PUBLISHED ON : செப் 22, 2024 12:00 AM

எஸ்.ராமசுப்ரமணியம், சென்னையில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே ராதாபுரத்தில் தேசிய பேரிடர் மீட்பு மண்டல மைய துவக்க விழாவில் பங்கேற்று, அப்படியே ஒரு அதிரடி பேட்டியையும் தட்டி விட்ட சபாநாயகர் அண்ணன் அப்பாவு, பேட்டியில் கூறிய கருத்து, அவர் அப்பாவியா இல்லை
அப்பாவுவா என்று குழம்ப வைக்கிறது.
'இந்திய அளவில் மது விலக்கு அமல்படுத்தப்படுமானால், அதற்கு தமிழகம் முழு ஆதரவு தரும்' எனக் கூறி இருக்கிறார், தமிழகத்தின் மாண்புமிகு சபையான சட்டசபையின் நாயகர் அப்பாவு.
கவுரவம் மிக்க சபை நாயகரின், 'மிகத் தெளிவான' பேச்சல்லவோ இது!
அதாவது, 'நீங்கள் நிறுத்தினால் தான் நாங்கள் நிறுத்துவோம்' என்ற கணக்கு! இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், பூரண மதுவிலக்கோ அல்லது புண்ணாக்கு மதுவிலக்கோ எதுவும் தமிழகத்தில் கிடையாது என்பதுதான்!
விடுதலை சிறுத்தைகள் மது ஒழிப்பு மாநாடு நடத்தினாலும்கூட, தமிழகத்தில் மதுவையும் ஒழிக்க முடியாது;கள்ளச்சாராயத்தையும் அழிக்க முடியாது. அதனால்தான், 'இந்தியா முழுதும் பூரண மதுவிலக்கு அமலாக்கப்படுமானால், தமிழகமும் அதற்கு முழு ஆதரவு தரும்' என்று ஒரு, 'பிட்'டைப் போட்டு உள்ளார்.
புதுச்சேரி, கோவா, புதுடில்லி போன்ற யூனியன் பிரதேசங்களில், மதுவிலக்கு என்பதை, நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அம்மாநிலங்களின் முக்கிய வருமானமே மது விற்பனைதான்; தமிழகமும் அந்த நிலைமைக்கு இறங்கி வந்து, பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன.
அதனால்தான், பந்தை மத்திய அரசின்கால்களுக்கு தட்டி விட்டு விட்டார்.
'ஒருவேளை இந்தியா முழுதும்பூரண மதுவிலக்கை மத்திய அரசு அமலாக்கி விட்டால்...' என்று
கேட்கத் தோன்றுகிறதல்லவா?ஒரு திரைப்படத்தில் கமல்ஹாசன், 'அவுங்களை நிறுத்தச் சொல்லுங்க. நானும் நிறுத்தறேன்' என்று ஒரு, 'பஞ்ச் டயலாக்' விடுவார்.
அந்த பஞ்ச் டயலாக், அப்பாவுக்கு, 'சடார்' என்று நினைவுக்கு வந்து, அவிழ்த்து விடுவார்.
அப்பாவுவா, கொக்கா!
வரட்டும் ஒரே நாடு ஒரே தேர்தல்!
ஜெயராமன் கல்யாணசுந்தரம், பெங்களூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: --- முன்னாள் ஜனாதிபதிராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு தயாரித்த, 'ஒரே நாடு
ஒரே தேர்தல்'அறிக்கையை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்
சரவை ஏற்றுக் கொண்டு உள்ளது. இதன் வாயிலாக,நாடு முழுதும் ஒரே நேரத்தில்
பார்லி., மற்றும் சட்டசபையில் தேர்தல்நடத்தப்படும்.
'மத்திய அரசு கொண்டு வரும் திட்டம் எதுவானாலும்எதிர்ப்போம்; அதுதான்எங்கள் கொள்கை' எனபின்பற்றி வரும் தி.மு.க.,வும்,ம.தி.மு.க., உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகளும், ஒரே
நாடு ஒரே தேர்தல் முறைக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பொதுவாக, ஒரு திட்டத்தை தமிழக அரசியல்கட்சிகள் எதிர்க்கின்றனர்என்றாலே, அது மிகச்சிறப்பான திட்டமாகத்தான் இருக்கும். இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால், பல நன்மைகள் உள்ளன. இந்த முறையைச் செயல்படுத்தினால், ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும்
மூன்று மாத காலம் மட்டுமே,தேர்தல் காலமாக இருக்கும்.இதனால், நாட்டின்நிர்வாகம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கலாம். இந்த புதிய முன்மொழிவு, தேர்தல் செயல்முறையை எளிமைப்படுத்தி, தேர்தல் செலவுகளைக் குறைக்க உதவும்.
