PUBLISHED ON : செப் 19, 2025 12:00 AM

ஆர்.ராசாமணி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளை ஒழுங்கு படுத்துவதற்கு விதிகளை ஏற்படுத்த தலைமை தேர்தல் கமிஷனுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
'போலி அரசியல் கட்சிகள், ஜனநாயகத்துக்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன. அரசியல் என்பது பொதுமக்களுக்கு செய்யப்படும் ஒரு சேவை. பொது நலனை சார்ந்தது. அரசியல் கட்சி களின் செயல்பாட்டில் வெளிப்படை தன்மை மற்றும் பொறுப்பு அவசியம்.
'எனவே, அரசியல் கட்சிகளுக்கு என விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை தலைமை தேர்தல் கமிஷன் உருவாக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின் வரம்பிற்குள், அரசியல் கட்சிகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை, வலுவான ஜன நாயக செயல்பாட்டிற்கும் வழிவகுக்கும்...' என, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார், அஸ்வினி குமார் உபாத்யாயா என்ற வழக்கறிஞர்.
நாடு சுதந்திரம் அடைந்து, 80 ஆண்டுகள் நெருங்கும் நிலையில், இப்போது தான் அரசியல் கட்சிகள் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதையே கண்டுபிடித்துள்ளனர்.
அரசும், தேர்தல் கமிஷனும் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு விஷயத்துக்கு, வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடுக்க வேண்டியி ருக்கிறது என்றால், அந்த அளவு உள்ளது, நம் நாட்டின் ஜனநாயகம்!
நல்ல வேளை இந்த மனுவை, நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜோஸ்மால்யா பாக்சி அமர்வு தள்ளுபடி செய்து, மனுதாரருக்கு இரண்டு லட்சமோ, ஐந்து லட்சமோ அபராதம் விதித்து உத்தர விடாமல், விசாரணைக்கு ஏற்று, மத்திய அரசு, தேர்தல் கமிஷன், தேசிய சட்ட கமிஷன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
அஸ்வினி குமார் உபாத்யாயா சுட்டிக் காட்டியிருக்கும் விஷயங்கள் குறித்து விசாரணை செய்து முடிவுக்கு வருவது ஒரு புறம் இருக்கட்டும்...
அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதி என்ற பெயரில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வாரி வழங்கி, வாக்காளர்களை ஏமாற்றி, ஓட்டுகளை கவர்ந்து, ஆட்சியில் அமர்ந்தபின், வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ஓட்டு போட்டவர்களை ஏமாற்று வதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்குமா?
அத்துடன், 'நீட்' தேர்வு ரத்து, மாதா மாதம் மின் கட்டணம், மகளிருக்கு இலவச பஸ் பாஸ், மாணவியருக்கு மொபைல் போனுக்கு மானியம், இளைஞர்கள் 'ஜிம்'முக்கு செல்ல கட்டணம், தாலிக்கு தங்கம், பட்டுப்புடவை, பட்டு வேட்டி, உரிமைத்தொகை, எரிவாயு மானியம், காலைச் சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி, சரக்குக்கு தண்ணீர் மற்றும் சைடு டிஷ் இலவசம் என, இஷ்டத்திற்கு வாக்குறுதிகளை வழங்காமல், கல்வி, நாட்டு முன்னேற்றம், தேசப் பாதுகாப்பு போன்ற முக்கியமானவை குறித்து மட்டுமே வாக்குறுதி வழங்க வேண்டும் என, உத்தரவிடுமா?
மேலும், அரசியல் என்பது ஒரு சேவை. அச்சேவைக்காக அரசிடமிருந்தோ, பிற நிறுவனங்களில் இருந்தோ, சம்பளமோ, சிட்டிங் அலவன்ஸோ, ஸ்டாண்டிங் அலவன்ஸோ, இதர படிகளோ, இன்ன பிற சலுகைகளோ பெறக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிடுமா?
அப்படியொரு உத்தரவை, உச்ச நீதிமன்றம் பிறப்பித்தால், அது, அஸ்வினி குமார் தாக்கல் செய்திருக்கும் மனுவுக்கு அர்த்தம்.
அப்படி பிறப்பிக்க முடியாதென்றால், மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது, தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்புவது என, நீதிமன்றம் சும்மா, வேடிக்கை காட்ட வேண்டாம்!
