PUBLISHED ON : அக் 08, 2024 12:00 AM

என்.மல்லிகை மன்னன், மதுரையில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்தியாவிலேயே முதல்வர் ஸ்டாலின் தான் தலைசிறந்த முதல்வராகச் செயல்படுகிறார் என்று, தி.மு.க.,வினர் தம்பட்டம் அடிக்கின்றனர். ஆனால் ஆசிரியர்களுக்குசம்பளம் கூட கொடுக்க முடியாத பரிதாபநிலை தான், இன்று பெரிய அளவில் பேசப்படும் பிரச்னையாக இருக்கிறது.
கல்வித்துறையில், சி.இ.ஓ., - டி.இ.ஓ., போன்ற பணியிடங்களும், சட்டக் கல்லுாரிகளில் பேராசிரியர் பணி இடங்களும் காலியாக உள்ளன.
ஒரு பக்கம் ஏராளமான பணி இடங்கள்நிரப்பப்படாமல் காலியாக உள்ளன; இன்னொரு பக்கம் பணிபுரியும் ஊழியர்களுக்குமாதாமாதம் சம்பளம் கொடுக்க முடியாத அவலநிலை நீடிக்கிறது.
இந்த லட்சணத்தில், 'புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், இல்லம்தேடி மருத்துவம்' என்று நிறைய திட்டங்களை, தன் இஷ்டத்திற்கு அறிவித்திருக்கிறது திராவிட மாடல் அரசு.
கடுமையான நிதி நெருக்கடிக்கு காரணமாக, 'மத்திய அரசு தர வேண்டியநிலுவைத் தொகையை தராமல் இழுத்தடிக்கிறது' என்று குற்றம் சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
மத்திய அரசு அறிவித்த தேசிய கல்விக் கொள்கையை திராவிட மாடல் அரசு ஏற்று அமல்படுத்தி இருந்தால், ஆசிரியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் தடையின்றி கிடைத்திருக்கும்.
திராவிட மாடல் அரசின் வறட்டுப் பிடிவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பது ஆசிரியர்கள் மட்டுமே!
'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வு ஊதியத் திட்டத்தை அமல்படுத்துவோம்' என்று, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் காற்றோடு கலந்து விட்டன.
எத்தனை காலம் தான் ஆசிரியர்களையும்,அரசு ஊழியர்களையும் திராவிட மாடல் அரசு ஏமாற்ற முடியும்?
விஜயகுமாருக்கு 'அண்ணா பதக்கம்?'
எஸ்.நெல்லையப்பன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருநெல்வேலி,
தியாகராஜ நகர், 13வது குறுக்கு தெருவில்,'ஆஸ்திக சமாஜம் டிரஸ்ட்'உள்ளது.
செப்.,21ல் அங்கு நடந்த பஜனைக்கு அகிலேஷ், 24, சென்று இருக்கிறார்.
டி.வி.எஸ்.,நகர் அருகே தன் பூணுாலை,டூ -- வீலரில் வந்த நான்கு பேர்
அறுத்ததாக அகிலேஷ்கூறி இருக்கிறார்.
இந்நிலையில், அகிலேஷ்வீட்டுக்கு
மத்திய இணையமைச்சர் சென்று, பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்தித்து,
அவர்களின் பாதுகாப்புக்கும், குற்ற சம்பவம் குறித்தும் விரைந்துநடவடிக்கை
எடுக்க முயற்சிப்பதாக தெரிவித்ததோடு, 'திருநெல்வேலியின்மையப் பகுதியில்
பூணுால்அறுப்பு சம்பவம் நடந்துள்ளது.
அகிலேஷ் என்ற இளைஞரை
வழிமறித்து, பூணுால் அறுத்து,'கொன்று விடுவோம்' என மிரட்டி உள்ளனர்.
தமிழகத்தில் சட்டம் --ஒழுங்கு மோசமாகி விட்டது என்பதற்கு, இந்த சம்பவமும்
ஒரு உதாரணம். அச்செயலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து,
சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்' என கூறியுள்ளார்.
'இந்த
விஷயத்தில் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் விசாரணை மேற்கொண்ட போலீசார்,
அங்குள்ள, 'சிசிடிவி' காட்சிகளில் அலசிஆராய்ந்ததில், இதுபோன்றசம்பவம்
அங்கு நடந்ததாகபதிவுகள் இல்லை என்று தெரிய வருகிறது' என்று கூறும் சிலரின்,
'மைண்ட் வாய்ஸ்' கேட்காமல் இல்லை.
