/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
ஏ.ஐ., உதவியுடன் சினிமாவை தரம் உயர்த்துங்கள் கமல்!
/
ஏ.ஐ., உதவியுடன் சினிமாவை தரம் உயர்த்துங்கள் கமல்!
PUBLISHED ON : செப் 27, 2025 12:00 AM

அ.அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை, நாகை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கியவர் நடிகர் கமல்ஹாசன். ஊழலுக்கு எதிராக, தன் கட்சி சின்னமான டார்ச் லைட்டால் இலவச, 'டிவி'யை உடைத்தவர். மக்கள் மன்றத்தில் ஜெயிக்க முடியாமல், தற்போது தி.மு.க., தயவில் கொல்லைப்புறம் வழியாக ராஜ்யசபா எம்.பி.,யாகி இருக்கிறார். ஏதோ அவருக்கு ஒரு பதவி கிடைத்த வரையில் சந்தோஷப்படலாம்... ஆனால், அவரை நம்பி கட்சிக்கு வந்து இன்று நடுத்தெருவில் நிற்பவர்களுக்கு?
'தேர்தல்களில் நாம் தோற்கவில்லை; தோற்கடிக்கப்பட்டோம்' என்று அரிய தத்துவத்தை சொல்லியிருக்கிறார்.
உண்மை தான்... மக்களால் தோற்கடிக்கப்பட்டீர்கள்!
அது ஏன் என்று யோசித்து, மீண்டும் ஜெயித்து காட்டாமல், அறிவாலயம் முகாமில் அகதியாக சேர்ந்தது ஏன்?
ஜெயலலிதா ஆட்சியில், தன் படத்தை வெளியிட முடியவில்லை என்றதும், 'வெளிநாட்டுக்கு போகிறேன்' என்று அழுதவர், பழனிசாமி ஆட்சியை விமர்சனம் செய்தவர், இன்று, தி.மு.க., ஆட்சியில் மவுன விரதம் அனுஷ்டிக்கிறார்.
வீராவேசமெல்லாம் சினிமாவில் மட்டும்தானா?
கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தது அவரது ஜனநாயக உரிமை. அதில் ஜெயிக்க முடியாத போது சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார் போன்று கவுரவமாக கட்சியை கலைத்து விலகி இருக்கலாம்.
இப்படி மலிவான அரசியல்வாதியாக மாறி, கூட்டணி என்ற பெயரில் சோரம் போவது, கமல்ஹாசன் என்ற கலை வடிவத்தின் மதிப்பை கெடுப்பதை உணர்வாரா?
தனக்கு பின்பும் கட்சி இருக்க வேண்டும் என்பதற்காக, தலைவர்களை உருவாக்கிக் கொண்டிருப்பதாக சொல்கிறார்.
அந்த நல்ல காரியத்தை விரைவில் செய்து, கட்சியை புதிய தலைவரிடம் ஒப்படைத்து விட்டு, அரசியலில் இருந்து கமல் விலகி அமெரிக்கா போய், ஏ.ஐ., தொழில்நுட்பத்தை முழுமையாக கற்று, தமிழ் சினிமாவின் தரத்தை இன்னும் உயர்த்த வேண்டும் என்பதே என்னைப் போன்ற ரசிகர்களின் வேண்டுகோள்.
கமல் செவிசாய்ப்பாரா?
மக்கள் வரிப்பணத்தில் புகழ் பாடலாமா? க.அருச்சுனன், அத்திமாஞ்
சேரிப்பேட்டை, திருவள்ளூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் காய்கறி சந்தை நுழைவாயில் அருகே, மறைந்த
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கலச் சிலை மற்றும் பெயர் பலகை அமைக்க,
வள்ளியூர் பேரூராட்சி தீர்மானம் நிறைவேற்றி, தொகுதி சட்டசபை உறுப்பினர்
நிதியின் கீழ் சிலையை நிறுவுவதற்கான ஒப்புதலை அரசிடம் இருந்து பெற்றது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பால்சாமி என்பவர் சென்னை உயர்
நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம்,
கருணாநிதி சிலைக்கு அனுமதி மறுத்ததோடு, பொது இடங்களில் மக்களுக்கு இடையூறாக
இருக்கும் சிலைகளை அகற்றவும் உத்தர விட்டது.
இதை எதிர்த்து உச்ச
நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது, தமிழக அரசு. மனுவை விசாரித்த
நீதிபதிகள், தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளு படி செய்துள்ளனர்.
