sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

எத்தனை 'ஆப்'புகள்... அனைத்திற்கும் 'ஆப்பு' தான்!

/

எத்தனை 'ஆப்'புகள்... அனைத்திற்கும் 'ஆப்பு' தான்!

எத்தனை 'ஆப்'புகள்... அனைத்திற்கும் 'ஆப்பு' தான்!

எத்தனை 'ஆப்'புகள்... அனைத்திற்கும் 'ஆப்பு' தான்!

3


PUBLISHED ON : ஜன 07, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 07, 2024 12:00 AM

3


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எத்தனை 'ஆப்'புகள்... அனைத்திற்கும் 'ஆப்பு' தான்!


முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்தலின் போது, அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணமோ, பரிசோ கொடுத்தால், மொபைல் போனில் படம் பிடித்து, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பும் வகையில், ஒரு 'ஆப்'பை வைத்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

திருமங்கலம் பார்முலா முதல் திணறடிக்கும் பார்முலா வரை எத்தனை எத்தனை வகை கண்டோம்... ஏதாவது ஒன்றையாவது தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடிந்ததா? இல்லையே!

இப்போது இந்த, 'ஆப்' எதற்கு? ஓட்டுக்கு துட்டு வாங்குபவர்கள், புகார் அளிக்கவா போகின்றனர்?சிலரோ, 'ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே...' ரகம்.

பெரிய நகரங்களில், மெத்தப் படித்தவர்கள், படிதாண்டா உத்தமர்கள்; வாக்குச்சாவடி பக்கமே தலைவைத்து படுக்க மாட்டார்கள்.எல்லாவற்றிற்கும் மேலாக, ஆணையமும் ஒன்றும், சீசரின் மனைவி மாதிரி

சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது அல்ல!திராவிடக் கட்சிகள் இத்தனை ஆண்டுகளாக மக்களிடம் சுரண்டியதை, நாங்கள் ஓட்டுக்கு துட்டு வாயிலாக திரும்பக் கேட்கின்றனர் என சிலர் கூறுவதை,

என்னென்று சொல்வது!ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு... 'சலுகையாய் தந்ததை உரிமையாய் அனுபவித்தல்' என்று... அதுபோல, ஆரம்பத்தில் இலவசங்களையும், பணத்தையும் அரசு தரும் சலுகையாய் நினைத்த குடிமக்கள், இன்று அதை உரிமையாய் பார்க்கத் துவங்கி விட்டனர். இனி எந்த கொம்பன் வந்தாலும், காசில்லை என்றால் ஓட்டு இல்லை!

கடந்த தேர்தலில், ஒரு கிராமமே ஓட்டு போடாமல் இருந்தது; காரணம் கேட்டதற்கு, 'எப்படி போடுவோம்... இன்னும் பணம் வரவில்லையே...' என்றனர். ஆக சட்டபூர்வமாக்கப்பட்ட இந்த லஞ்சம், இன்று தேசிய மயமாக்கப்பட்டு விட்டது என்பது தான் கசப்பான உண்மை!

இனி, எத்தனை, 'ஆப்'புகள் வந்தாலும், அத்தனைக்கும், 'ஆப்பு' தான் கிடைக்கும் இங்கே!

இலவசங்களுக்காக ஏங்க வைத்தது யார்?



பி.ஜோசப், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்தியாவில், தமிழகம் உட்பட 28 மாநிலங்கள், எட்டு யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இவை அனைத்திலும் வாழும் மக்கள், ஆண்டுதோறும் தை முதல் தேதியை, தமிழகத்தில் பொங்கல் எனவும், பிற மாநிலங்களில் மகர சங்கராந்தி எனவும் சூரிய வழிபாடு நடத்தி, கொண்டாடுகின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள, 2 கோடியே 20 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.நாட்டின் பிற மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள், மகர சங்கராந்தி கொண்டாட பரிசு தொகுப்பு எதையும் கொடுப்பதாக தெரியவில்லை.அந்த அரசுகளும், மக்களை பிச்சைக்காரர்களாக கருதவில்லை. தமிழகத்தில் மட்டும் தான் இந்த கொடுமை, திராவிட மாடல் ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு பின்பற்றப்படுகிறது.இப்படி அரசு அளிக்கும் இலவசத்தால் தான், பொங்கலை கொண்டாட வேண்டுமா? 100 - 150 ரூபாய் செலவழித்து கொண்டாட இயலாத நிலையில் தான், திராவிட கட்சிகள் கடந்த 56 ஆண்டுகளாக நம்மை ஆட்சி செய்கின்றன.

