/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
தோல்விக்கு 'ரூட்' போடும் கெஜ்ரிவால்!
/
தோல்விக்கு 'ரூட்' போடும் கெஜ்ரிவால்!
PUBLISHED ON : டிச 05, 2024 12:00 AM

என். மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'டில்லி சட்டசபைத் தேர்தலில், ஆம் ஆத்மி, காங்., கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளாது; தனித்துப் போட்டியிடும்' என, அக்கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்ததை தொடர்ந்து, காங்., கட்சியும் தனித்து போட்டியிட துணிந்து விட்டது.
இந்த இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட முடிவு செய்து விட்டதால், பா.ஜ., வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது.
கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., மாபெரும் வெற்றி பெற்றது போல, சட்டசபைத் தேர்தலிலும் வெற்றி பெறப் போவது நிச்சயம்!
ஜார்க்கண்ட் சட்டசபைத் தேர்தல் ஆகட்டும்,மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் ஆகட்டும் கட்சிகள் எல்லாம் கூட்டணி வைத்துத் தான் போட்டியிட்டன. இன்றைய அரசியல் சூழ்நிலையில், எந்தக் கட்சியும் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற வாய்ப்பே இல்லை.
தமிழகத்தில், நாம் தமிழர் கட்சி தனித்துப்போட்டியிடுகிறது. அக்கட்சியால், இதுவரை நடந்த தேர்தல்களில், ஒரு முறையாவது,ஒரு இடத்திலாவது வெற்றி பெற முடிந்துள்ளதா?
ஜெயலலிதா காலத்தில், அ.தி.மு.க., சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, மாபெரும் வெற்றி பெற்றது.அவரது மறைவுக்குப் பின், பழனிசாமி தலைமையிலான, அ.தி.மு.க., சட்டசபை தேர்தலில், மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டதால் தான், 66 இடங்களையாவது பெற முடிந்தது.
எனவே, ஆம் ஆத்மி கட்சி, டில்லி சட்டசபைத் தேர்தலில் படுதோல்வி அடைய,அரவிந்த் கெஜ்ரிவாலே காரணமாக இருக்கப் போகிறார் என்பதில் சந்தேகமில்லை!
நாங்கள் கடவுள் அல்ல!
டாக்டர்.
டி.ராஜேந்திரன், அருப்புக்கோட்டையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
சமீபத்தில், நோயாளியின் உறவினர் ஒருவரால் அரசு மருத்துவர்,
கொடூரமாகதாக்கப்பட்டார். இது, மருத்துவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை
ஏற்படுத்திஉள்ளது. தமிழகத்தில் மருத்துவர்கள் தாக்கப்படுவது இது முதல்
முறையல்ல.ஆனாலும், இதுவரை இப்பிரச்னைக்குத் தீர்வு காணப்படவில்லை.
இன்று
முக்கியமான அரசுமற்றும் தனியார் மருத்துவமனைகளில், உயிரை காக்கும்நவீன
சிகிச்சை முறைகளும்,உபகரணங்களும் பயன்பாட்டில் இருந்தாலும், சில
சந்தர்ப்பங்களில் மரணம்என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது.
மிகவும்
ஆபத்தான நிலையில், இறுதிக் கட்டத்தில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்படும்
நோயாளிகள் தான், மருத்துவமனைகளில் இறக்கின்றனர்.அவ்வாறு கொண்டு வரப்படும்
நோயாளியை, இறுதி வரை முயற்சி செய்துகாப்பாற்றத்தான் மருத்துவர்கள் முயற்சி
செய்வர்.
மருத்துவரின் கவனக்குறைவால் எங்கேயாவதுஓரிரு சம்பவங்கள்
நடந்திருக்கலாம். ஆனால், வன்மம் வைத்து எந்த நோயாளியையும் பழிவாங்கவேண்டும்
என்று, எந்த மருத்துவரும் நினைப்பதில்லை.
உயிருக்குப்
போராடிக்கொண்டிருக்கும் நோயாளியைக் காப்பாற்றும்மருத்துவரை, கடவுளுக்கு
நிகராகப் போற்றுவர். அதேநோயாளி சிகிச்சை பலனின்றிஇறந்துவிட்டால்,
உறவினர்கள் மருத்துவரைகண்மூடித்தனமாக தாக்குகின்றனர்.
நோயாளியின்
உறவினர்களே... உங்களதுஉயிர் சொந்தங்கள் உங்களைவிட்டு
பிரியும்போது,உங்களுக்கு ஏற்படும் அதேவேதனை, கண்முன்னே ஒரு நோயாளியை
இழக்கும்போது, எங்களுக்கும் ஏற்படும். எங்களுக்கும் உறவுகள் உண்டு;
எங்கள்குடும்பங்களிலும் மரணங்கள் நிகழ்வதுண்டு. புரிந்து கொள்ளுங்கள்...
அபரிமிதமான
வளர்ச்சியைகண்டிருக்கும் மருத்துவ அறிவியல், மரணத்தை வெல்லும் வித்தையை
எங்களுக்குக் கற்றுத் தரவில்லை. அதனால், நாங்களும் உங்களைப் போன்ற
மனிதர்கள் தானேதவிர, கடவுள் அல்ல!
