PUBLISHED ON : நவ 26, 2026 12:00 AM

ஆர்.ராமையா, சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: தமிழகத் தில் த.வெ.க., ஆட்சி அமைந்த நாள் முதல், இரு திராவிட கட்சியினரும், ‘விரைவில், த.வெ.க., ஆட்சி கவிழும்’ என்று ஒரே பாட்டை திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையே, ‘எங்கள் ஆட்சியின் ஆறு மாத முடிவிலேயே, ‘விரைவில், தி.மு.க., ஆட்சி உதயமாகும்’ என, அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகிறார் என்றால், அவர் நடத்தும் குதிரை பேர முயற்சிகள், ஒவ்வொரு கட்டமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதை, தி.மு.க., நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் சொல்கிறாரா?’ எனக் கேட்டுள்ளார், சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்.
தி.மு.க.,வின் இந்த அங்கலாய்ப்பு, இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல; 1977ல் எம்.ஜி.ஆர்., முதல்வராக பதவியேற்ற நாள் முதலாக ஆரம்பித்தது இது!
சொறி சிரங்கு பிடித்தவனின் கரங்கள் சதா சொறிந்து கொண்டே இருக்கும். அது போல், பதவி வெறி கொண்ட கழகத்தின ருக்கு, பதவி இல்லை என்றால் துாக்கம் வராது.
எம்.ஜி.ஆர்., பதவியேற்ற நாளன்றே, ‘நடிகனின் ஆட்சி, 100 நாட்களை தாண்டுமா?’ என்று கேட்டு, எள்ளி நகையாடியவர்கள் தான், தி.மு.க.,வினர். அதனால் தானோ என்னவோ, எம்.ஜி.ஆர்., உயிருடன் இருந்த வரை, கருணாநிதியால் ஆட்சி அதிகாரத்தை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
எம்.ஜி.ஆர்., உடல்நலம் பாதிக்கப்பட்டு, அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது, ‘தமிழக வாக்காளர்களே... இந்த முறை, தி.மு.க.,விற்கு ஓட்டு போட்டு என்னை முதல்வராக்குங்கள்; எம்.ஜி.ஆர்., குணமடைந்து திரும்பியதும், ஆட்சியை அவரது காலடியில் சமர்ப்பித்து விடுகிறேன்’ என்று கெஞ்சியவர், கருணாநிதி.
இப்போது, அந்த, ‘கான்செப்ட்’டை பங் காளி கட்சியான அ.தி.மு.க.,வுடன் இணைந்து, தி.மு.க., கம்பு சுத்தி கொண்டிருக்கிறது.
நிச்சயம் இவர்களது கனவு நிறைவேறாது. அப்படியே இரு கட்சிகளின் குதிரை பேரத்தில் விஜயின் ஆட்சி கவிழ்ந்து, தேர்தல் நடந்தாலும், தி.மு.க., ஆட்சியை பிடிக்க முடியாது என்பது மட்டும் சர்வ நிச்சயம்!
