sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

புளுகு எத்தனை நாளைக்கு?

/

புளுகு எத்தனை நாளைக்கு?

புளுகு எத்தனை நாளைக்கு?

புளுகு எத்தனை நாளைக்கு?

3


PUBLISHED ON : நவ 25, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 25, 2024 12:00 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கே.கணேசன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தனிப்பட்ட காரணங்களுக்காக நடக்கும் கொலைகளுக்கும், சட்டம் --- ஒழுங்குக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை' என, தி.மு.க.,அமைப்புச் செயலர், ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

திராவிட மாடல் அரசுக்காக, அவர் வக்காலத்து வாங்குவதில், வியப்பேதும் இல்லை; அவ்வாறு வாங்காமல் இருந்தால் தான் வியப்பு.

அவர் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்... தமிழகத்தில் மட்டுமல்ல, உலகில் எந்த நாட்டின், எந்த மூலையில் கொலை நடந்தாலும், அது தனிப்பட்ட காரணங்களுக்காகத் தான் நிகழுமே தவிர, பொது காரணத்துக்காக நிகழாது.

ஆர்.எஸ்.பாரதி, ஒரு வழக்கறிஞராகஇருந்து கொண்டு, இந்த சாதாரண விபரம் கூட தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

அரசியல் கொலைகளும் கூட, கட்சி தலைமையின் பதவியை காப்பாற்ற, தனிப்பட்ட காரணத்திற்காக நடத்தப்படும் கொலை தானே தவிர, பொதுக் காரணத்துக்காக நிகழ்த்தப்படும் கொலை அல்ல.

கழகத்தின் அமைப்புச் செயலரான இவர், இனி, எதிர்காலத்தில் இப்படிக் கூட சொல்லலாம்...

'தமிழகத்தில் நிகழும் நல்ல காரியங்கள் அனைத்துக்கும், 'திராவிட மாடல்' அரசு தான் காரணம். அதே சமயம், தமிழகத்தில் நடைபெறும் திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை, மோசடி, சைபர் குற்றங்கள், பாலியல் பலாத்காரம் போன்ற அனைத்து துர்சம்பவங்களுக்கும் மத்திய அரசு தான் காரணம்!' என்று அறிக்கை விடலாம்!

'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு!'என்பது போல், ஆர்.எஸ்.பாரதியின் புளுகுஎத்தனை நாளைக்கோ!

விழித்து கொள்வாரா விஜய்!


ச.ஜான் பிரிட்டோ, திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய,'இ - -மெயில்' கடிதம்: 'குற்றம்கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்கள் உண்டு'என, திருவிளையாடல் படத்தில், தருமியாக நடித்த நடிகர் நாகேஷ், நக்கீரராக நடித்தவரை பார்த்து கூறுவார். அதே அஸ்திரத்தை, தி.மு.க., தற்போது கையில் எடுத்து அரசியல் செய்து வருகிறது.

'நாட்டில் குற்றங்கள் அதிகரித்து விட்டதே!'என கேட்டால், அண்டைமாநிலங்களை ஒப்பிட்டு, தமிழகத்தில் குறைவாகவேநிகழ்கிறது எனக்கூறி தப்பித்து கொள்கின்றனர்,ஆட்சியாளர்கள்!

இதே பாணியை,நடிகர் விஜயிடம் காட்டி வருகிறது, தி.மு.க.,வின்ஐ.டி., விங்...

சமீபத்தில், மருத்துவர் ஒருவரை நோயாளியின் உறவினர் கத்தியால் குத்திய வன்முறை சம்பவம், தமிழகத்தையேபதற வைத்தது.

அதற்கான, சட்டம் - ஒழுங்கு சீர் கேட்டை முன்னிறுத்தாமல், போக்கிரி படத்தில் அவசரத்திற்கு மருத்துவம் செய்யாத டாக்டரை, விஜய்கத்தியால் குத்தி, கையை கிழிக்கும் காட்சியை விளம்பரப்படுத்தி, அதே பாணியில் நிகழ்ந்த வன்முறை சம்பவம் என, குறிப்பிட்டு வருகின்றனர்.

அதாவது, மருத்துவரைதாக்கிய நபரின் நடத்தைக்குமுன்னோடி, நடிகர் விஜய்தான் என்ற ரீதியில் திட்டமிட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது, தி.மு.க., - ஐ.டி., விங்!

இப்படியே போனால், நாளை தமிழகத்தில் நடக்கும் அனைத்து வன்முறைகளுக்கும், விஜய் படங்களின் காட்சியை முன்னிறுத்தி, அரசியலில் அவருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த,தி.மு.க., முயற்சி செய்யும்.

