sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இது உங்கள் இடம்/ திரும்பப் பெற வேண்டும்!

 திரும்பப் பெற வேண்டும்!

 திரும்பப் பெற வேண்டும்!


PUBLISHED ON : ஏப் 07, 2026 03:16 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 07, 2026 03:16 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மு.தங்கமுத்து, பொள்ளாச்சி-யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவு, 356யை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட முன்னாள் பிரதமர் இந்திரா, மாநில அரசுகளை தன் இஷ்டத்திற்கு கலைத்து வந்தார்.



இதை முடிவுக்கு கொண்டு வந்தது, எஸ்.ஆர்.பொம்மை வழக்கு!

கடந்த 1989ல் ஜனதா தள கட்சியை சேர்ந்த கர்நாடக முதல்வர் பொம்மைக்கு சட்டசபையின் பெரும்பான்மை இல்லை என்று கூறி, அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.

இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார், பொம்மை. அந்த மனு தள்ளுபடி செய்யப்படவே, உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

இந்நிலையில், 1991ல் மேகாலயாவில் மலைவாழ் மக்கள் ஒன்றிய கட்சியின் ஆட்சி கலைக்கப்பட்டது. அத்துடன், 1992ல் நடந்த பாபர் மசூதி இடிப்பையடுத்து, பா.ஜ., ஆட்சியில் இருந்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேச அரசுகளும் கலைக்கப்பட்டன.

இதை எதிர்த்து சம்பந்தப்பட்ட கட்சிகள் அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்தன. ஆனாலும், 'ஜனாதிபதியின் உத்தரவு, விசாரணைக்குரியது அல்ல' என, அவ்வழக்குகளை தள்ளுபடி செய்து விட்டன, உயர் நீதிமன்றங்கள்.

இதையடுத்து, அனைவரும் உச்ச நீதிமன்றத்தை நாடினர். 1993ல் நீதிபதி குல்தீப் சிங் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இவ்வழக்கை விசாரணை செய்து, 'ஒரு மாநிலத்தில் அரசியலமைப்புச் சட்டம் செயல்பட முடியாத அசாதாரண நிலை ஏற்படும்போதுதான், 356வது பிரிவைப் பயன்படுத்த வேண்டும்.

'மேலும், 356வது பிரிவின் கீழ் ஜனாதிபதி அளிக்கும் ஆணை, நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டது. ஜனாதிபதிக்கு மத்திய அமைச்சரவை அளிக்கும் பரிந்துரையை நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது.

'அதேநேரம், அப்பரிந்துரைக்கு பின்னால் உள்ள காரணங்களை பரிசீலித்து நீதிமன்றம் கேள்வியெழுப்பும். அவ்வகையில், 356வது பிரிவு தவறாகப் பயன்படுத்தப்பட்டால், நீதிமன்றங்கள் நிவாரணம் அளிக்கும்' என்று தீர்ப்பு வழங்கியது.

அதன்பின், மாநில அரசுகளை கலைக்கும் அதிகாரம், பார்லிமென்ட்டுக்கு சென்று விட்டது.

இன்று சில மாநில அரசுகள், அராஜகமான முறையில் ஆட்சி புரிந்தாலும், மாநில அரசை கலைக்க முடியாத அளவிற்கு, மத்திய அரசின் கைகளை இத்தீர்ப்பு கட்டிப் போட்டுவிட்டது.

தற்போது, மேற்கு வங்கத்திற்கு தேர்தல் பணிக்காக சென்ற ஏழு நீதிபதிகளை, திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் சிறை பிடித்து வைத்து, அவர்களை பல மணி நேரம் அறையில் அடைத்து வைத்து கொடுமைபடுத்தி உள்ளனர்.

இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தபின்னரே விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நீதிபதிகளுக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண மக்களின் நிலை?

இதுபோன்று வேறு மாநிலங்களில் நடக்காமல் இருக்கவேண்டும் என்றால், எந்த உச்ச நீதிமன்றம் தவறு செய்யும் மாநில அரசை கலைக்கும் அதிகாரத்திற்கு தடை விதித்து, பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் கைகளை கட்டிப் போட்டதோ, அந்த தடையை நீக்கினால் மட்டுமே, இதுபோன்ற அராஜகங்கள் அரங்கேறுவது தடுக்கப்படும். இல்லை என்றால், தி.மு.க., முதல்வர் ஸ்டாலின், தமிழகம் ஒரு தனிநாடு என்பது போல் நினைத்துக் கொண்டு செயல்படும் நிலை, அனைத்து மாநிலங்களிலும் வரவாய்ப்புள்ளது.

