தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ நாகரிகம் முக்கியம் எம்.எல்.ஏ.,க்களே!

 நாகரிகம் முக்கியம் எம்.எல்.ஏ.,க்களே!

 நாகரிகம் முக்கியம் எம்.எல்.ஏ.,க்களே!

2


PUBLISHED ON : ஆக 24, 2026 12:20 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 24, 2026 12:20 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எஸ்.ஏ.ஸ்ரீனிவாச சர்மா, ைஹதராபாதில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக சட்டசபையின் நேரடி ஒளிபரப்பை பல அரசியல் கட்சிகள் பல்வேறு காரணங்களுக்காக எதிர்க்கின்றன.

சட்டசபை நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்படும்போது, ​மக்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ.,க்களின் செயல்பாட்டு திறனை அறிந்து கொள்கின்றனர்.

சபையில் அவர்களின் பங்கு என்ன; எத்தனை பேர் புள்ளிவிபரங்களுடன் விவாதிக்கின்றனர்; எத்தனை பேர் தங்கள் தொகுதிக்காக செயலாற்றுகின்றனர்; கருத்துக்களை பரிமாறிக் கொள்கின்றனர் என்பதை தெரிந்து கொள்கின்றனர்.

அத்துடன், பல்வேறு தொகுதி குறித்த அறிவையும், அங்குள்ள பிரச்னைகளையும் அறிகின்றனர். கூடவே, சில சட்டசபை உறுப்பினர்கள் துாங்குவதையும், எவருக்கு வந்த விருந்தோ எனும் ரீதியில் சிலர் அமர்ந்திருப்பதையும் காணும் போது, அடுத்த தேர்தலில் சரியான நபரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் ஏற்படுகிறது.

இந்த விழிப்புணர்வு ஏற்பட்டு விடக் கூடாது என்று நினைக்கின்றனர், சில அரசியல்வாதிகள்.

அதேநேரம், நேரலை ஒளிபரப்பில் மக்கள் தங்களை பார்க்கின்றனர் என்பது தெரிந்தும் கூட, சிலர் தங்களின் பண்பற்ற நடத்தை மற்றும் அநாகரிகமான சைகைகள் போன்ற குணங்களை மாற்றிக் கொள்ளவில்லை.

நாகரிகம் முக்கியம் எம்.எல்.ஏ.,க்களே!

புகார் அளிக்க தனிப்பிரிவு வேண்டும்!


கோ.பாண்டியன், செங்கல் பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

தமிழக காவல் துறையில் பணி புரியும் அலுவலர்கள் மற்றும் போலீசாரின் ஊழல் முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பிற ஒழுங்கீனமான செயல்பாடுகள் தொடர்பாக, பொது மக்கள் புகார் அளிக்க காவல் துறையில், 'இன்டர்னல் விஜிலென்ஸ் செல்' என்ற, 'வாட்ஸாப்' பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

பெரு நகரங்கள் மற்றும் மாவட்டம் தோறும், காவல் துறையின் வாட்ஸாப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதன் வாயிலாக, தமிழக காவல் துறையில் லஞ்சம், அதிகார துஷ் பிரயோகம், முற்றிலுமாக இல்லாவிட்டாலும், ஓரளவேனும் குறையும்!

அரசு நிர்வாகத்தில் லஞ்சமும், ஊழலும் இல்லாத துறைகளே இல்லை எனலாம். அப்படிப்பட்ட சூழலில், அனைத்து துறைகளிலும் இதுபோன்ற வாட்ஸாப் எண்கள் உருவாக்கி, பொது மக்களிடம் இருந்து புகாரை பெற்று, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அரை நுாற்றாண்டாக லஞ்சமும், ஊழலும் தமிழகத்தின் அனைத்து அரசு துறைகளிலும் புரையோடிப் போய் உள்ளது.

அதனால், இதுபோன்ற முயற்சிகள் வாயிலாக, மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த காவல் துறையில், 'இன்டர்னல் விஜிலென்ஸ் செல்' ஏற்படுத்தியுள்ளது போல், ஒவ்வொரு அரசு துறையிலும், பொது மக்கள் புகார் அளிக்கும் விதமாக தனிப்பிரிவு உருவாக்க வேண்டும்!

என்ன நியாயம் மிஸ்டர் உதய்?


எஸ்.ராமகிருஷ்ணன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'சென்னை திருவொற்றியூரில், போதைப் பொருள் பழக்கத்தை தட்டிக்கேட்டதால், பிளஸ் 2 மாணவர், 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

'கோவையில் போதை கும்பலை தட்டிக்கேட்டதற்காக, கல்லுாரி மாணவர் அமுதன், கொலை செய்யப்பட்ட அடுத்த சில நாட்களில், சென்னையிலும் இத்தகைய கொடூரம் நடந்திருக்கிறது.

