sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

புகார் வருவதற்காக காத்திருக்க கூடாது!

/

புகார் வருவதற்காக காத்திருக்க கூடாது!

புகார் வருவதற்காக காத்திருக்க கூடாது!

புகார் வருவதற்காக காத்திருக்க கூடாது!


PUBLISHED ON : ஜன 28, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 28, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புகார் வருவதற்காக காத்திருக்க கூடாது!


வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மணப்பாறை அருகில், வெம்பனுார் கிராம வி.ஏ.ஓ.,வும், அவருடைய தரகரும் பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற செய்திகளை நாம் அடிக்கடி கேட்க முடிகிறது.

தவிர, 'புதிய மின்சார, குடிநீர் இணைப்புகள், வீடு கட்ட அனுமதி, பத்திர பதிவு, வாகன ஓட்டுனர் உரிமம், வாரிசு சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட வேலைகளுக்கு, அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்பது வாடிக்கை தான்; இல்லாவிட்டால் வீணாக அலைய விடுவர்... கோப்புகள் மேலே போகாது, வேலைகள் ஆகாது' என்று அனுபவப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.

'கட்சிக்காரர்கள், பதவியில் இருப்போர், தங்கள் அதிகாரத்திற்கேற்ப சம்பாதிக்கும் போது, நாங்கள் மட்டும் சம்பாதிக்கக் கூடாதா' என்று, இவர்கள் நினைக்கின்றனர்.

கட்சிக்காரர்கள், குறிப்பாக பதவியில் இருப்பவர்கள் லஞ்ச லாவண்யமின்றி, காமராஜரை போல, கக்கனைப் போல நேர்மையோடும், நாணயத்தோடும் நடந்து கொண்டால், அது அரசு ஊழியர்களுக்கு ஒரு சிறந்த உதாரணமாக, எடுத்துக்

காட்டாக அமையக்கூடும்; கை நீட்டும் பழக்கம் குறையலாம்.பாதிக்கப்பட்டோர் வந்து புகார் அளிக்கும் வரை லஞ்ச ஒழிப்புத் துறை காத்திருக்காமல், தாங்களே அனைத்து அரசு அலுவலகங்களிலும், கண்காணிப்பு

கேமராக்களைப் பொருத்தி, அவைகளை தினமும் ஆய்வு செய்ய வேண்டும்.பொதுமக்கள் போல அரசு அலுவலகங்களுக்கு சென்று, கருப்பு ஆடுகளை அடையாளம் காண வேண்டும். அலுவலக வளாகங்களில் குழுமியிருக்கும்

தரகர்களை கண்டறிந்து, விரட்டியடிக்க வேண்டும். சொத்துக்கள் குவித்து, ஆடம்பரமாக வாழும் அரசு ஊழியர்களை கண்காணிக்கலாம்.இதுபோன்று தவறு செய்யும் அதிகாரிகள், ஊழியர்களை அடையாளம் கண்டு, சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இதன் வாயிலாக, அரசு அலுவலகங்களில் லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டை குறைக்க முடியும். மக்களுக்கும் அரசின் சேவைகள் தாமதமின்றி கிடைக்கும். யோசிக்குமா லஞ்ச ஒழிப்புத் துறை?

கமல் கட்சியின் 'காமெடி ரோல்!'


என்.ஏ.நாகசுந்தரம், குஞ்சன் விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: என்னதான் சினிமாக்களில் கதை வலுவாக இருந்தாலும், சிறிது நகைச்சுவை இருந்தால் தான், படம் வெற்றிஅடையும். அதுபோல, அரசியலில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் வார்த்தையால் சண்டை போடுவர்; தவறுகளை பட்டியல் இடுவர். இப்படி மாறி மாறி குறைகளை கூறும் போது, நகைச்சுவைக்கு என, ஒரு காமெடியன் தேவை.

அரசியலில் அந்த குறையை போக்க, நடிகர் கமல்ஹாசன் களத்தில் குதித்துள்ளார். அவர் ஏற்கனவே நடித்த காதலா காதலா, பம்மல் கே சம்பந்தம், அவ்வை சண்முகி போன்ற காமெடி படங்களை இன்றும், 'டிவி'யில் பலர்

ரசிக்கின்றனர். தற்போது, அதே காமெடியை அரசியலிலும் காட்ட துவங்கி விட்டார்.அதாவது, மக்களுக்காக துவங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் பல தேர்தல்களில் போட்டியிட்டாலும், இன்னும் வெற்றிக்கனியை பறிக்கவில்லை.

