sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

மனசாட்சி இல்லையா?

/

மனசாட்சி இல்லையா?

மனசாட்சி இல்லையா?

மனசாட்சி இல்லையா?

8


PUBLISHED ON : டிச 01, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : டிச 01, 2024 12:00 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கொன்றைவேந்தன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க நிதி இல்லாமல், பல மாதங்களாக நிலுவையில் வைத்துள்ளது, தி.மு.க., அரசு.

அத்துடன், அரசு அலுவலர்களுக்கு பஞ்சப்படி வழங்கவும், பழைய பென்ஷன்திட்டத்தை அமல்படுத்தவும், ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய பணப்பலன்களைகொடுப்பதற்கும் அரசிடம் பணம் இல்லை.

அரசு மருத்துவர்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றவும், பணியின்போது இறந்த டாக்டரின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய, நீதிமன்றம் உத்தரவிட்டும் நிதி இல்லாமல், நியமனம் செய்ய இயலாத நிலையில் கஷ்டப்படுகிறது, அரசு.

ஒப்பந்த முறையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை நிரந்தர பணியில் அமர்த்தவும், முக்கியமாக முத்தமிழ் வித்தகர்கலைஞரின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு,நாடு முழுதும் ஆயிரக்கணக்கான சிலைகளை நிறுவவும், நுாலகங்கள் அமைக்கவும்,மணிமண்டபங்கள் கட்டவும் நிதியின்றி, திராவிட மாடல் அரசு தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், 'டெல்டா மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்' என்று, பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் கோரிக்கை விடுப்பது நியாயமா... உங்களுக்குஎல்லாம் மனசாட்சியே இல்லையா?



நீதிமன்ற சீர்திருத்த மசோதா தேவை!


சு.செல்வராஜன், சரவணப்பட்டி, கோவை மாவட்டத்தில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'கடிதம்: உ.பி.,யில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக வன்முறை கட்டவிழ்க்கப்பட்டபோது, குற்றவாளிகளை தண்டிக்க, அவர்களது குடியிருப்புகளை, புல்டோசர் வாயிலாக இடிக்க, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், 2017ல் உத்தரவிட்டார். டில்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் என பிற மாநிலங்களும், இதை பின்பற்ற துவங்கின.

இந்நிலையில், புல்டோசர்நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.அப்படியெனில், சமூகநல்லிணத்தை சீர்குலைக்கும்விதமாக அரங்கேற்றப்படும்,காட்டுமிராண்டித்தனமானசெயல்களை நீதிமன்றம் நியாயப்படுத்துகிறதா அல்லது மாநில அரசுகள், 'மயிலே மயிலே இறகு போடு' என்று குற்றவாளிகளை மென்மையாக அணுகவேண்டும் என்கிறதா?

சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்கள் புல்டோசருக்குப் பதிலாக, மாற்றுவழி காணமுற்பட மாட்டார்கள் என நினைக்கிறதா?

இன்றைய நாளில், நீதிமன்ற செயல்பாடுகள், மக்களிடம் விவாதப் பொருளாகி வருகிறது. காரணம், குஜராத்தில் போலியாக ஒரு நீதிமன்றம்ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி, நீதி பரிபாலனம் செய்துள்ளது. மணிப்பூரில், இட ஒதுக்கீடுகுறித்த ஒரு நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் தான், இனக்கலவரம் வெடித்ததாக குற்றச்சாட்டு உள்ளது.

இவை எல்லாம் சமகால,சமீபகால நிகழ்வுகள்; சரித்திரமல்ல!

ஆக, நீதிமன்றத்தின் நம்பகத்தன்மை வீழ்ந்து கொண்டிருக்கிறது. இதை, சரிசெய்ய, நீதிமன்ற சீர்திருத்த மசோதாவை பா.ஜ.,அரசு கொண்டுவந்த போது,நீதிமன்றங்கள் எதிர்க்கவே,அம்முயற்சியையே கைவிட்டது.

சரி... நீதிபதிகளின் தீர்ப்புகள் சர்ச்சைக்குரியவையாக மாற என்னகாரணம்? நீதிபதிகளின் தகுதிகுறித்த சந்தேகமா... இல்லை;அவர்களுடைய பொது அறிவு, இந்திய வரலாறு குறித்த புரிதல், அற உணர்வுமீது தான், சந்தேகம்!

அதனால், சட்டக் கல்வியின் பாடத் திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும். அதுமட்டும் அல்ல... ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., போல, ஐ.எல்.எஸ்., அதாவது, 'இந்தியன் லீகல் சர்வீஸ்' கொண்டுவர வேண்டும்.