இதனால், பல மொழி பேசும் பல மாநிலங்கள் அடங்கிய இந்தியா சிதறுண்டு போகவும் வாய்ப்புள்ளது.

அதுபோன்ற நிலை வராமல் இருக்க, தனக்கு வரும் புகார் மனுக்களின் அடிப்படையில், மாநில அரசுகளை கலைக்கும் அதிகாரத்தை பிரதமர் பெற வேண்டும்!

lll





ஓட்டை இன்ஜினால்

ஒரு பயனும் இல்லை!

கு.காந்தி ராஜா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்தல் பிரச்சார பரப்புரையில், வழக்கம் போல் மத்திய பா.ஜ., அரசு தமிழகத்துக்கு போதிய நிதி அளிக்கவில்லை என்ற பொய் மூட்டையை அவிழ்த்து விட்டு வருகிறார், தி.மு.க., தலைவர் ஸ்டாலின்.

கடந்த 2004- - 2014 காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்துக்கு வழங்கிய நிதியை விட, மூன்று மடங்கு கூடுதல் நிதியையும், பல்வேறு திட்டங்களையும் மோடி அரசு வழங்கியுள்ளது.

ஆனாலும், தன் ஆட்சியின் தோல்வியை மறைக்க, மத்திய அரசு மீது பழி போட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஏகப்பட்ட இலவச வாக்குறுதிகளை அள்ளிவிட்டுள்ளார்.

கடந்த 2021 தேர்தலின்போது அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும், 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக அளிக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார், ஸ்டாலின்.

ஆட்சிக்கு வந்த பின்போ, மூன்று ஆண்டுகளாக நிறைவேற்றாமல், 2024 பார்லிமென்ட் தேர்தலின் போது மக்களுக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற அச்சத்தில், மொத்தம் உள்ள, 2.5 கோடி ரேஷன் கார்டுகளில், 1.3 கோடி பேருக்கு மட்டும் மாதம் தோறும், 1,000 ரூபாய் வழங்கி னார்.

இதே நிலைதான் தற்போது அறிவித்திருக்கும் வாக்குறுதிகளுக்கும் ஏற்படும்!

ஏற்கனவே, 10 லட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்கி தவிக்கிறது, தமிழகம். இதில், மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், மேலும் கடன் வாங்கி தமிழகத்தை திவாலாக்குவரே தவிர, தற்போது அறிவித்திருக்கும் எந்த ஒரு இலவச திட்டங்களையும் செயல்படுத்த முடியாது.

எனவே, தி.மு.க., எனும் ஓட்டை இன்ஜினை விட, மத்திய - மாநில அரசுகள் இணைந்த, 'டபுள் இன்ஜின்' ஆட்சியே தற்போது தமிழகத்திற்கு தேவை!

lll

சுமையாகும் ஆன்மிக பயணம்!

செல்வக்கோ பெருமாள், காஞ்சிபுரத்திலிருந்து அனுப் பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தின் ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்கள், சமீபகாலமாக தனியார் விடுதிகளின் கொள்ளை கூடாரங்களாக மாறி வருகின்றன.

விடுதி உரிமை யாளர்களின் வசதிக்கேற்ப நிர்ணயிக்கப்படும், 'செக்- - இன், செக்- - அவுட்' நேரங்கள் பயணியருக்கு பெரும் அசவுகரியத்தை ஏற்படுத்துகின்றன. முதலில் ஒரு வாடகை சொல்லிவிட்டு, அறையை காலி செய்யும் போது கூடுதல் தொகை கேட்டு மிரட்டுவதும் அரங்கேறுகிறது.

ஆந்திராவில், திருப்பதி மற்றும் திருச்சானுார் போன்ற இடங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடினாலும், துாய்மையான கழிப்பறைகளும், பாதுகாப்பான, 'லாக்கர்' வசதிகளும் மிகக் குறைந்த கட்டணத்தில் கிடைக்கின்றன.

எனவே, முக்கிய கோவில்களுக்கு அருகில் பக்தர்கள் தங்கி தயாராகும் விதமாக குறைந்த கட்டணத்தில், 'கிளோக் ரூம்' மற்றும் குளியலறை வசதிகளை அறநிலையத் துறை ஏற்படுத்த வேண்டும்.

அத்துடன், தனியார் விடுதிகளின் வாடகை முறைகேடுகளை கண்காணித்து, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

​ஆன்மிக பயணம், சாமானியனுக்கு சுமையாக மாறிவிடக் கூடாது!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us