காங்கிரஸ் கட்சியுடன் நட்பாகி, தமிழகத்தில் பெரிதாக அரசியல் செய்ய ஆசைப்பட்டு, அது மண்குதிரை என தெரிய வர, நிஜகுதிரையான தி.மு.க.,வுடன் கூட்டணி சேர விரும்புகிறது.அதிலும், பல்வேறு நிபந்தனைகள் விதித்து, அதற்கு தி.மு.க. ஒத்து வந்தால் மட்டுமே கூட்டணி என்று கொக்கி

போடுகிறார்.அந்த கட்சியின் துணை தலைவரான மவுரியா சமீபத்தில் அளித்த பேட்டியில், 'தமிழக வளர்ச்சி, மக்கள் நலன்களில் எந்த சமரசத்தையும் அனுமதிக்க முடியாது; எங்கள் தலைவரின் சிந்தனை, கொள்கையோடு ஒத்து போக வேண்டும் என்ற இரு நிபந்தனைகளின் அடிப்படையில் கூட்டணி அமையும்.

'ஒத்து வராவிட்டால், 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவும் தயங்க மாட்டோம்' என சூளுரைத்துள்ளார்.இதை படித்தபோது புல்லரித்து விட்டது. இந்த கட்சி, இதுவரை ஒரு தொகுதியில் கூட 'பூத்' கமிட்டியை முறைப்படி அமைத்ததாக தெரியவில்லை. அதற்கே ஆள் கிடைக்காத பரிதாப நிலையில் உள்ள கட்சி, 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என வீம்பு பேசுவது, விலா நோக சிரிக்க வைக்கிறது.

எது எப்படியோ... லோக்சபா தேர்தல் அனல் பறக்கும் வெயில் காலத்தில் நடக்கப் போகிறது. அரசியல் தலைவர்களின் சீரியசான ஆவேசப் பேச்சு களுக்கு மத்தியில், கமல் கட்சி, மக்களை, 'கலகல'ப்பூட்டும் என்பது மட்டும் நிச்சயம்.

காந்தி கண்ட கனவு நனவாகும்!


அ.குணா, கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஹிந்துக்கள் ஒவ்வொருவரின் கனவான, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. நம் தமிழகத்தில், ஹிந்துக்கள் நாகூர் தர்கா சென்று வழிபடுவதும், வேளாங்கண்ணி மேரி மாதாவை வழிபடுவதையும் பார்த்து வருகிறோம்.

இன்று உலகில் பல்வேறு நாடுகளுக்கு இடையே நடக்கும் போர்கள் மதரீதியாக நடந்து வருகின்றன. ஆனால், நம் நாட்டில் மதரீதியாக பிரிந்து நிற்காமல், இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். நம் தேசப் பிதா மகாத்மா காந்தி ஒரு

முழுமையான ராம பக்தர்.அவர், தன் ஆன்மிக ஒருமைப்பாட்டை, எளியவர்களும் புரிந்து கொள்ளும் வகையில், ராம நாமாவை வைத்து தான் தேசியத்தின் பால்

ஒன்றிணைத்தார்.நம் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, முஸ்லிம்கள் வழிபட, அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தில், இந்திய - இஸ்லாமிய அறக்கட்டளை சார்பில் மசூதி ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதை விரைவில் கட்டி முடித்து, அதன் திறப்பு விழாவிலும், பிரதமர் மோடி பங்கேற்று, தான் அனைத்து மதங்களுக்குமான தலைவர்

என்பதை நிரூபிக்க வேண்டும்.மேலும், நாகூர் தர்காவிற்கு ஹிந்துக்கள் எவ்வாறு சென்று வழிபடுகின்றனரோ, அப்படி அயோத்தியிலும் அனைத்து மதத்தினரும் சென்று வழிபடும்

நாளில் தான், நாம் அனைவரும் இந்தியர்கள் என்று கூறிக்கொள்வது உறுதியாகும்.எது எப்படியோ... காந்தி கண்ட கனவான ராமராஜ்யம் உருவாகும் நாள், இந்த ராமர் கோவில் கும்பாபிஷேகம் வாயிலாக உறுதிப்படுத்தப்பட்டு விட்டது!

நிகழ்கால அனுமன் பிரதமர் மோடி!