'சட்டம் - ஒழுங்கை நிலை நாட்டுவதில், தமிழக வெற்றிக் கழக அரசு எந்த அளவுக்கு தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு, இந்த கொலைகளே சாட்சி. நிர்வாகத் திறனற்ற இந்த கோமாளி அரசை கண்டு, சமூக விரோதிகளுக்கு துளியும் பயம் இல்லை.

'பள்ளி, கல்லுாரிகளில் இத்தகைய சம்பவங்கள் நடப்பதை, அரசு கண்டும் காணாமல், வாயை மூடிக் கொண்டிருப்பது வெட்கக்கேடு' என்று அறிக்கை வெளியிட்டுள் ளார், தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயநிதி.

நாய் பிடிக்கும் வண்டியை பார்த்தவுடன், தெருவோரம் உள்ள நாய்கள் வாலை சுருட்டி ஓடி மறைவது போன்று, கடந்த திராவிட மாடல் ஆட்சியில், சமூக விரோதிகளும், போதைப் பொருள் வியாபாரிகளும் ஓடி ஒளிந்து கொண்டிருந்தனரோ?

விஜய் அரசு ஆட்சியில் அமர்ந்ததும், அவர்கள் அனைவரும் துள்ளி எழுந்து, தங்கள் ஆட் டத்தை ஆரம்பித்து விட்டனர் போலும்!

கடந்த ஐந்து ஆண்டுகளும் திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற எந்தவிதமான குற்ற சம்பவங்களும் நிகழாமல், காவல் துறையும், நீதிமன்றங்களும், சிறைச்சாலைகளும் காற்று வாங்கிக் கொண்டு இருந்தனவோ?

நல்ல ஆட்சியை அகற்றி விட்டு, அராஜக ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பது போல் புலம்புகிறார், உதயநிதி.

அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, அமைச்சர்கள் சிலர் மீதும், தி.மு.க., பிரமுகர்கள் மீதும் வழக்குகள் உள்ள நிலையில், தன் முதுகில் உள்ள அழுக்கை பனியன் போட்டு மறைத்து, விஜயின் வெள்ளை சட்டையைப் பார்த்து, உதயநிதி குற்றஞ்சாட்டு வது என்ன நியாயம்?

விரயச் செலவு தேவையா?


டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

கடந்த 1977ல் முதன்முதலில் எம்-.ஜி.ஆர்., முதல்வர் ஆனபோது, 130 அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் களில், 100 பேருக்கு கார் இல்லை. அதில், ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றி பெற்ற நடிகர் ஐசரி வேலன், 'லாம்பிரட்டா' ஸ்கூட்டரை பயன்படுத்தி வந்தார்.

அதனால், எம்.ஜி.ஆரை சந்தித்து, 'தொகுதி மக்களே வசூல் செய்-து எனக்கு கார் வாங்கித் தருவதாக சொல்கின்றனர்; வாங்கிக் கொள்ளட்டுமா?' என்று அனுமதி கேட்டார்.

அதற்கு, 'உனக்கு கார் வழங்குவதற்காக மக்கள் ஏன் சிரமப்பட வேண்டும்... அதை நான் பார்த்துக் கொள்கிறேன்' என்றார், எம்.ஜி.ஆர்.,

அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டங்களைச் சேர்ந்த, ஒன்பது அ.தி.மு.க., - எம்.எல். ஏ.,க்களை தேர்வு செய்து, அவர்களை மூத்த அமைச்சர்களுக்கு கீழே துணை அமைச்சர் ஆக்கினார். அவ்வகையில், ஆர்.எம்.வீரப்பனுக்கு கீழ் துணை அமைச்சர் ஆனார், ஐசரி வேலன்.

இதன்வாயிலாக, ஐசரி வேலனின் கார் கோரிக்கையை நிறைவேற்றி வைத்தார், எம்.ஜி.ஆர்.,

அப்போதைய நிலை வேறு!

தற்போது உள்ள எம்.எல்.ஏ.,க்களில், 98 சதவீதம் பேர் கார் வைத்துள்ளனர். கார் இல்லாதவர்களுக்கு, அவர்களது கட்சி சார்பில் இலவசமாக வாங்கிக் கொடுக்கலாமே!

ஏற்கனவே, தமிழக அரசு வாங்கிய கடனுக்கு ஆண்டிற்கு, 78,683 கோடி ரூபாய் செலுத்திவருகிறது.

இந்நிலையில், இதுபோன்ற விரயச் செலவுகள் தேவையா? மு-தல்வர் விஜய் யோசிக்க வேண்டும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us