இதை எண்ணி தமிழக மக்கள் வெட்கமோ, வேதனையோ படுவதில்லை; மாறாக, பொங்கல் தொகுப்புடன், முந்திரி, திராட்சை, ஏலக்காய், மஞ்சள் கொத்து, ரொக்கமாக பணமும் கொடுக்கவில்லையே என, கவலைப்படுகின்றனர்.

இப்படி, இலவசங்களுக்காக மக்கள் ஏங்கும் காலம் என்று முடிவுக்கு வருகிறதோ, அன்றே திராவிட கட்சிகளின் சகாப்தமும் முடிவுக்கு வந்து விடும்.

பெருமை சேர்க்கிறார் தம்பிரான் சுவாமிகள்!



அ. அப்பர்சுந்தரம், மயிலாடுதுறையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழ் மற்றும் சைவம் வளர்த்த தருமபுரம் ஆதீனத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், தமிழில் பிஎச்.டி., என்ற முனைவர் பட்டத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், பிரதமர் மோடியிடம் பெற்ற, தருமை ஆதீன தென் மண்டல கட்டளை விசாரணை திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகளை, அனைவரும் போற்றுவோம்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடையில் பிரதமர், கவர்னர், முதல்வர், இவரை மனதார நெகிழ்ந்து பாராட்டியது மிகச் சிறப்பு. முந்தைய காலத்தில் நம் தேசத்தையும், சமுதாயத்தையும் நல்வழிபடுத்தியவர்கள் மதத் தலைவர்கள் தான் என்பதும் இதன் வாயிலாக உறுதியாகிறது.

குருமார்கள், சிறந்தவர்களாக, ஒழுக்க சீலர்களாக, அறிவில் சிறந்தவர்களாக, பண்பும், அன்பும், வீரமும், விவேகமும் உடையவர்களாக இருக்க வேண்டும். அதற்கு முன் உதாரணமாக, ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் உட்பட எண்ணற்றோர் வழிகாட்டியுள்ளனர்.

அவ்வழியில், கல்வி ஞானத்தில் சிறந்து, மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், முனைவர் பட்டம்

பெற்றிருக்கிறார்.

எல்லாமதத்தவருக்கும் அயோத்தி கோவில்!


ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கடந்த, 500 ஆண்டுகளாக நாம் குரான் ஓதிய இடத்தை இழந்து விட்டோம்' என்ற கருத்தை, ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவரும், ஹைதராபாத் தொகுதி எம்.பி.யுமான ஓவைசி தெரிவித்து சர்ச்சையை எழுப்பியுள்ளார்.

அயோத்தியில் ராமர் பிறந்த இடமான, ராம ஜென்ம பூமியில் கட்டப்பட்ட ஒரு ஹிந்து கோவில், முஸ்லிம் மன்னர்களின் சர்வாதிகார போக்கால் இடிக்கப்பட்டது என்பது, அனைவரும் அறிந்ததே.முஸ்லிம்களின் மன்னராட்சி காலத்தில் இடித்து சேதப்படுத்தப்பட்ட ஹிந்து கோவில்கள் எண்ணிலடங்காதவை. அதற்கு, ஹிந்துக்கள் பழி வாங்கவில்லை. ஹிந்து மதத்தின் முக்கியக் கடவுள் ராமர் பிறந்த பூமியான அயோத்தியில் தான், தங்களது பழைய கோவிலை மீட்டுக் கொள்ள நினைத்தனர்.அதற்காக, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், ராம ஜென்ம பூமியை மீட்டெடுக்கவும், குழந்தை ராமருக்கு கோவில்

கட்டவும் ஒரு புதிய இயக்கத்தை துவக்கினர்.நீதிமன்றத்தில் பல்லாண்டுகளாக போராடி, தீர்ப்பை பல நீதிபதிகள் கூறிய பின், வரலாறு, தொல்லியல் துறை என்று பலர் ஆதாரப்பூர்வமாக ஆராய்ந்து சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் தான் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் ஹிந்துக்களுக்கு என்றில்லை, எல்லா மதத்தினருக்கும் என்பதை, ஓவைசி போன்ற தலைவர்கள் புரிந்து கொள்ள

வேண்டும்.

நோகாமல் ஆட்சி செய்ய விரும்புவதா?


