sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

மனசாட்சி கிடையாதா?

/

மனசாட்சி கிடையாதா?

மனசாட்சி கிடையாதா?

மனசாட்சி கிடையாதா?

4


PUBLISHED ON : ஜன 13, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 13, 2025 12:00 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கணேசமூர்த்தி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: தமிழகத்தில், இன்றைய தேதியில், 25 காசு, 50 காசு ஆகியவை புழக்கத்தில் இருந்து மறைந்தே போய் விட்டன.

பிச்சைக்காரர்கள் கூட அவற்றை சீண்டுவதில்லை.

பிச்சை கேட்கும் போதே, 'ஒரு டீ வாங்க காசு கொடுங்க' என்றோ, 'நாலு இட்லி வாங்க காசு கொடுங்க' என்றோ தான் கேட்கின்றனர்.

டாஸ்மாக் கடைகளில் கூட, ஒவ்வொரு குவாட்டர் குப்பிக்கும், கூடுதலாக 10 ரூபாய் கொடுக்காமல், சரக்கு கொடுப்பதுஇல்லை.

நிலமை இப்படியிருக்க, ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளில் ஈடுபடுவோர், கார்டுக்கு, 5 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், கார்டுக்கு, 50 காசு வீதம் வழங்க, மண்டல இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி, அத்தொகையை ரேஷன் ஊழியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

வீட்டில் இருக்கும் பெண்களுக்கு, மகளிர் உரிமைத்தொகை என்றும், பள்ளி, கல்லுாரி மாணவ - -மாணவியருக்கு கல்வி உதவித்தொகை என்றும் மாதாமாதம், 1,000 ரூபாயை அள்ளி வீசும் திராவிட மாடல் அரசு, தங்கள் பணி நேரத்தை காட்டிலும் கூடுதலாக பணிபுரிந்து, பொங்கல் பரிசு பொதிகளை வாங்கி, பிரித்து, அடுக்கி வைத்து, கார்டுதாரர்களுக்கு வழங்கும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு மட்டும் கார்டுக்கு, 50 காசு ஊக்கத்தொகை அளிப்பது எந்த விதத்தில் சரி?

ரேஷன் கடை ஊழியர்கள் பிச்சைக்காரர்களை காட்டிலும் கேவலமானவர்களா?

அரசுக்கு மனசாட்சியே இல்லையா?

திராவிட அரசிய லுக்கு முற்றுப்புள்ளி!




அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை, நாகை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'திராவிட இயக்கங்கள் பலவீனப்பட்டால், சனாதன சக்திகள் வலுப் பெறும்' என, அரைத்த மாவையே அரைக்கிறார் திருமாவளவன்.

தனித்து நின்று வெற்றி பெற முடியாத இவர், இந்தியா முழுதும் மக்களின் அங்கீகாரம் பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள ஒரு பெரிய கட்சியை பார்த்து சொல்கிறார்... சனாதன சக்திகள் வலுப்பெறும் என்று!

பூனை கண்களை மூடிக் கொண்டு, 'உலகம் இருண்டு கிடக்கு' என்றதாம்.

அதைப்போல், எத்தனை காலத்துக்கு திருமாவளவன் கண்களை மூடிக் கொண்டு, சனாதனம் சனாதனம் என்று பிதற்றிக் கொண்டிருக்கப் போகிறார்?

தேர்தல் நேரத்தில் மட்டும் சனாதனத்தின் அடையாளமான கோவில்களுக்கு செல்லலாமா?

திருமாவை போன்றவர்களின் இரட்டை வேடத்தை, படித்தவர்கள் புரிந்து கொண்டதால் தான், 2024 லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வின் ஓட்டு சதவீதம் குறைந்தது. நகர்ப்புறங்களில் அ.தி.மு.க.,வை புறந்தள்ளி, பா.ஜ., இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது.

நோட்டாவுடன் போட்டி போடும் கட்சி என்று தி.மு.க.,வினரால் எள்ளி நகையாடப்பட்ட கட்சி, இன்று, 11 சதவீதத்திற்கு தன் ஓட்டு வங்கியை உயர்த்தியுள்ளது.

ஈ.வெ.ரா., மண், மதவாதம், சனாதனம், வெறும் தானம் என்று வெற்றுப்பேச்சு பேசும் தி.மு.க.,வும், வி.சி.,யும் தனித்து நின்று, வெற்றி பெற்றுக் காட்டுங்களேன் பார்ப்போம்...

திராவிட ஆட்சிகளில் சலித்து, அலுத்து, வெறுத்துப்போன மக்கள், ஒரு மாற்றத்தை விரும்புகின்றனர். அந்த மாற்றத்தை, ஒரு குறிப்பிட்ட ஜாதிக் கட்சித் தலைவரான திருமாவால் கொடுத்துவிட முடியுமா?

