/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
கால-வெளியை சுழற்றி இழுக்கும் கருந்துளை
/
கால-வெளியை சுழற்றி இழுக்கும் கருந்துளை
PUBLISHED ON : ஜன 08, 2026 07:28 AM

அதிவேகத்தில் சுழலும் கருந்துளை ஒன்று, பிரபஞ்சத்தின் 'காலவெளி' (Spacetime) கட்டமைப்பைத் தன்னோடு சேர்த்துச் சுழற்றும் என்று, நுா று ஆண்டுகளுக்கு முன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கணித்தார். அதை அவர் காலத்து விஞ்ஞானிகள் இருவர் கணிதவியல் ரீதியில் நிறுவி னர்.
அதேபோன் ற ஒரு நிகழ்வை, அண்மையில், வானியலாளர்கள் முதன்முறையாக நேரடியாகக் கண்டு பதிவு செய்துள்ளனர். சீன அறிவியல் அகாடமி, பிரிட்டனிலுள்ள கார்டிப் பல்கலை ஆகிய வற்றின் ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வு 'சயின்ஸ் அட் வான்சஸ்' இதழில் வெளியாகி உள்ளது.
ஒரு நட்சத்திரம் ராட்சதக் கருந்துளையின் ஈர்ப்பு விசைக்குள் சிக்கிச் சிதைந்தது. அப்போது, அதிலிருந்து சிதறிய துகள்கள் கருந்துளையைச் சுற்றி ஒரு பிரமாண்ட ஒளித் தட்டை உருவாக்கின. இந்த தட்டின் சுழற்சியிலிருந்து மிக வலிமையான கதிர்வீச்சுகள் விண்வெளியில் பீய்ச்சிடித்தன. இந்தத் தட்டும் கதிர்வீ ச்சுகளும் 20 நாட்களுக்கு ஒருமுறை அலைவுறுவதை எக்ஸ்-ரே மற்றும் ரேடியோ அலைகள் வாயிலாக விஞ்ஞானிகள் கண்டனர். இப்படி நிகழும் என 1918ல், ஜோசப் லென்ஸ் மற்றும் ஹான்ஸ் திர்ரிங் ஆகியோர் கணித்ததால், அதற்கு 'லென்ஸ்-திர்ரிங்' விளைவு என்று பெயரிடப்பட்டது.
எனவே, ஒரு கருந்துளை அதிவேகமாகச் சுழலும்போது, அது தன்னைச் சுற்றியு ள்ள கால-வெளிப் பரப்பை, ஒரு துணி போல இழுத்துச் சுழற்றுவதை (Frame--dragging) இது உறுதிப்படுத்துகிறது. இது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் முன்வைத்த, பொதுச் சார்பியல் கோட்பாட்டிற்கு கிடைத்த ஆதாரமாகக் கொண்டாடப்படுகிறது. விண்வெளி இயற்பியலில் கருந்துளையின் சுழற்சி, அதன் சுற்றுப்புறத்தில் ஏற்படுத்தும் நேரடித் தாக்கத்தை நிறுவும் மிக முக்கியமான மைல்கல்லாக சீனா- - பிரிட்டன் விஞ்ஞானிகளின் இந்த ஆய்வு பார்க்கப்படுகிறது.