என்.ராமகிருஷ்ணன், பழனி, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: 'வெள்ள நிவாரண நிதிக்கு, அவர்கள் அப்பன் வீட்டு பணத்தையா கேட்கிறோம்?' என்று, சொல்லின் செல்வர் உதயநிதி கேட்டார். அதற்கு, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகுந்த பதிலடியும் கொடுத்தார்.

'சென்னையில், 81 கோடி ரூபாய் செலவில் கடலில் பேனா சின்னம், தலா 40 கோடி ரூபாய் செலவில் கருணாநிதிக்கு நினைவிடம், பூங்கா அமைக்க ஏற்பாடு செய்வது, யார் அப்பன் வீட்டு பணத்தில்?'பேராசிரியர் அன்பழகனுக்கு சிலை, வடமாநிலத்தை சேர்ந்த வி.பி.சிங்கிற்கு சென்னையில் சிலை வைத்தது யார் அப்பன் வீட்டு பணத்தில்' என்று, மக்கள் கேட்கின்றனரே. இதற்கு உதயநிதி தக்க பதில் சொல்வாரா?

வி.பி.சிங்கிற்கும், தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம், வடமாநிலத்தில் கருணாநிதிக்கு சிலை வைக்க இவர்களுக்கு துணிச்சல் உள்ளதா? விளையாட்டு துறைக்கு மட்டும் அமைச்சராக இருக்கும் உதயநிதி, தமிழகம் முழுதும் அனைத்து அரசு விழாக்களிலும் பங்கேற்று அதிகாரிகளுக்கு கட்டளையிடுகிறார். இந்த அதிகாரத்தை யார்

கொடுத்தது?இதற்கு முன், உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த ஸ்டாலினும் இதைத்தான் செய்தார். இதற்கு பெயர் தான் ஜனநாயக படுகொலை.'பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்' என்பது போல, பிறர் ஆட்சியின் போது, நிம்மதியாக ஆள விடாமல் தொல்லைகள் கொடுப்பர். இவர்கள் ஆட்சியில் மட்டும், அடிக்கும் எல்லா கூத்துகளுக்கும் எதிர்க்கட்சிகள் ஆதரவு தர வேண்டுமாம்.கூட்டணி கட்சிகள், பொதுமக்கள், அண்டை மாநிலங்கள், மத்திய அரசு என அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமாம்; இவர்கள் நோகாமல் ஆட்சி செய்வராம். இது என்ன நியாயம்?

இந்நிலை நீடித்தால், லோக்சபா தேர்தலில் தி.மு.க., மண்ணை கவ்வுவது உறுதி!

பிரதமர் வேட்பாளர் பதவிக்கு தான் போட்டி!


ஆர். பரத்வாஜ், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:எல்லாருக்கும் ஏதாவது ஒரு ஆசை, லட்சியம் இருப்பது இயற்கை. அதுதான், வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் இழுத்துச் செல்லும். அரசியலில் ஆசைகளுக்கு பஞ்சமே இல்லை. 'இண்டியா' கூட்டணியின் துவக்கம் முதல், பிரதமர் வேட்பாளர் யார் என்ற போட்டி இருக்கிறது.

கூட்டணி துவக்க விழாவில், எங்கு பார்த்தாலும் பிரதமர் வேட்பாளர்களாக ஜொலித்தனர். நிதீஷ் குமார், ராகுல், மம்தா, கெஜ்ரிவால், சரத் பவார் என, பிரதமர் வேட்பாளர் பட்டியல் நீண்டது. தமிழகத்தில் சில உடன் பிறப்புகள், 'ஸ்டாலின் தான் பிரதமர்' என அங்குமிங்கும் சவுண்ட் கொடுத்தது தனி கதை.

இந்நேரத்தில் தான் ஒரு திருப்பம் வந்தது...டில்லி கூட்டத்தில் தான் உண்டு, தன் வேலை உண்டென இருந்த காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை, பிரதமர் வேட்பாளர் என மம்தா முன்மொழிந்தவுடன், கூட்டணியில் பலருக்கு ஆச்சரியம், சிலருக்கு வெறுப்பு.சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றில், 'மோடியின் அரசியல் இமேஜை வீழ்த்துவது கடினம்' என, கார்த்தி சிதம்பரம் வாய் தவறி கூறி விட்டார். இதில், அவர் அவமதித்தது எதிர்கால பிரதமர் வேட்பாளர் ராகுலையா அல்லது தற்போதைய வேட்பாளர் கார்கேவையா என, சாலமன் பாப்பையாவை வைத்து பட்டிமன்றமே நடத்தலாம்.தமிழக காங்., தலைவர் பதவி கிடைக்காத வேதனையில், கார்த்தி இப்படி உண்மை பேசி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி விட்டாரோ?

