் தான், அவர்களுக்கு ரேஷன் கார்டும் கொடுத்து, வாக்காளர் பட்டியலிலும் பெயரையும் பதிவு செய்துள்ளது, அவரது அரசு.

ஊடுருவல்காரர்களின் ஓட்டுகளால் தான், மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வெற்றிகளை குவிக்கிறது.

அவர்களை விரட்டியடித்து விட்டால், முதலுக்கே மோசம் வந்து விடும் அல்லவா?

அதற்காகத் தான் மம்தா தவியாய் தவிக்கிறார்; சிதம்பரமும் வக்காலத்து வாங்குகிறார்.

எதிர்க்கட்சியாக இருக்கும் போதே, ஊடுருவல்காரர்களுக்கு இவ்வளவு வக்காலத்து வாங்குகின்றனர் என்றால், காங்., ஆளுங்கட்சியாக இருந்த போது, ஓட்டுக்காக சிவப்பு கம்பளம் அல்லவா விரித்து வைத்திருந்திருப்பர்!

இவர்கள் தான் நாட்டுப்பற்று குறித்து பாடம் நடத்துக்கின்றனர். காலக் கொடுமை!

lll

ஓட்டு போடாவிட்டால் தண்ணீர் இல்லை! பொ.ருக்மணி, பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நெல்லை மாவட்டம், ராதாபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்டது, கூடங்குளம் கிராமம். பெரும்பாலும் இங்கு மழை பெய்வதே கிடையாது. இதனால், கடந்த 50 ஆண்டுகளாகவே இங்குள்ள மக்கள் குடிநீருக்காக தவித்து வருகின்றனர்.

நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து, கடல் நீர் உட்புகுந்ததால் ஆழ்துளை கிணறுகள் வாயிலாக கிடைக்கும் நீரும், பயன்படுத்த முடியாத அளவுக்கு உப்பு தன்மையுடன் உள்ளது.

தற்போது, இரு குடிநீர் திட்டங்களின் வாயிலாக, கூடங்குளத்திற்கு தண்ணீர் கிடைத்த போதிலும், அது குடிநீர் தேவைக்கு போதுமானதாக இல்லை.

இந்நிலையில், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், வள்ளியூர் -- ராதாபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில், கூடங்குளத்தையும் இணைக்க முதலில் உத்தரவிடப் பட்டிருந்தது.

ஆனால், என்ன நடந்ததோ, எவர் செய்த சதியோ கூடங்குளம் ஊராட்சியை அத்திட்டத்திலிருந்து நீக்கிவிட்டனர்.

அதனால், கூட்டு குடிநீர் திட்டத்தில் கூடங்குளத்தையும் இணைக்க வேண்டும் என, மக்கள் போராடி வருகின்றனர்.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட்ட தற்போதைய சபாநாயகர் அப்பாவுவிற்கு, கூடங்குளம் பகுதியில் சொல்லிக் கொள்ளும்படி ஓட்டுகள் கிடைக்கவில்லை. இதனாலேயே தற்போது, கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து கூடங்குளத்தை ஒதுக்கியுள்ளனர்.

இந்நாட்டுக்காகவே உழைத்து, பொற்கால ஆட்சி செய்தவர் காமராஜர். அவரது சொந்த தொகுதி மக்களே அவரை தோற்கடித்த போது, கொஞ்சம் கூட வருந்தாமல், மக்களை வசைபாடாமல், 'நான் தோற்றாலும், ஜனநாயகம் வென்றதை நினைத்து மகிழ்கிறேன்' என்று கூறினார், காமராஜர்.

அப்படிப்பட்ட உத்தம தலைவர்கள் வாழ்ந்த மண்ணில் தான், அதிக ஓட்டுகள் கிடைக்காத காரணத்தால், கூடங்குளம் மக்கள் தற்போது பழிவாங்கப் பட்டுள்ளனர்.

