PUBLISHED ON : டிச 22, 2024 12:00 AM

கே.முத்துகிருஷ்ணன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:கேரளாவிலிருந்து தமிழகத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது இன்று நேற்று அல்ல, பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. சமீபத்தில், நெல்லை அருகே உள்ள கோடகநல்லுார், பழவூர், கொண்டாநகரம், பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், புறம்போக்கு இடங்களில் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாகசெய்திகள் வந்தன.
இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு,'ரியாக் ஷன்' என்ன தெரியுமா... 'எதிர்பாராதவிதமாக நடக்கும் இது போன்ற நிகழ்வுகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என்று கூறியதுடன், அவரது கடமை முடிந்து விட்டது.
தி.மு.க., அமைச்சர்களிடம் இதை தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
மத்திய அரசுக்கு எதிராக ஏதாவது போராட்டம் என்றால், வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பும் இங்குள்ள கட்சிகள், ஏன் இது குறித்து எந்தவித ஆட்சேபம் தெரிவிக்கவோ, போராட்டம் நடத்தவோ முன்வரவில்லை?
'அம்பேத்கரை அவமதித்து விட்டார் அமித் ஷா' என்று போராடுவோர், வேங்கைவயல் நிகழ்வில், பட்டியல் இன மக்களுக்கு நடந்த அராஜகத்தை கண்டித்து,ஏன் இதுவரை போராட்டம் நடத்தவில்லை?
ஏனென்றால், இவர்கள், 'பட்டியல் இன மக்களை காப்பவர்கள்' என்ற போர்வையில்,குளிர் காய்பவர்களே அன்றி, அவர்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள்இல்லை.
பக்கத்து மாநிலத்தினர், இங்கு வந்து குப்பையை கொட்டுகின்றனர். அதை தடுக்கமுடியாத ஆட்சியாளர்களும், 'என்னை தாண்டிஆறுவழிச் சாலை போட்டுருவீயா... பரந்துார் விமான நிலையம் அமைச்சுருவியா'என, வீர வசனம் பேசும், 'லெட்டர் பேடு' கட்சி தலைவர்களாலும் தமிழகத்திற்கு எந்த முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை.
ஏனெனில், இவர்கள் வெறும் வாய் சவடால் பேர்வழிகள் என்பதை, மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய நேரம் இது!
டாஸ்மாக்கிற்கே பவர் அதிகம்!
க.சோணையா,
திருமங்கலம், மதுரை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
கடந்த மாதம் மதுரை தெற்கு தாலுகா, ஜெய்கிந்த்புரத்தில் நடந்த, 'உங்களை
தேடி, உங்கள்ஊரில்' திட்ட முகாமில் பங்கேற்ற மாவட்ட கலெக்டர், துறை அதிகாரி
கள் சிலருடன், பள்ளிக்கு அருகில் இருந்த சில கடைகளை ஆய்வு செய்து,40
சிகரெட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துஉள்ளார்.
நல்ல
விஷயம்தான்... பள்ளி - கல்லுாரிகள் மற்றும்வழிபாட்டு தலங்களுக்கு அருகில்,
100 மீட்டருக்குள்,பீடி, சிகரெட், குட்கா மற்றும் புகையிலை பொருட்களை
விற்க தடை என்பதில்,மாற்றுக் கருத்து இல்லை. அதேவேளை, அப்பகுதிகளில்
டாஸ்மாக் கடை நடத்தலாமா என்பதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள்தான் பதில்
சொல்ல வேண்டும்.
அதாவது, மதுரை, திருமங்கலம் அரசு பெண்கள்
மேல்நிலைப் பள்ளி அருகில், நீண்ட காலமாக டாஸ்மாக் கடை இயங்குவது,
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவர் கண்களுக்கும் தெரியாமல் போனது எப்படி?.
அதுவும்,
டாஸ்மாக் கடையிலிருந்து, 100 மீட்டருக்குள் பெண்கள் பள்ளி வளாகம், 150
மீட்டருக்குள் நகராட்சி அலுவலகம், 200 மீட்டருக்குள் தாலுகா அலுவலகம்,
ஒன்றிய அலுவலகம், சார்பு நீதிமன்றம் போன்ற அனைத்தும் உள்ளன. ஆனாலும்,
எந்தத் தடையும் இன்றி, அக்கடைகள் இன்றும் ராஜ கம்பீரத்துடன் இயங்கிக்
கொண்டிருக்கின்றன.
'படிப்படியாக மதுவை ஒழிப்போம்' என்ற வாக்குறுதி
தந்து, ஆட்சிக்குவந்த இரு திராவிட கட்சிகளும், தலா 500 கடைகளை பெயரளவுக்கு
மூடின. அந்த, 500ல் கூட, இங்குள்ள கடைகள் விடுபட்டு போனது எப்படி?