இந்திய நிர்வாக அதிகாரிகளுக்கான, மத்திய அரசின்தேர்வாணையம், ஐ.எல்.எஸ்., தேர்ச்சி பெற்றவர்களையே நீதிபதிகளாக நியமிக்க வேண்டும்!



களைகட்டும் பார்லி., கேன்டீன்!


என். வைகைவளவன்,மதுரையில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: 'பார்லிமென்ட் கூட்டத்தொடரில்,தமிழகத்தின் நிதி உரிமைகளை பெற, தி.மு.க., -- எம்.பி.,க்கள் மென்மையாகப் பேசக்கூடாது; கடுமையாகப் பேச வேண்டும்...' என்று, 'அட்வைஸ்' செய்துள்ளார், முதல்வர் ஸ்டாலின்.

இதே முதல்வர்தான், சிறிது நாட்களுக்கு முன், 'தி.மு.க., - எம்.பி.,க்கள், பார்லிமென்டில் பேசும்போது, எனக்கு பெருமை தேடித்தரும் வகையில் நடந்துகொள்ள வேண்டும்'என்று, 'அட்வைஸ்' மழைபொழிந்திருந்தார்.

இனி, முதல்வரின் விருப்பப்படி, கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டைகாற்றில் பறக்கவிட்டு, பார்லிமென்டில் மனம்போன போக்கில் இந்த எம்.பி.,க்கள்பேசப்போவது தெள்ளத்தெளிவு!

சும்மாவே ஆடுபவனுக்கு,உடுக்கையும் சேர்த்து அடித்தால் கேட்கவும் வேண்டுமா...

உண்மையிலேயே தமிழகத்திற்கு நிதி வாங்க வேண்டும் என்றால், அதை,இனிமையாகவே பேசி வாங்கலாமே! இரண்டாம் கட்ட மெட்ரோ நிதியை எப்படி கேட்டுப்பெற்றனர்... பார்லிமென்டில் கடுமையாக பேசியா வாங்கினர்?

சரி... எம்.பி.,க்கள் கடுமையாகப் பேசுவதால் மட்டும்என்ன நிகழ்ந்துவிடப் போகிறது?

சபை நடவடிக்கையில் பங்குபெற விடாமல், எம்.பி.,க்களை சபாநாயகர்சஸ்பெண்ட் செய்வார் அல்லது வெளியேற்றுவார். அவர்களும் அங்குள்ள கேன்டீனில் ஆலு பரோட்டாவும், பனீர் டிக்காவும் சாப்பிட்டு, ஜாலியாக அரட்டை அடிக்கப் போகின்றனர்.

காமெடி நடிகர் சந்தானம் ஒரு படத்தில் கூறுவது போல், 'இதற்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருக்கலாம்!'

அது சரி... சட்டசபை தேர்தலுக்கு தி.மு.க., தயாராக ஆரம்பித்து விட்டது. இனி, இதுபோன்று நிறைய, 'மோடி மஸ்தான்' வேலைகளை மக்களாகிய நாம் எதிர்பார்க்க வேண்டியதுதான்!



யாரை த்தான் நம்புவது?


என்.ஏ.நாகசுந்தரம், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில்இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: பா.ம.க.,துவக்கப்பட்டபோது, தமிழக அரசியல் குலுங்கியது உண்மையே. வன்னிய சமூக மக்கள், தங்களுக்கு மிகப்பெரிய விடிவுகாலம் வந்துவிட்டதுஎன்றே கருதினர்.

கட்சியும் வளர்ந்தது; அன்புமணியும் வளர்ந்தார்; 'பா.ம.க., கட்சியில்,வாரிசு அரசியலா... வாயில்அடி, வாயில் அடி...' என்றுபேசிய ராமதாஸ், அன்புமணியைத் தலைவராக்கி, 'அது வந்து... என்ன சொல்லுறது... எனக்கு பின்னால் உங்களை வழிநடத்த என் மகன்...' என பூசி ெமழுகினார்.

வன்னிய மக்களுக்கு, பெரிய முன்னேற்றம் எதுவுமே கிடைக்கவில்லை.

'மாற்றம் முன்னேற்றம்'என்றார் அன்புமணி. அதெல்லாம் அவருக்கு மட்டுமே கிடைத்தது. 'இனி கூட்டணிதான்' என பேரம் பேசி, எட்டாத கனியைப் பிடிக்கும் உத்தியை இப்போது பின்பற்ற முடிவு செய்து விட்டது அக்கட்சி.

தன் சமூக மக்களிடம் செல்வாக்கைப் பெற முடியாத, தன் சமூக மக்கள் மனநிலையை அறிய முடியாத பா.ம.க., எந்த கூட்டணியை, வெற்றிக் கூட்டணி என்று அடையாளம் காணப்போகிறது?








      Dinamalar
      Follow us