ஒருவர் தேர்தலில் வெற்றி பெறும் வரை தான் அரசியல்வாதி; வென்று விட்டால், மக்கள் பிரதிநிதி. ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமல்ல; ஓட்டு போடாதவர்களுக்கும் அவர் தான் மக்கள் பிரதிநிதி.

எனவே, அனைத்து தரப்பு மக்களையும் சரிசமமாக நடத்த வேண்டியது மக்கள் பிரதிநிதியின் கடமை. ஆனால், வாத்தியாராக இருந்து அரசியல்வாதியான அப்பாவு, தன் கடமை மறந்து வன்மத்துடன் செயல்படுகிறார்.

இப்பிரச்னைக்கு முதல்வர் தீர்வு கூறுவாரா இல்லை அப்பாவு வழியை அவரும் பின்பற்றுவாரா?

lll

தடுக்க முடியாது! எம்.கலைவாணி, அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், 4.5 லட்சம் கோடியாக இருந்த தமிழகத்தின் கடன், இன்று, 10.62 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தமிழகத்தை அதிக கடன் வாங்கும் மாநிலமாக மாற்றி பெருமை சேர்த்துள்ளது, திராவிட மாடல் அரசு.

இதன் காரணமாக, பொருளாதார வளர்ச்சியின்மை, நிதி நெருக்கடி, வட்டிச்சுமை, வளர்ச்சிப் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.

தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்றபோது தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, 2021 -ஜூன் மாதம் உயர்மட்ட பொருளாதார ஆலோசனைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அதில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டப்லோ, பொருளாதார நிபுணர்கள் அரவிந்த் சுப்பிரமணியன், ஜீன் ட்ரேஸ், எஸ்.நாராயணன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இக்கமிட்டி என்னவாயிற்று என்றே தெரியவில்லை.

நிர்வாகத் திறமையின்மையும், தேவையற்ற இலவசங்களை வாரி வழங்கியதும் தான், இத்தகைய நிதி நெருக்கடிக்கு காரணம் என்பது பாமரனுக்குக்கூட தெரியும்.

வளர்ச்சியடைந்த ஒரு நாட்டில் கல்வியும், மருத்துவமும் மட்டும்தான் மக்களுக்கு இலவசமாகக் கிடைக்க வேண்டும். இங்கு, அந்த இரண்டும் தனியார் கைகளில் சிக்கி அவர்களை வளம் கொழிக்கச் செய்துகொண்டிருக்கிறது.

அதேநேரம், அரசுக்கு நேரடி வருவாய் ஈட்டித்தரக்கூடிய மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறைகள் இலவச பேருந்து பயணம், இலவச மின்சார திட்டங்களால் கடன்சுமையில் தள்ளாடுகின்றன.

மாநிலத்தின் மொத்த உற்பத்தியில், 28.7 சதவீதம் கடன் பெறலாம் என்பது தான் கடனுக்காக உச்ச வரம்பு. தமிழக அரசோ, தற்போது, 26.43 சதவீதம் கடன் வாங்கி, அந்த உச்ச வரம்பை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இதுகுறித்து கேள்வி எழுப்பினால், மத்திய அரசின் கடனை, மோடி பலமடங்காக உயர்த்தவில்லையா என்று எதிர் கேள்வி கேட்கிறார், நிதியமைச்சர்.

குற்றவாளியைப் பார்த்து, 'ஏன் அந்தக் குற்றத்தைச் செய்தாய்?' என்று நீதிபதி கேட்டால், 'என்னைவிட பெரிய குற்றம் செய்தவர்களை நீங்கள் ஏன் கேட்கவில்லை?' என்று நீதிபதியைப் பார்த்து திருப்பிக் கேட்டானாம். அமைச்சரின் பேச்சும் அதுபோலத்தான் இருக்கிறது.

தி.மு.க., ஆட்சி தொடர்ந்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகம் திவாலாவதை எந்தக் கொம்பனாலும் தடுக்கமுடியாது!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

      Dinamalar
      Follow us