PUBLISHED ON : நவ 01, 2024 12:00 AM

அ.அமுதன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாட்டில்அமலில் உள்ள சில சட்டங்களை நினைத்தாலே, சிரிப்பு சிரிப்பாய் வருகிறது.
அமைச்சரவையின் முடிவு கவர்னரை கட்டுப்படுத்தும் என்பதால், முன்கூட்டியேவிடுதலை கோரிய ஆயுள் தண்டனை கைதியின் மனுவை, மீண்டும் பரிசீலிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதாவது, கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சென்னை புழல் சிறையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் வீரபாரதி என்பவரை, முன்கூட்டியே விடுதலை செய்து விடுமாறுஅமைச்சரவை கூடி, முடிவெடுத்ததை கவர்னர் நிராகரித்து விட்டார்.
ஆனால், 'கவர்னர், அமைச்சரவையின்முடிவுக்கு கட்டுப்பட்டவர் என்பதால், அமைச்சரவையின் முடிவை மறுபரிசீலனைசெய்து, வீரபாரதியை முன்கூட்டியே விடுதலை செய்ய, கவர்னர் கையெழுத்திட்டு அனுப்ப வேண்டும்' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆயுள் தண்டனை என்றால் என்ன?
குற்றவாளி செய்துள்ள குற்றமானது, அந்த குற்றவாளி தன் ஆயுள் முழுதும் வருந்தி, சிறையிலேயே இருக்க வேண்டியஅளவுக்கு கடுமையானது. அதனால்,குற்றவாளி மரணமடையும் வரை, சிறையை விட்டு வெளியே வரக்கூடாது என்பது தான், ஆயுள் தண்டனையின் அர்த்தம்.
அமெரிக்க நீதிமன்றங்களிலும், இன்ன பிறஐரோப்பிய நாட்டு நீதிமன்றங்களிலும், குற்றவாளிகளுக்கு, 300 ஆண்டுகள், 400 ஆண்டுகள், 500 ஆண்டுகள் என தண்டனை வழங்குவது, குற்றவாளி ஆயுட்காலம் முழுதும் சிறையிலேயே இருந்தாக வேண்டும் என்பதற்காகத்தான்.
அந்த நாடுகளிலும் தான் அரசியல் உள்ளது; அரசியல்வாதிகள் உள்ளனர். மேலும், அந்நாடுகளில் அரசியல்வாதிகளின் பிறந்த நாளை முன்னிட்டோ, அரசியல்வாதிகளின் பொன்விழா, வைரவிழா,நுாற்றாண்டு விழாக்களை முன்னிட்டோ, கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்தோ, வெளியே வழியனுப்பி வைக்க யாரும் கோருவதில்லை.
இந்த அவலங்கள், நம் நாட்டில் மட்டும்தான் அவ்வப்போது அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. போதாக்குறைக்கு, 'அமைச்சரவை முடிவு கவர்னரை கட்டுப்படுத்தும்' என்ற விதிமுறை வேறு.
நல்ல நாடு! நல்ல சட்டங்கள்!
கல்வியில் நாம் செல்லும் பாதை சரியா?
வெ.சீனிவாசன்,
திருச்சியில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மஹாராஷ்டிரா
மாநிலத்தில்பள்ளிக் கல்வியில், கணிதம்,விஞ்ஞான பாடங்களில் தேர்ச்சி பெற,
இதுவரை இருந்து வந்த குறைந்தபட்ச பாஸ் மார்க், 35க்கு பதிலாக, 20 என முடிவு
செய்யப்பட்டுள்ளது; தரத்தைப் பற்றி கவலைப்படுவார் இல்லை.
தமிழகத்திலும்
மாணவர்கள்வருகை குறைபாட்டைநீக்க, சாப்பாடு போடுகிறோம்;
வினாத்தாள்களைஎளிமையாக்குகிறோம்; போனஸ் மார்க் போடுகிறோம்; மாணவர்களை
கண்டிக்கும் ஆசிரியர்கள்மீது நடவடிக்கைஎடுக்கிறோம்... ஆனாலும்,கல்வியின்
தரம் உயரவில்லை. பல மாணவர்களால் தமிழைக் கூட சரியாக எழுத
முடிவதில்லை;பிழையின்றி படிக்கமுடிவதில்லை.
அரசியல்வாதிகள் பலர்,பல
ஏக்கர்களில் பள்ளிகள்,கல்லுாரிகள், பயிற்சி மையங்கள் எனக் கட்டி, வருவாய்
பார்ப்பதில் தான்குறியாய் இருக்கின்றனர்; ஆசிரியர் பற்றாக்குறை,
அவர்களுக்கு போதுமான அளவு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுதல் என, சிறந்த,
தரமான படிப்புக்கான மூலாதாரங்களை பிடுங்கி விட்டனர்.