மணிபிரபு, கம்பம், தேனி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ராமர் கோவிலின் பிராண பிரதிஷ்டை விழா மிக சிறப்பாகவும், கோலாகலமாகவும் நடந்து முடிந்துள்ளது. புராண காலத்தில் நடந்த ராமர் பட்டாபிஷேகத்தை யாரும் பார்த்திருக்க முடியாது; இதை நம்மில் பலருக்கு காணும் பாக்கியம் கிடைத்தது.

பல்வேறு கட்டட மற்றும் சிற்ப கலைஞர்களின் உழைப்பிலும், இன்னும் பல ஊழியர்களின் உழைப்பிலும் உயர்ந்து நிற்கிறது அயோத்தி. இதற்கு முழு காரணம் பிரதமர் மோடி என்றால் மிகையாகாது.

இளையராஜா கூறியது போல், எத்தனையோ பிரதமர்கள் வந்து போனாலும், மோடியால் தான் அயோத்தி ராமர் கோவில் சாத்தியமானது. தனக்கு கோவில் கட்ட ராமர் தேர்ந்தெடுத்த மனிதர் தான் மோடி.

மக்கள் பணியை மகத்தான முறையில் நிறைவேற்றுபவர், தனக்கு கோவிலும் கட்டுவார் என்று நம்பி, ராமர் பணியை கொடுத்தார்; மோடியும் அதை கச்சிதமாக செய்து முடித்துள்ளார்.

தொடர்ந்து, 11 நாட்கள் நீராகாரம், பழங்கள் மட்டுமே உண்டு, தரையில் படுத்து கடும் விரதம் இருந்து, தன்னை வருத்தி, ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.

தான் உயர்ந்த பதவியில் உள்ளோம் என்ற ஆணவம் துளியும் இல்லாமல், அனைவரிடமும் பவ்யமாக ஆசி வாங்குகிறார். தமிழக கோவில்களிலும் அவரின் பணிவு வெளிப்பட்டது.அன்று, ராமர் - -சீதையை சேர்த்து வைத்து அனுமன் சாதித்ததை போல, இன்று ராமருக்கு கோவில் எழுப்பி நிகழ்கால அனுமனாக சாதித்துள்ளார் மோடி.

இந்த சிறப்புக்கு பிரதிபலனாக, ராமரே மீண்டும் மோடியை ஜெயிக்க வைத்து, மூன்றாவது முறையாக அரியணையில் அமர்த்துவார். அதையடுத்து, நிஜமான ராமராஜ்ஜியம் நாட்டில் மலரும் என்பதில் அணுவளவும் சந்தேகம் இல்லை!

ஓட்டளிக்க உறுதிமொழி ஏற்போம்!


சிவராமன், அஸ்தினாபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு பாரதம். நம் தேர்தல் முறையை கண்டு, பல மேற்கத்திய நாடுகள் வியக்கின்றன. தேர்தலுக்கு பின், சில நேரங்களில் குதிரை பேரம் நடப்பது உண்மை என்றாலும், அதிகார மாற்றம் நம் நாட்டில் அமைதியாகவே நடந்து வந்து

உள்ளது.கட்சி தலைவர் முதல் அடிமட்ட தொண்டன் வரை அனைவருமே, தேர்தல் தோல்வியை, 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என, ஏற்றுக் கொள்கின்றனர். வாக்காளர்களை மகேசன் நிலைக்கு கருதுவது ஆரோக்கியமான விஷயம். நாம் ஒற்றை வாக்கு வாயிலாக அரசை தீர்மானிக்கும் சக்தி பெற்றவர்கள் என்பதால், மகேசன் என்று ஒப்பிடுகின்றனர். தங்களுக்கு இருக்கும் வலிமையை வாக்காளர்கள் உணர வேண்டியது அவசியம்.

தமிழகத்தில், சராசரியாக, 70 சதவீத மக்கள் தான் ஓட்டு போடுகின்றனர். பின்தங்கிய மாநிலங்கள் எனப்படும் வடகிழக்கு மாநிலங்களில், 80 சதவீதம் வரை ஓட்டு பதிவாகிறது.மொத்த வாக்காளர்களில் 30 சதவீத பேரின் ஓட்டு கிடைத்தால் கூட ஒருவர் வெற்றி பெற்று விடலாம். அவர் சரியான வேட்பாளராக இல்லாத பட்சத்திலோ, பெருவாரியான மக்கள் விரும்பாதவராக இருந்தால் கூட தேர்வாகிறார். சரியான வேட்பாளர் வெற்றி பெற, அனைவரும் ஓட்டு போட வேண்டும்.