'உலகின் தலைசிறந்தமுதல்வராக
திகழும் மு.க.ஸ்டாலினின்நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும்
நோக்கிலும்,ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அமெரிக்காபோன்ற நாடுகளும் கூட,
தமிழக அரசின் நிர்வாகத்திறனை பாராட்டிப் போற்றிப்புகழ்ந்து கொண்டிருக்கும்
நிலையில், இது போன்ற பொய் செய்திகளை பரப்பலாமா?' என்றெல்லாம்கேட்டு, சிலர்
போர்க்கொடிதுாக்குவர்.
நடந்தது என்னஎன்பது, யாருக்குமேபுரியவில்லை.
ஆக, உதவி கமிஷனர்விஜயகுமாருக்கு, 'அண்ணா பதக்கம்' கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!
மாலை யா, மண்ணா... மக்களுக்கே வெளிச்ச ம்!
அ.சேகர்,
கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசியலில்என்றுமே,
கோலிவுட் நட்சத்திரங்களுக்குதனியிடம் உண்டு. எம்.ஜி.ஆர்., -
எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர், தி.மு.க.,வுக்காக பாடுபட்டவர்கள். உதயசூரியன்
சின்னத்தை மக்கள் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும் என்று, அதிக முயற்சி
மேற்கொண்டவர் எம்.ஜி.ஆர்.,
காங்கிரசை விரட்ட, கருணாநிதி மேற்கொண்ட முயற்சிகள் தனி.
ஆனால், சிவாஜியால் அரசியலில் சோபிக்க முடியவில்லை.
பின்
வந்த, டி. ராஜேந்தர்,பாக்யராஜ், ராமராஜன், சரத்குமார், கமல்ஹாசன்,
கார்த்திக் போன்றோர், ஆர்வத்தில் கட்சியைத் துவக்கி பின் காலாவதி ஆகி
விட்டனர்.
ரஜினி, கட்சி துவக்கப் போவதாக அறிவித்து எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு பின், மிகப் பெரிய ஜகா வாங்கினார்.
விஜயகாந்த்தை
மட்டும்மக்கள் இன்னும் மறக்கவில்லை. அவரின் வாரிசுகள்அந்த யோகத்தை
முதலீடாகக் கொண்டு மிச்சம் மீதி காலத்தை ஓட்டி வருகின்றனர்.
இவ்வளவு
களேபரங்கள்ஆன பிறகும், தைரியமாய்கட்சியைத் துவக்கி இருக்கிறார் நடிகர்
விஜய். கட்சிக்கான பிள்ளையார் சுழி போடும்போதே, தி.மு.க., ஏகப்பட்ட
கட்டைகளைப் போட்டுக் குவிக்கிறது.
இதனால், வெற்றி வாகை சூடி மகிழப்
போவதான நினைப்பில்இருக்கிறார் விஜய். 2026 சட்டசபை தேர்தல் இவரை மாலை
போட்டு வரவேற்கப் போகிறதா இல்லைமண்ணை கவ்வ வைக்கப் போகிறதா...மக்களுக்கே
வெளிச்சம்!
அமெரிக்கா போல் இங்கு அமைப்பாரா?
டி.கே.மோகன்,
சென்னையில்இருந்து எழுதுகிறார்: கடந்த சில மாதங்களுக்கு முன் நானும்
அமெரிக்கா,கலிபோர்னியா, டல்லஸ் போன்ற இடங்களுக்கு சென்று வந்தேன்.
அரசே,
அருகிலுள்ள குடியிருப்பு மாணவ - மாணவியருக்கு ஒன்று முதல் 12ம் வகுப்பு
வரை வாகன வசதியுடன், இலவச கல்வி அளித்து வருகிறது. போக்குவரத்து காவலர்
எங்கும் இல்லை. வழியெங்கும் காணப்படும் மேம்பாலங்களில் எந்த வித சுவரொட்டி
விளம்பரமும் இல்லை.
சாலைகள் அருமையாகபராமரிக்கப்படுகின்றன;நீர்நிலைகள் அருமையாக உள்ளன.
தமிழக
முதல்வர் ஸ்டாலினும், கலிபோர்னியாஅமெரிக்கா பயணத்தின்போது இவற்றை
கவனித்திருப்பார் என நம்புகிறேன். தமிழகத்திலும்அதே நிலையை உருவாக்குவாரா
ஸ்டாலின்?