கடந்த, 2014 முதல் பொத்தி பொத்தி பாதுகாத்து வைத்திருந்த, 'பிரதமர் வேட்பாளர் அந்தஸ்தை' ஒரே வினாடியில் மம்தா பதம் பார்த்து

விடுவார் என, ராகுல் எதிர்பார்க்கவில்லை. இதற்கு தக்க பதிலடி கொடுக்க, அடுத்த வெளிநாடு சுற்றுலாவின் போது, ராகுல் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பார் என, நம்புவோம்.

மொத்தத்தில், 2024 லோக்சபா தேர்தல், பிரதமர் பதவிக்கானதாக இல்லாமல், 'பிரதமர் வேட்பாளர் பதவிக்கான' போட்டியாக மாறி

விட்டது. இதில், மூன்றாவது முறையாக, மோடி பத்திரமாக பிரதமர் பதவியை தக்க வைத்துக் கொள்வார்.

மக்கள் காதுகளில் மலர் சூட வேண்டாம்!


என். தொல்காப்பியன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அயோத்தி ராமர் கோவில் துவக்க விழாவில்,பிரதமர் பங்கேற்பது அரசியல் சாசனத்திற்கும், பிற மதத்தினரின் உணர்வுகளுக்கும் எதிரானது; தங்கள் அரசியல் நோக்கத்திற்காக மத உணர்வுகளை துஷ்பிரயோகம் செய்கின்றனர்' என்று பிரதமர் மோடியை, மா.கம்யூ., தேசிய பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார்.

கடவுள் நம்பிக்கை இல்லாத காம்ரேட் யெச்சூரிக்கு, மோடி எது செய்தாலும் குற்றமாக தெரிவதில் ஆச்சரியமில்லை. அயோத்தியில் ராமர் கோவிலை பிரமாண்டமாக எழுப்ப, பிரதமர் மோடி பூமி பூஜையில் பங்கேற்ற போது எந்த ஆட்சேபனையும் எழுப்பாதவர், கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதை மட்டும் எதிர்ப்பதில் எந்த நியாயமும் இல்லை.

மதச்சார்பற்றவர்கள் என்போர், 'இண்டியா' கூட்டணியில் இடம் பெற்றுள்ள, தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின், கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றதை கண்டுகொள்ளாமல் இருந்தது ஏன்?ஹிந்துக்கள் வழிபடும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பிரதமர் பங்கேற்பதால், மதச்சார்பின்மைக்கு பேராபத்து வந்து விட்டது போல மாயத்தோற்றத்தை உருவாக்க முயற்சி நடக்கிறது.மோடி ஹிந்து கோவில்களுக்கு மட்டும் போவதில்லை... தேவாலயங்களுக்கும் குருத்வாராக்களுக்கும், முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் இடங்களுக்கும் எந்த பாகு

பாடும் காட்டாமல் சென்று வந்துள்ளாரே?அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு வரும்படி, நாட்டில் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் விழா கமிட்டியினர் அழைப்பு விடுத்துள்ளனர். யெச்சூரிக்கும் அழைப்பு போயிருக்கும். ஆனால், காமாலைக்காரனுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாக தெரிவது போல, மோடி எது செய்தாலும் பெரிய குற்றமாக இவரது கண்களுக்குத் தெரிகிறது.பிரதமர் மோடி, மதச்சார்பின்மை கொள்கையை தீவிரமாக கடைப்பிடிப்பதால் தான், இந்தியாவில் கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும், ஹிந்துக்களுடன் இணக்கமாக பாதுகாப்போடு வாழ

முடிகிறது.இதை சீதாராம் யெச்சூரி புரிந்து கொள்ள வேண்டும். 'மதச்சார்பின்மை கொள்கையின் பாதுகாவலர்கள் நாங்கள் மட்டுமே' என்று சொல்லி, மக்கள் காதுகளில் மலர் சூட யெச்சூரி போன்றோர் இனியும் முயற்சிக்க வேண்டாம்.






      Dinamalar
      Follow us