போட்டியில் ராமன் இல்லை என்று நாம் ஓட்டளிக்காமல் இருந்தால், ராவணன் தேர்வாகவும் வாய்ப்புள்ளது. 100 சதவீதம் சரியான மனிதர் என எவருமில்லை; எல்லாரிடமும் நிறை, குறைகள் இருக்கும். எனவே, வேட்பாளர்களில் யார் சிறந்தவரோ, யார் நம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வாரோ, அவருக்கு ஓட்டளிக்க வேண்டும். ஒரு சில பகுதிகளில் ஏலம் போல, அதிகம் தருவோருக்கு ஓட்டு போடும் நிலை இருக்கிறது. இந்த பார்முலா தமிழக மக்கள் அறியாதது இல்லை. இந்த இழிநிலை மாற, பணம் பெற்று ஓட்டளிப்பது

அவமானம் என்பதை உணர வேண்டும்.வரும் லோக்சபா தேர்தலில், அவசியம் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். 75வது குடியரசு தின விழாவை கொண்டாடும் இவ்வேளையில், நாம் அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழி இதுதான்.

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்!


பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், பா.ஜ.,வால் ஆட்சி அமைக்க முடியாது என்று திராவிட கட்சிகள் நினைக்கின்றன. ஆனால், 'நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கும்' என்ற சொலவடையை மறந்து பேசி வருகின்றனர்.

கடந்த 1980ல் துவங்கப்பட்ட பா.ஜ., 1984ல் நடந்த லோக்சபா தேர்தலில் வெறும், இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அப்போது நானும், இந்த கட்சி வளர்ந்து ஆட்சியை பிடிப்பது சாத்தியம் இல்லை என்று நினைத்தேன்.ஆனால், அடுத்தடுத்த தேர்தல்களில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, படிப்படியாக வளர்ந்து வருகிறது. மறைந்த வாஜ்பாய் ஆறு ஆண்டுகள், மோடி 10 ஆண்டுகள் என, 16 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆண்ட கட்சியாக வளர்ந்து விட்டது; பல்வேறு மாநிலங்களிலும் கூட பா.ஜ.,வின் ஆட்சியே நடக்கிறது.இந்த வளர்ச்சிக்கு அவர்களின் கொள்கை, உழைப்பு மட்டுமின்றி, பிற அரசியல் கட்சிகளின் போலி மதச்சார்பின்மை கொள்கை, ஹிந்து மத நம்பிக்கைகளை மட்டும் மூடநம்பிக்கை என்று கூறும், போலியான பகுத்தறிவு வாதம் போன்றவையும் காரணம்.சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று ஹிந்து மதத்தையோ அல்லது ஹிந்துக்கள் திருடர்கள் என்றோ யாராவது இழிவுபடுத்தினால், சிறுபான்மையினர் ஓட்டுகளுக்காக, பா.ஜ.,,வை தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் அதை கண்டிப்பதே இல்லை.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால், பா.ஜ., பின்னால் ஹிந்துக்கள் அணி வகுக்கின்றனர். முன்னர், பிரதமர் மோடி தமிழகம் வந்த போது, வரவேற்கும் கூட்டத்தை விட, 'கோ பேக் மோடி' என்று கூச்சலிட்ட கூட்டம் அதிகம். ஆனால், இன்று நிலை தலைகீழாக மாறிவிட்டது. மோடி எங்கு சென்றாலும், வரவேற்க பிரமாண்ட கூட்டம் கூடுகிறது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின், 'என் மண் என் மக்கள்' யாத்திரைக்கும் கூட்டம் கூடுகிறது. இது, திராவிட கட்சிகளைப் போல பணம், குவார்ட்டர் மற்றும் பிரியாணி கொடுத்து கூட்டிய கூட்டம் அல்ல; தானாக சேர்ந்த கூட்டம். தமிழகத்திலுள்ள பல போலியான மதச்சார்பின்மை கட்சிகள், வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சூழலில், பா.ஜ.,, வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை. அக்கட்சியால், 2026ல் வேண்டுமானால் ஆட்சியை பிடிக்க

முடியாமல் போகலாம்; ஆனால், ஆட்சிக்கே வராது என்று சொல்வது புத்திசாலித்தனமல்ல.தமிழகத்தில் பா.ஜ., ஆட்சியை பிடிக்க, அந்த கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டிய தேவையே இல்லை; போலி மதச்சார்பின்மை பேசும் கட்சிகளின் செயல்பாடுகளே போதும்;

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்.






      Dinamalar
      Follow us