தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/இது உங்கள் இடம்: நவ. 26

இது உங்கள் இடம்: நவ. 26

இது உங்கள் இடம்: நவ. 26


PUBLISHED ON : நவ 26, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 26, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹிந்துக்களே... இனம் கண்டு கொள்ளுங்கள்!



ச.பிரசன்னா, சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் பிரச்னை, ஓர் தெளிவை தந்துள்ளது. தீபத்துாண் இருக்கும் இடம் கோவிலுக்கு சொந்தமானது என உறுதியானாலும், உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டா லும், தீபத் துாணில் முருக பக்தர்கள் விளக்கு ஏற்றக் கூடாது; இறந்தவர்களுக்கு ஏற்றும் மோட்சத் தீபத் தில் தான் ஏற்ற வேண்டும்; அதுதான், மதச்சார்பின்மை.

மீறி, தீபத்துாணில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று கோடான கோடி பக்தர்கள் அழுது புரண்டாலும், அதை அரசு ஏற்காது; தடுக்கும் என்பதை, த.வெ.க., அரசு நிரூபித்து விட்டது.

பெரும்பான்மை மக்களின் மத நம்பிக்கையை காலில் போட்டு மிதிக்கும் செயலுக்கு, இங்குள்ள அரசியல் கட்சிகள் வைத்திருக்கும் பெயர், ‘மதநல்லிணக்கம்!’

எட்டு, 10 சதவீத சிறுபான்மை ஓட்டு வங்கி, இவர்களுக்கு முக்கியமாக இருக்கிறது; அதேநேரம், 80 சதவீத ஓட்டு வங்கி வைத்திருக்கும் ஹிந்துக்கள் இவர்களுக்கு ஒன்றுமே இல்லை!

அரசியல்வாதிகளின் இத்தகைய நிலைப்பாடுக்கு காரணம், ஹிந்துக்களின் ஓட்டுகள் அவர்களுக்கு எளிதாக கிடைத்து விடுவதே!

கிறிஸ்துவர், இஸ்லாமியர் போன்று, ஹிந்து ஓட்டு வங்கி என்று இருந்திருந் தால், இன்று, திருப்பரங்குன்றம் விஷயத்தில் ஹிந்துக்களின் மத உணர்வு காயப் படுத்தப்பட்டு இருக்காது!

மேலும், மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக விளங்கும் திருப்பரங்குன்றத்தை, நேற்று வந்த, த.வெ.க., அரசு, தன் அரசாணையில் சிக்கந்தர் மலை என்று குறிப்பிடுகிறது என்றால், ஹிந்துக்கள் சுரணை அற்றவர்கள்; அவர்களது வரலாற்றை எப்படியும் திருத்தி எழுதுவோம் என்று தானே அர்த்தம்?

இங்கு மசூதிகளும், சர்ச்சுகளும் சுதந்திரமாக செயல்பட, கோவில்களை மட் டும் ஹிந்து சமய அறநிலையத் துறை என்ற பெயரில் ஆக்கிரமிப்பு செய்து, கோவிலுக்காக பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை எடுத்து, அந்த கோவிலுக்கு எதிராக நீதிமன்றம் செல்கிறது. கேட்டால், ‘கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றினால், மாற்று மதத்தவர் மனம் புண்படும்’ என்கிறது.

உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் சொன்னாலும் ஹிந்துக்களின் உரிமையை நிலை நாட்ட விடமாட்டோம் என்பதில், ஓர் அரசு உறுதியாக இருக்கிறது என்றால், ஹிந்துக்கள் தான் யோசிக்க வேண்டும்.

நம் ஓட்டை பெற்று, நம் முதுகில் குத்தும் நரிகளை யும், ஓநாய்களையும் இனங் கண்டு ஒதுக்காத வரை, இங்கு நாம், வழிபாட்டு உரிமைகளை மட்டுமல்ல; நம் அடிப்படை உரிமைகளையும் கூட இழந்து கொண்டு தான் இருப்போம்!



கற்றவை கற்றபின் எடைக்கு போடுக!



வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: தேனி மாவட்டம் பண்ணைப்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்குள், விடுமுறை நாளில் அத்துமீறி நுழைந்தவர்கள் மது அருந்தி, காலி பாட்டிலை கொடி கம்பத்தின் உச்சியில் சொருகி விட்டு சென்றுள்ளனர்.

பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா வசதியோ, இரவு நேர காவலாளியோ நியமிக்கப்படுவது இல்லை. இதனால், மது அருந்துவோர் வகுப்பறைகளை மது கூடமாகவும், சீட்டாட்ட பிரியர்கள் சீட்டாடும் கிளப்புகளாகவும் மாற்றுகின்றனர்.

அப்படி மது அருந்திய கும்பல் தான், பள்ளி கொடி கம்பத்தில் மது பாட்டிலை சொருகி விட்டு சென்றுள்ளது. இச்செயல் மாணவர்களின் மனநிலையை கண்டிப்பாக பாதிக்கும்.

அரசு பள்ளிகளில் சிக்கன் பிரியாணி போடுவோமா, மாட்டுக்கறி பிரியாணி போடுவோமா என்பதில் காட்டும் ஆர்வத்தை, பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைப்பது, மாணவர்களின் பாதுகாப்பு கருதி, கண்காணிப்பு கேமரா வசதி செய்து தருவது, இரவு நேர காவலாளியை பணியில் அமர்த்துவது போன்ற அடிப்படை தேவைகளில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அக்கறை காட்டலாம்.

இதேபோன்று, திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அரசு துவக்கப் பள்ளியில், பாட புத்தகங்களை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் எடைக்கு போட்டுள்ளார்; தற்போது அவர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டு உள்ளார்.

இதுபோன்று, பழைய பாட புத்தகங்களை தலைமை ஆசிரியர்கள் எடைக்கு போட்டு, அதை தங்கள் பையில் போட்டுக் கொள்ளுவது மாநிலம் முழுதும் பரவலாக நடைபெறுவது தான்.

இன்றும், பள்ளி திறந்தவுடன், பழைய பேப்பர் வாங்குவோர், தங்கள் இருசக்கர வாகனத்துடன் பள்ளிக்கு படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதனால், சஸ்பெண்ட் செய்வதுடன் நின்று விடாமல், பள்ளியில் உள்ள பழைய பொருட்களை விற்பனை செய்வதற்கான வழிகாட்டுதலை, பள்ளி கல்வித்துறை, தலைமைஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்!

திட்டங்களும், சட்டங்களும் பள்ளிகளையும், மாணவர்களின் கல்வித் திறனையும் மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us