ஆக,
ஆட்சி மாறினாலும்,காட்சி மாறாது என்பதற்கிணங்க, 2016ல் ஆட்சிக்குவந்த
ஜெயலலிதா, பழனிசாமியை தொடர்ந்து, தற்போது முதல்வராக உள்ள ஸ்டாலின் வரை,
எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாத சக்தியாக, அந்த மதுபானக் கடைகள்
இயங்குகின்றன என்றால், ஆட்சி அதிகாரத்தின் பவரை விட, டாஸ்மாக் பவர் அதிகம்
என்பது தெளிவாக புரிகிறது!
எது வாயை அடைக்கிறது?
அ.சேகர்,
கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்திய அரசியலில்,அன்று
முதல் இன்று வரை மிகப்பெரிய தொழில் அதிபர்களுக்கும், ஆளுகிறமத்திய, மாநில
அரசுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இத்தொழிலதிபர்கள் எந்தக் கட்சி,
ஆட்சிக்கு வந்தாலும், அவர்களுடன்நட்பை வளர்த்துக் கொண்டு,தங்கள் தொழிலை
வளர்த்துக்கொள்வர்.
இவர்கள் ஒவ்வொரு தேர்தல்களின்போதும், அனைத்து
அரசியல் கட்சிகளுக்கும், அக்கட்சிகளின்செல்வாக்குக்கு ஏற்றாற்போல், தேர்தல்
நிதியை வாரிவழங்குவர். அதிலும், வெற்றி பெறக் கூடியகட்சிகளுக்கு, தாராளமாக
நிதியுதவி செய்வர்.
அப்போது தானே, அக்கட்சி ஆட்சியில் அமரும் போது, அதற்கானபலனை அறுவடை செய்யமுடியும்!
அவ்வகையில், அதானி மற்றும் அம்பானி போன்ற பலர் உள்ளனர்.இவர்கள், லாபத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து, வணிகம் செய்பவர்கள்.
இவர்களிடம்
இருந்து டாட்டா போன்ற தேசப்பற்று நிறைந்த, நேர்மையான வணிகத்தை நாம்
எதிர்பார்க்க முடியாது. தொழிலில் லாபம் ஈட்ட, எல்லா நெளிவு சுழிவுகளையும்
கையாளுவர்.
எந்தவொரு அரசியல்கட்சியாலும், இவர்களைதவிர்க்க முடியாது.
இன்று,அம்பானி மற்றும் அதானியைமையமாக வைத்து, மத்தியில் ஆளுகிற பா.ஜ.,வை
வீழ்த்த, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே வரிசையில் வரிசைக்
கட்டிநிற்கின்றன.
பார்லிமென்ட் குளிர்காலகூட்டத்தொடரின் முதல் நாளே அமளியில் ஈடுபட்டு, சபைகளை ஒத்தி வைக்க வைத்தனர்.
அதானியின்,
'கிரீன் எனர்ஜி' நிறுவனம் குறித்து,அமெரிக்காவின் குற்றச்சாட்டு உண்மை
என்றால்,நம் நாட்டில் அதானியிடம்லஞ்ச பேரம் பேசிய மாநில அரசுகள் மற்றும்
அதன் அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரும் குற்றவாளிகள் தானே?
மோடி
என்ற தனி மனிதனை வீழ்ச்சி அடையசெய்ய முடியவில்லையே என்ற கடுப்பில்,
தற்போது,எதிர்க்கட்சிகள் அதானியைபகடைக் காயாக உருட்டி மகிழ்கின்றனர்.
எது
எப்படியோ... இன்றுஉலகளவில் தொழில் துறையில் வல்லரசுநாடுகளுக்கு
போட்டியாகஅதானி விளங்குவதால், அவரை வீழ்த்த, பல வெளிநாட்டு சக்திகள்
இயங்குகின்றன.
ஏற்கனவே, இது போன்றுஒருமுறை ஹிண்டன்பர்க்,சோரோஸுடன்
கூட்டு வைத்து, அதானிக்கு எதிராக அறிக்கை வெளியிட்டு, அதானியின் பங்குகளை
வீழ்த்தி, அதன் மூலம், ஹிண்டன்பர்க் லாபம் சம்பாதித்தது.
இப்போது,
மோடி - அதானி நட்பை பூதாகரமாக காட்டி, கூச்சல் செய்யும் எதிர்க் கட்சிகள்,
மோடி, அதானிக்கு என்ன உதவி செய்தார் என்று கூற வேண்டியது தானே? எது
இவர்கள் வாயை அடைக்கிறது?