இந்த திட்டம் புதிதல்ல; 1983ல், தேர்தல் ஆணையம்இதை முதன்முதலில் முன்மொழிந்தது.
கடந்த, 1951--52ல் நடந்த முதல் பொதுத் தேர்தலின்போது, ஒரே நேரத்தில் நாடு முழுதும் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது; 1967 வரை இந்த நடைமுறை தொடர்ந்தது. அதன்பின், தொடர்ந்து லோக்சபா மற்றும் சட்டசபைகள் முன்கூட்டியே
கலைக்கப்பட்டதால், ஒரே நேரத்தில் தேர்தல்நடத்தும் முறைவழக்கொழிந்து போனது.
கடந்த 2014ல், தன் கட்சிஆட்சிக்கு வந்ததில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடி, இந்த திட்டத்தை மிகுந்த கவனத்துடன் முன்னெடுத்து வருகிறார். இத்திட்டம் நிறைவேறி னால், நாட்டு மக்கள் அனைவரும் சந்தோஷப்படுவர்!
பின் இவர்கள் எதற்கு?
வெ.சீனிவாசன், திருச்சியில்இருந்து அனுப்பிய, 'இ-மெயில்'கடிதம்: கூட்டணியில்சலசலப்பை ஏற்படுத்திய பின், வி.சி., தலைவர், முதல்வரை சந்தித்து மனு ஒன்றை அளித்ததாகக் கூறப்படுகிறது.
அந்த மனுவில், பிற விஷயங்களுடன், 'மது ஒழிப்பால் ஏற்படும் வரி நஷ்டத்தை மத்திய அரசு, மதுவிலக்கை அமல்படுத்தும் மாநில அரசுகளுக்கு கொடுக்கவேண்டும். நிதி கமிஷன்நிதி பகிர்வு குறித்து முடிவு செய்யும்போது, மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களின் வரி இழப்பை மனதில் கொண்டு, அதிக நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்' என்று கூறி இருப்பதாகத் தெரிகிறது.
மத்திய அரசோடு, கவர்னரோடு மோதல், மத்திய அரசு இயற்றிய சட்டங்களுக்கு எதிராக
சட்டசபையில் மசோதாக்கள்நிறைவேற்றம், கவர்னருக்குஎதிராக வழக்குகள், மத்தியஅரசின் கல்விக்கொள்கையை ஏற்க மறுப்பு, கேட்ட போதெல்லாம் மத்திய அரசு பணம் கொடுக்க வேண்டும் என்ற அடம், இல்லையென்றால், 'மத்திய அரசு வஞ்சிக்கிறது,
மாற்றான்தாய் மனப்பான்மையோடுநடத்துகிறது' என்பது போன்ற தவறான, பொய் பிரசாரங்கள் என, தினமும் ஏதோ ஒரு, 'அலம்பல்' வேலைதான் நடக்கிறது.நிதிக் கமிஷனின் பரிந்துரைகள், வழிகாட்டுதல்களின்படியே நிதிப் பகிர்வு, எந்தவித பாரபட்சமுமின்றி அளிக்கப்பட்டு வருகிறது.கேட்ட போதேல்லாம், கேட்ட தொகையை அப்படியே, உடனே, கொடுக்க வேண்டும்;
இல்லாவிடில் வசை பாடுவோம் என்கிற மனப் போக்கு தவறானது.விட்டால், இலவசங்களுக்கான செலவையும்,அதனால் ஏற்பட்டிருக்கும்கடனையும் அடைக்க, மத்திய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று இவர்கள் கேட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
எல்லாவற்றையும்மத்திய அரசின் தலையில்கட்டினால், பின் இவர்கள் எதற்கு?சலசலப்புக்குப் பின், கூட்டணித் தலைவரை நேரில் சந்தித்து மனு கொடுத்ததும், மதுவிலக்கு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்ததும் கூட, தி.மு.க., தலைமையை சற்றே சாந்தப்படுத்துவதற்காக,
அரசியல் சூட்டை சற்றே தணிப்பதற்காக என்று புரிந்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.