அரைத்த மாவை அரைத்தால் வெற்றி பெற முடியுமா? எ. பன்முகன், கோவை யில்
இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அர சியல்வாதியாக அவதாரம்
எடுத்துள்ள நடிகர் விஜய், கட்சி ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளில், இரு
மாநாடுகளை ஓரளவு வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். ஆனால், இம்மாநாடுகள்
தன் ரசிகர் பட்டாளத்துடன், ஒரு மாபெரும் திரைப்பட விழா போல்தான் அரங் கேறி
உள்ளது.
இக்கூட்டங்களில் விஜய் தன் ரசிகர்களை கவர, ஏற்கனவே பல
கட்சிகள் முன்னெடுத்த, 'குடும்ப ஆட்சி எதிர்ப்பு, சனாதன ஒழிப்பு,
ஈ.வெ.ரா.,வின் சமூக நீதி, திராவிட சித்தாந்தம்' போன்ற பழைய பல்லவியையே
பாடியுள்ளார்.
இதில், தேர்தல் வரை, வார இறுதி கூட்டங்கள் நடத்த உள்ளாராம்... அதிலும், இதே பல்லவியை தான் பாட போகிறாரோ என்னவோ!
இந்த அரித பழசான டயலாக்கை சொல்வதற்குத் தான், அ.தி.மு.க., - காங்கிரஸ் என
இன்னும் பல கட்சிகள் உள்ளனவே... இதில், இன்னொரு கட்சி எதற்கு?
மாறாக, கீழ்க்கண்ட பிரச்னைகள் குறித்து பேசலாமே...
ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊழல்களும்
சுரண்டல்களும் தமிழகத்தின் பட்ஜெட் செலவினத்தில், 40 சதவீ தத்தை சாப்பிட்டு
விடுகின்றன .
இதை முழு தும் நிறுத்தினா ல், ஐந்து ஆண்டுகளில், 40 சதவீத வளர்ச்சி பணிகள் அதிகம் நடைபெற்று, உள் கட்டுமானம் வலுப்பெறும்.
தமிழகத்தை தொழில் வளர்ச்சிக்கு உகந்த மாநில மாக மாற்ற, தென்
மாவட்டங்களில் தொழிற்பேட்டைகள் அமைத்து, பன்னாட்டு நிறுவனங்கள் சுலபமாக
தொழில் துவங்கு ம் முறைகளை கொண்டு வருவது குறித்து பேசலாம்.
வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயித்து, சேமிப்பு கிடங்குகள்
ஏற்படுத்துவதுடன், தனி விவசாய மண்டலங்கள் ஏற்படுத்தி, விவசாய நிலங்களை
பாதுகாப்பது குறித்து விளக்கலாம்.
பிற்படுத்தப்பட்டோர் நலனை
பாதுகாக்க, வெறும் சட்டங்களை மட்டும் இயற்றாமல், குற்றங்களுக்கு உடனடியாக
கடும் தண்டனை விதிப்பதும், பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் முன்னேற்றத்திற்காக,
தனியாக சிறு தொழில் பயிற்சி கூடங்கள் அமைப்பதன் அவசியம் குறித்தும்
பேசலாம்.
மகளிருக்கு இலவச திட்டங்கள் வாயிலாக மீனைக் கொடுக்காமல்,
மீன் பிடிக்க கற்றுக்கொடுக்கும் விதமாக மகளிர் தொழில் துவங்க சிறப்பு
திட்டங்களை அறிவிக்கலாம்.
அதை விடுத்து, பழைய பல்லவியையே
பாடிக்கொண்டிருந்தால், ர சிகர்கள் வேண்டுமானால் பாராட்டுவர்.
நடுநிலையாளர்கள் எரிச்சல் தான் அடைவர்.
எனவே, அடுத்து வரும்
நாட்களில் தெளிவான ஒரு புதிய கொள்கையின் வாயிலாக, விஜய் அரசியல் மாற்றத்தை
ஏற்படுத்தப்போகிறாரா அல்லது இது போன்று அரைத்த மாவையே அரைத்து, அரசியலில்
தோற்ற நடிகர்களின் பட்டியலில் சேரப்போகிறாரா என்பதை பொறுத்திருந்து
பார்ப்போம்!