மாநிலத்தின், தேசத்தி ன் துர்பாக்கியம்!
வெ.சீனிவாசன்,
திருச்சியில்இருந்து அனுப்பிய, 'இ-மெயில்'கடிதம்: இந்தியாவில் தடை
செய்யப்பட்ட ஒரு இயக்கம்,எஸ்.டி.பி.ஐ., சமீபத்தில் நடைபெற்ற இந்த
இயக்கத்தின் பேரணியில் பங்கேற்ற, தமிழகவாழ்வுரிமை கட்சித் தலைவரும்,
சட்டசபை உறுப்பினருமான வேல்முருகன், தடை செய்யப்பட்டுள்ள அந்த இயக்கத்தை,
இந்திய ராணுவத்திற்கு நிகராக புகழ்ந்து பேசியுள்ளார். மேலும் இந்த
பேரணிக்கு, தான் உரியவர்களிடம் பேசி அனுமதி பெற்றுத் தந்ததாகவும்
கூறியுள்ளார்.
இதே வேல்முருகன், சிலஆண்டுகளுக்கு முன்,
தேசியநெடுஞ்சாலையில், வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும்ஒரு சுங்கச்
சாவடியில், ரகளை ஏற்படுத்தி, அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியது
நினைவிருக்கலாம்.
எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கு எளிதில்
அனுமதி கிடைப்பதில்லை என்ற புகார், இந்த அரசின் மீது ஏற்கனவே
உள்ளது.ஆர்.எஸ்.எஸ்., விசுவ ஹிந்து பரிஷத், நடிகர் ஜோசப் விஜயின் புதிய
கட்சி மாநாடு போன்றவற்றுக்கு எளிதில் அனுமதிகொடுக்கவில்லை; நீதிமன்றத்தை
நாட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் பேரணிக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது?
அராஜகம்,
வன்முறை, பிரிவினைவாதத்தில் ஈடுபாடு,அரசால் தடை செய்யப்பட்ட ஒரு
இயக்கத்தின் பேரணியில் பங்கேற்றல் போன்ற செயல்பாடுகள், சட்டசபைக்கும், அதன்
உறுப்பினருக்கும் அழகல்ல.
இது போன்றவர்கள், மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுவது, மாநிலத்தின், தேசத்தின் துர்பாக்கியமே!
சங்கர மடம் அல்ல; தனியார் மண்டபம்!
அ.ரவீந்திரன்,
குஞ்சன்விளை,குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தமிழகத்தில், சைவ, வைணவ மடங்களில், மூத்த மடாதிபதி ஓய்வு பெறும்போது,
வாரிசாக இளைய மடாதிபதி ஒருவர்பொறுப்புக்கு வருவார்; இது,மடங்களில் உள்ள
விதிமுறை!
மறைந்த தி.மு.க., தலைவர், கருணாநிதியிடம்ஒருமுறை நிருபர்
ஒருவர், 'அரசியலில் உங்களுக்குப்பின் கட்சியை வழிநடத்தவும்,மக்களுக்கு
நல்லது செய்யவும் உங்கள் வாரிசுகள் தி.மு.க.,வுக்கு வருவரா?' எனக்
கேட்டபோது, எவ்விதமான சலனமும் இல்லாமல், 'இதுஎன்ன சங்கர மடமா... வாரிசுகள்
வரிசைகட்டி வர...' எனக் கேட்டார்.
இதே கேள்வியை,
சிலஆண்டுகளுக்குமுன் மு.க.ஸ்டாலினிடம் கேட்டபோது, 'என் வீட்டில்இருந்து
மகனோ, மகளோ,மருமகனோ அரசியலுக்கு வரமாட்டார்கள்...' என பகிரங்கமாகக்
கூறினார்.
ஆனால், கருணாநிதிக்குப்பின், அவரது வாரிசாக ஸ்டாலின் தி.மு.க.,வை ஆள வந்தார்.
தற்போது,
ஸ்டாலின் தன்மகன் உதயநிதியை கட்சிக்குஅழைத்து வந்து,இளைஞரணி என
ஆரம்பித்து,எம்.எல்.ஏ., அமைச்சர் எனவளர்த்து, இப்போது, துணைமுதல்வர்
ஆக்கிவிட்டார்.
கருணாநிதி, தி.மு.க., என்னசங்கர மடமா
என்றுசரியாகத்தான் கேட்டுள்ளார்.காரணம், சங்கர
மடங்களில்,மடாதிபதிகளின்குடும்பத்தினர் யாரும் வாரிசாக வருவதில்லை.
ஆன்மிககுருமார்களால் அடையாளம் காட்டப்படுபவர்தான் அடுத்த மடாதிபதியாக
வருவர்!
ஆனால், தி.மு.க.,வில் அப்படியா? கருணாநிதியின்நேரடி
வாரிசுகள் தானே தலைமைக்கு வருகின்றனர்.அதனால், கண்டிப்பாகதி.மு.க.,
சங்கரமடம் அல்ல;தனியார் மண்டபம்!