திராவிட அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வரும்; அப்போது, திராவிட அரசியலால் தலித்துகளுக்கு கிடைக்காத விடியலும், விமோசனமும் பா.ஜ., கட்சியால் கிடைக்கும்!

புதிய விஷயமா என்ன?


எஸ்.சுந்தரேசன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: 'முதல்வர் ஸ்டாலின் மட்டும் கண் ஜாடை காட்டி இருந்தால், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த கவர்னர் ரவியின் கோட் சூட்டை கிழித்து, டிராயருடன் அனுப்பி இருப்போம்' என, கவர்னருக்கு எதிராக ராமநாதபுரத்தில் நடந்த தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி பேசியுள்ளார்.

ஆடைகளை கிழித்து, அலங்கோலப்படுத்தி அனுப்புவது கழகத்திற்கு புதிதா என்ன?

அந்த விஷயத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் ஆயிற்றே கழகத்தினர்...

இதே சட்டசபையில், ஜெயலலிதாவின் சேலை மற்றும் ஜாக்கெட்டை துரைமுருகன் தலைமையில் கிழித்து, அலங்கோலப்படுத்தி, அவமானப்படுத்தி அனுப்பியவர்கள் தானே தி.மு.க.,வினர்!

அஸ்தினாபுரத்து அவையில், பாஞ்சாலியின் ஆடையை துகிலுரிந்து மானபங்கப்படுத்திய துச்சாதனனின் நினைவாக, துரைமுருகனுக்கு, துச்சாதனன் என்ற பட்டப் பெயர் கூட வைக்கப்பட்டிருந்ததே!

அவர்களை சொல்லி குற்றமில்லை...

இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ஓட்டளித்து, வெற்றி பெற வைத்து, சட்டசபைக்கு அனுப்பி வைத்த வாக்காளர்கள் தான், தங்களைத் தாங்களே எதைக் கொண்டாவது அடித்துக் கொள்ள வேண்டும்!

தமிழ்த்தாய் வாழ்த்தை தவிர்க்கலாம்!


ஜி.சூர்ய நாராயணன், விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,வின் கொள்கை வழிகாட்டியான ஈ.வெ.ரா., இந்தியா சுதந்திரம் அடைவதையே விரும்பாதவர்!

வெள்ளையாக இருப்பவன் மட்டுமே அறிவாளி; அவன் பேசும் ஆங்கிலம் மட்டுமே அறிவை தரும் என்று நம்பிய பகுத்தறிவாளர். வீட்டில் வேலைக்காரியிடம் பேசுவதாக இருந்தாலும், ஆங்கிலத்தில் பேசுங்கள் என்றவர்...

'இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்தால் கூட, ஆங்கிலேய அரசு மதராஸ் மாகாணத்தை விட்டுச் செல்ல கூடாது; மதராஸ் மாகாணத்தை இந்தியாவில் இருந்து பிரித்து, ஆங்கிலேயர்களே ஆள வேண்டும்' என்று சொன்னவர்!

இப்படி ஆங்கிலேயர்களின் அடிவருடியாக இருந்த ஈ.வெ.ரா.,வை, தலைவராக கொண்ட தி.மு.க.,விற்கு எப்படி தேசிய கீதம் பிடிக்கும்?

அதனால் தான், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பின், தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று கவர்னர் கேட்டுக் கொண்டது அவர்களுக்கு பிடிக்கவில்லை.

தேசிய கீதத்தை மதிக்காத சபையில், ஆளுங்கட்சியின் பொய் உரையை படிக்க பிடிக்காமல் கவர்னரும் கிளம்பி விட்டார்.

அதெல்லாம் சரி... ஈ.வெ.ரா.,விற்கு தமிழ்த்தாய் வாழ்த்து கூட பிடிக்காதே... 'கடவுள் வாழ்த்து வேண்டாம் என்றால், அதற்கு பதில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவேன்னு சொல்றாணுவ, நீ வாழ்த்து பாடுரதுனால உன் தமிழ்த்தாய்க்கு ரெண்டு கொம்பா முளைச்சுடப் போகுது' என்று, தமிழ் மொழியின் மீது இருந்த வன்மத்தை கக்கியவர் ஆயிற்றே!

அவர் வழியில் ஆட்சி செலுத்தும் திராவிட மாடல் அரசு, இனி வரும் காலத்தில், ஈ.வெ.ரா.,வின் கொள்கையை காரணம் காட்டி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதைக் கூட, தவிர்க்கலாம்!






      Dinamalar
      Follow us