இப்படித் தான் ஓராண்டிற்கு முன், திருத்தணி காமராஜர் மார்க்கெட்டை
புதுப்பித்து, கருணாநிதி மார்க்கெட் என பெயர் மாற்றம் செய்ய முயன்றனர். அதை
எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அம்முயற்சி கைவிடப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின், தான் மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டோம் என்று நினைத்து
விட்டார் போலும். அதனால் தான், ஆட்சியில் இருக்கும்போதே ஊர்தோறும் தன்
தந்தைக்கு சிலைகள் அமைத்தும், பெயர் பலகைகள் வைத்தும் புகழ்பாட
துடிக்கிறார்.
'மகன் தந்தைக்கு ஆற்றும் உ தவி இவன்தந்தை என்ந
ோற்றான் கொல்எனும் ச ொல்' என்கிறார் வள்ளுவர். ' இவனை, மகனாக பெற இவர்
தந்தை என்ன புண்ணி யம் செய்தாரோ' என்று பிறர் போற்றும் விதத்தில் வாழ்வது
தான், ஒரு மகன் தந்தைக்கு செய்யும் நன்றிக் கடனே தவிர, மக்கள்
வரிப்பணத்தில் சிலைகள் அமைப்பது அல்ல!
காலத்தின்
கோலம்! குருபங்கஜி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
----- 'அ. தி.மு.க., தொடர்பான பஞ்சாயத்துக்கும், அக்கட்சி நான்கு அணிகளாக
பிரிந்ததற்கும், பா.ம.க., இரண்டாக உடைந்ததற்கும் மத்திய உள்துறை அமைச்சர்
அமித் ஷாவின் சித்து விளையாட்டே காரணம்' என்று கூறியுள்ளார், தமிழக
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.
'கையாலாகாதவனுக்கு, காணுவது
எல்லாம் காரணம்' என்பது போல், இனி, தமிழக அரசியல்வாதிகள் ஊழல் செய்து
சொத்து குவித்துள்ளதற்கும், அதற்கான வழக்கை சந்திப்பதற்கும், டாஸ்மாக்
கடைகளில் பாட்டிலுக்கு, 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதற்கும், துப்புரவு
தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரும் போராட்டத்திற்கும், யு - டியூபர்
சவுக்கு சங்கர் வீட்டில் மனித கழிவுகள் கொட்டப்பட்டதற்கும், அமித் ஷா தான்
காரணம் என்று கூட செல்வப்பெருந்தகை சொல்வார் போலிருக்கிறது!
காமராஜர் போன்ற கண்ணியமிக்க தலைவர்கள் வீற்றிருந்த சத்தியமூர்த்தி பவனில்,
இவரைப் போன்றோர் தலைவர் பதவியில் அமர்ந்திருப்பது, காலத்தின் கோலம் இன்றி
வேறென்ன!
இரட்டை வரியால் தள்ளாடும் போர்வெல் துறை! எல்.முருகராஜ்,
சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஜி.எஸ்.டி-., யின்
முக்கிய நோக்கமே வரிச்சுமையை குறைத்து, தொழில்களை மேம்படுத்துவது தான்!
ஆனால், ஆழ்துளை கிணறு போடும் போர்வெல் துறைக்கோ வரிக்குறைப்பு
எட்டாக்கனியாக உள்ளது டன், இரட்டை வரி விதிப்பால் அத்துறை தள்ளாடிக்
கொண்டிருக்கிறது.
போர்வெல் இயந்திரங்களை இயக்குவதற்கு டீசல்
தேவைப்படுவதால், இத்தொழிலில் டீசல் தவிர்க்க முடியாத எரிபொருள். அதேநேரம்,
டீசலுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் வாட் வரியும், டீசலைப் பயன்படுத்தி
போர்வெல் அமைக்கும் சேவைக்கு ஜி.எஸ்.டி., என, ஒரு சேவைக்கு இரண்டு விதமான
வரிகளை விதிக்கின்றன.
இதனால், போர்வெல் தொழில் செய்வோர் பெரிதும் பாதிக்கப்படுகிறனர்.
அத்துடன், விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு போர்வெல் அவசியம் என்ற
நிலையில், இத்துறையின் மீது விதிக்கப்பட்டுள்ள இரட்டை வரிவிதிப்பால்,
போர்வெல் அமைக்கும் செலவு அதிகரிக்கிறது. இதனால், நடுத்தர மக்கள் தண்ணீர்
தேவைக்கும், சிறு குறு விவசாயிகள் வேளாண்மைக்கும் போர்வெல் அமைக்க
முடியாமல் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, மத்திய, மாநில அரசுகள் இணைந்து இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்.
போர்வெல் சேவைக்கான ஜி.எஸ்.டி., வரியையோ அல்லது டீசல் பயன்பாட்டிற்கு வரி விலக்கு அளிப்பது குறித்தோ அரசு பரிசீலிக்கலாம்.
மத்திய, மாநில அரசுகள் இத்துறையை கவனத்தில் கொள்ளுமா?