இத்தகைய கீழ்த்தரமானஅரசியலில் இருந்து தப்பிக்க, விஜய் உஷாராகஇருக்க வேண்டும்.

நிலவரம் புரியாமல், விஜய் அரசியல் நடத்தி வந்தால், அது தேய்பிறைசந்திரனை போல், ஒளிமங்கி நாளடைவில் பொலிவிழந்து விடும்.

'அஞ்சுவது அஞ்சாமைபேதமை' என்ற குறளுக்குஏற்ப, கண்மூடித்தனமானதைரியத்தில் அரசியல் நடத்தாமல், திட்டமிட்டு, பலமான கூட்டணிஉடன் தேர்தலைசந்தித்தால், அரசியலிலும் அவருக்கு வெற்றி ஏற்படும். இல்லையேல், நடிகர்கள் சிவாஜிகணேசன்,டி.ராஜேந்தர், சரத்குமார், விஜயகாந்த், கருணாஸ் வரிசையில், விஜயின்கட்சியும் தமிழக அரசியலில்கானல் நீராகி மறைந்து விடும்!

பாவம் அரசு ஊழியர்கள்!


என்.மல்லிகை மன்னன்,மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் ஓய்வூதிய இயக்குனரகம்,தகவல் தொகுப்பு விபர மையம், சிறு சேமிப்பு இயக்குனரகம் போன்ற மூன்று துறைகள் கருவூலங்கள் கணக்குத் துறையுடன் இணைக்கப்பட்டதற்கு, வழக்கம் போல எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்தெரிவித்துள்ளனர்.

திராவிட மாடல் அரசு, அவசரம் அவசரமாக இதை ஏன் செய்தது எனத் தெரியவில்லை. கல்விக்கு என, பள்ளிக்கல்வி, உயர் கல்வி என்று இரண்டு துறைகளும், இரண்டு அமைச்சர்களும் இருக்கின்றனர்.

காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., - ஜெ., ஆட்சியில் எல்லாம் கல்வி அமைச்சர் என்று ஒருவர் மட்டுமே இருந்தார்.ஆனால், கருணாநிதியின்,2006ம் ஆண்டு ஆட்சியில்தான் பள்ளிக் கல்வி, உயர் கல்வி என இரண்டாக பிரித்தனர். தற்போது, ஸ்டாலின் அரசில், பொதுப்பணித் துறையில் இருந்து நீர்வளத் துறையை தனியே பிரித்து, ரெண்டு அமைச்சர்களாக்கி விட்டனர்.

அன்றைய காமராஜர்ஆட்சியில், மொத்தம் ஏழு அமைச்சர்கள் மட்டுமே இருந்தனர். இந்த ஏழு அமைச்சர்களை வைத்து தான், அவர் லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியை நடத்தினார்.

அமைச்சர்கள் விஷயத்தில்கணக்கு பார்க்காத முதல்வர் ஸ்டாலின், அதிகாரிகள் விஷயத்திலும்,அவர்கள் வகிக்கும் துறைகளின் எண்ணிக்கையிலும் சிக்கனம் பார்ப்பது,எந்த வகையில் நியாயம் என்றே தெரியவில்லை.

இப்படி, மூன்று துறைகளை திராவிட மாடல் அரசு இல்லாமல் செய்து விட்டதை பற்றி, தி.மு.க., கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எந்தக் கருத்தும் சொல்லாமல் அடக்கியே வாசிக்கும் என்பதில் ஐயமில்லை.

திராவிட மாடல் அரசின்இந்த நடவடிக்கையை கண்டித்து, அரசு ஊழியர்கள் கொதித்து எழுந்தாலும்,அரசு தன் முடிவை மறுபரிசீலனை செய்யுமா என்பது கேள்விக்குறி தான்.

அரசு ஊழியர்களின் பிரதான கோரிக்கையான,பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதில் அக்கறை காட்டாத திராவிடமாடல் அரசு, அரசு துறைகளின் எண்ணிக்கையை குறைப்பதில் மட்டும் தீவிரம் காட்டுகிறது.

'மீண்டும் ஆட்சிக்கு வருவோம்' என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில், திராவிட மாடல் அரசு இப்படியான தடாலடி நடவடிக்கைகளில் இறங்கி விட்டது போலும்.பாவம்... இவர்களை நம்பி ஓட்டு போட்ட அரசு ஊழியர்கள்!






      Dinamalar
      Follow us