போதாக்குறைக்கு,கல்வித் தரத்தை உயர்த்த மத்திய அரசு கொண்டு வரும் முயற்சிகளுக்கும்எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
தரம்
இல்லாத படிப்பை முடித்தவர்களுக்கு, திறன் குறைவாக உள்ளவர்களுக்கு,
மாநிலத்திற்குள்ளேயோ அல்லது பிற மாநிலங்களிலோ அல்லது வெளிநாடுகளிலோ,
பணிகள்,ஊதியம் எப்படி கிட்டும்?
'எங்கள் மாநிலத்தில் படித்தவர்கள் அதிகம்; கல்வியை அனைவருக்கும்கொண்டு சேர்த்து விட்டோம்'என்று அரசு வேண்டுமானால்கூறிக் கொள்ளலாம்.
கல்வியைப்
பொருத்த அளவில் நாம் செல்லும் பாதை சரிதானா; இல்லையென்றால் என்னென்ன
மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்கிறகட்டத்திற்கு வந்து விட்டோம் என்று
தான் தோன்றுகிறது.
மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதுபாவம்.
கல்வித் தரம் உயர்ந்தால், மேல்படிப்புக்காக வெளிநாட்டுக்கல்லுாரிகளை தேடிச்
செல்லும் மோகமும் குறையும்.
ஆன்மிகம் இன்றி அரசியல் இல்லை!
சி.கார்த்திகேயன்,
சாத்துார்,விருதுநகர் மாவட்டத்திலிருந்துஅனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'தமிழகத்தில் அரசியலில் ஆன்மிகம் என்றுமே கலக்காது' என,துணை முதல்வர்
உதயநிதிகூறியுள்ளார். ஆனால், ஆன்மிகவாதிகளை பகைத்தவர்கள்,
அரசியலில்தோல்வியுற்று, பின்னர்ஆன்மிக தலைவர்களின் உதவியுடன் வெற்றி
பெற்றனர் என்பது வரலாறு.
ஜெயலலிதா இரண்டாவதுமுறை, 2001ல் ஆட்சி
அமைத்தபோது, சில விஷயங்களை செய்து பார்த்தார்; 2004 லோக்சபாதேர்தலில், 100
சதவீதம் தோல்வி அடைந்தார். உடன்அந்த விஷயத்தை கைவிட்டு,அனைத்து
மதத்தினரையும் அரவணைத்து செல்லத் துவங்கினார் என்பது வரலாறு.
தமிழகத்தில்
மன்னராட்சிமுதல், தற்போது உள்ள காலகட்டம் வரை, ஆன்மிகம் இன்றிஅரசியல்
இல்லை என்ற நிலையே நீடிக்கிறது. எவ்வாறெனில், மன்னராட்சிகாலத்தில் ராஜகுரு
என்று ஒரு பதவி உண்டு. அப்பதவிக்கு,ஆன்மிகத்துடன், எதிர்காலத்தை கணிக்கும்
திறமை உள்ளவர்களே, மன்னருக்கும், அமைச்சரவைக்கும் ஆலோசனைகள்வழங்குவர்.
தற்போது
கூட,ஆதீனங்கள், சாமியார்கள்என பலர், அரசியல்வாதிகளுடன்
நெருக்கமாகவேஇருக்கின்றனர்; சிலர், கட்சிசார்ந்து கூட செயல்படுகின்றனர்.
இப்படி பாரபட்சமாக நடந்து கொள்ள வேண்டாம் என்றாலும், ஆன்மிகம் இன்றி
அரசியல்என்றும் தனித்து செயல்பட முடியாது.
கனிம வளம் கைகொடுக்கும்!
ஜி.எம்.சாமி,
கோவையில்இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: 'டாஸ்மாக்'
கடைகளைமூடினால் ஏற்படும் வருவாய் இழப்பை சரிசெய்ய, பல வழிகள் உண்டு.
மாநிலங்களில்,
கனிமங்களை வெட்டி எடுத்து விற்பனை செய்வோருக்குவரி விதிக்க, சம்பந்தப்பட்ட
மாநில அரசுகளுக்கு அனுமதி அளித்துள்ளது உச்ச நீதிமன்றம். கனிமத்தின்
தன்மையைப் பொறுத்து இது மாறுபடலாம். கனிமவள வரியை வைத்து, ஒவ்வொரு
மாநிலமும் உபரி பட்ஜெட்டே போடலாம். அந்த அளவு வருவாய் ஈட்ட வழி
பிறந்திருக்கிறது.
தமிழகத்தில் ஆண்டு தோறும் பல ஆயிரம் கோடி ரூபாய்
மதிப்புக்கு வருவாய் ஈட்டலாம் என, இந்திய கனிமவள நிர்வாகம்
கணக்கிட்டுள்ளது.இனிமேல், மதுபான ஆலைகளை மூட அரசு யோசிக்க வேண்டுமா என்ன!