/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கேரளாவை நோக்கி படையெடுக்கும் அ.தி.மு.க.,வினர்!
/
கேரளாவை நோக்கி படையெடுக்கும் அ.தி.மு.க.,வினர்!
PUBLISHED ON : ஜன 22, 2026 03:55 AM

சு டச்சுட காபியை உறிஞ்சியபடியே, ''தமிழக செய்தி - மக்கள் தொடர்புத்துறையைப் பத்தி ஒரு விஷயம் கேள்விப்பட்டீரா ஓய்...'' என, விவாதத்தைத் துவக்கினார் குப்பண்ணா.
''யாரு ஆட்சிக்கு வந்தாலும், அதிகாரத்துல இருக்கிறவங்களுக்கு ஜால்ரா போட்ற டிபார்ட்மென்ட்தானே பா... அதுல என்ன புதுசா இருக்கு...'' என, கேட்டார் அன்வர்பாய்.
''இப்ப அங்கே ஒரு விவகாரம் ஓடிண்டிருக்கு... அரசாங்க விளம்பரத்தை, பத்திரிகை கள்ல வெளியிட்ட ஏஜென்சிகளுக்குச் சேர வேண்டிய, 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை தராம, பாக்கி வச்சிருக்கா...
''அவாளுக்கு பிடிச்ச பத்திரிகைகளுக்கெல்லாம், வகை தொகை இல்லாம விளம்பரத்தைக் கு டுத்துட்டு, கோடிக்கணக்கா கடன் ஏத்திண்டுட்டா... அதனால, அரசு இப்போ சங்கடத்துல நிக்கறது...
''இப்ப ஆட்சி முடியற நேரத்துல, விளம்பரம் வெளியிட்டதற்கான பணம் வருமா, வராதான்னு, ஏஜென்சிகாராங்கலாம் தவியா தவிக்கறா ஓய்... கடைசியா, 30 கோடி ரூபாயை விடுவிக்கச் சொல்லி உத்தரவாகி இருக்குன்னு கேள்விப்பட்டேன்... அதுலயும், யார் யாருக்கு, எவ்வளவு வரும்ன்னு தெரியலேங்கறா ஓய்...' ' என்றார் குப்பண்ணா.
''தி.மு.க., அமைச்சருக்கே இந்த நிலைன்னா பார்த்துக்குமே...'' என, அடுத்த தகவலைத் துவக்கினார் பெரியசாமி அண்ணாச்சி.
''என்ன விவரம்ங்க...' ' எனக் கேட்டார் அந்தோணிசாமி.
''தஞ்சாவூர்ல, பொங்கல் தினத்துல, அரசு சார்பா கலை விழா நடந்துச்சி... விழாவுல உயர்கல்வித் துறை அமைச்சர் செழிய ன் கலந்துக்கிட்டு, விழாவைத் துவக்கி வைச்சாரு... ஆனால், ஒரு எம்.பி., ஒரு எம்.எல்.ஏ.,வாவது வந்திருக்கணுமே... ம்ஹூம்... ஒருத்தரையும் காணோம்... கொஞ்ச நேரம் காத்திருந்த அமைச்சர், 'அப்செட்' ஆகி, கிளம்பிட்டாரு...
''அங்கே வந்திருந்த அதிகாரிகள் பாடு திண்டாட்டமா ஆயிடிச்சு வே...'' என்றார் அண்ணாச்சி.
''எல்லாரும், கேரள ஜோதிடர்களைத் தேடி ஓடுறாங்க பா...'' என கடைசி தகவலைத் துவக்கினார் அன்வர்பாய்.
''எந்த கட்சிக்காரங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.
''கட்சிக்காரங்கன்னு கரெக்டா கண்டுபிடிச்சிட்டீ ங்க... அ.தி.மு.க., வுல, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடராக இருந்தவர், கேரளாவைச் சேர்ந்த உன்னிகிருஷ்ண பணிக்கர்... அதை மனசுல வச்சு, அ.தி.மு.க., வுல நிறைய பேர், கேரளாவை நோக்கி படையெடுக்கிறது வழக்கமா இருந்துச்சு...
''ஜெயலலிதா மறைவுக்குப் பின், கேரளா பக்கம் போறதை, அ.தி.மு.க.,காரங்க மறந்துட்டாங்க... இப்ப தேர்தல் வருதே...யாரோ, பணிக்கரை நினைவுபடுத்தி இருக்காங்க... அவரு ரொம்ப 'பிசி'ங்கிறதுனால, வேற கேரள ஜோதிடர்களை தேடி ஓடுறாங்க... சீட் வேணும்ன்னு கேக்கிறது முதல், பிடிச்ச தொகுதி வேணும், வெற்றி பெறணும்ங்கிற ஆசையை மனசுல வச்சி, ஜோசியம் கேட்டுக்கிறாங்க பா...'' எனக் கூறி முடித்தார் அன்வர்பாய்.
நண்பர்கள் கிளம்பவே, பெஞ்ச் அமைதியா னது!

