PUBLISHED ON : அக் 31, 2024 12:00 AM

அ.குணசேகரன்,
வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்:
நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, நம் எல்லைகளில் சீனா
மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் எல்லைத் தாண்டிய ஊடுருவல்களை தடுப்பதே, நம்
ராணுவத்தினரின் மிகப் பெரிய பணியாகஉள்ளது. கடும் உறைபனியில், நம்
ராணுவவீரர்கள், அல்லும் பகலும் கண்விழித்து, தங்கள் கடமையை செய்து
வருகின்றனர்.
கடந்த 1962ல், சீனாவிடம், 32,000 சதுர
கி.மீ.,நிலத்தை நாம் இழந்தோம். பின், மீண்டும் 2004முதல் 2014 வரையிலான
காங்., ஆட்சியில்,மேலும் 640 சதுர கி.மீ., நிலத்தை இழந்தோம்.
கடந்த,
2014ல் பிரதமராக மோடி தேர்வானதும், எல்லை தாண்டி யார் வந்தாலும்,நம்
ராணுவம், அவர்கள் எல்லைக்குள் சென்றே அவர்களை வீழ்த்தி விரட்டி
வரும்அளவுக்கு, துணிச்சல் காட்டுகிறது. 2017ல்,டோக்லாம் பகுதியில், சீனா
அமைத்து வந்தராணுவ தளவாடங்களைத் தகர்த்தது. அப்போது,சீனாவுடன் போர் வந்து
விடும் என்ற அச்சம்நிலவியது. ஆனால் மோடியின் தலைமையிலான மத்திய அரசு,
அவ்விவகாரத்தை சாமர்த்தியமாகக் கையாண்டு, போர் நடக்காமல் தவிர்த்தது.
அடிபட்ட
புலியாக உள்ள மோடியிடமே,மீண்டும், 2020ல் கோவிட் சமயத்தில் வாலாட்டியது
சீனா. கல்வான் பள்ளத்தாக்கில் நம் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல்
நடத்தியதில், இரு தரப்பிலும் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டன.
ராணுவ
வீரர்களை அந்நேரத்தில் சந்தித்து ஊக்கமளித்தார் மோடி. அதன் பிறகு, ஏகப்பட்ட
மிரட்டல்கள்; நாமும் சளைக்காமல் பதிலளித்தோம். இப்போது நம் வழிக்கு வந்து,
எல்லையில் இருந்த தன் வீரர்களை வாபஸ் வாங்குகிறது சீனா.
இத்தகைய
மோடியை, இங்கே உள்ள சிலர், வாய்க்கு வந்தபடி வசைபாடுகின்றனர்.இவர் இங்கு
இல்லையெனில், சீனாவின்ஊடுருவல் மிக அதிகமாகி விடும். அனைவரும் புரிந்து
கொண்டால் சரி!
பண்டிகை நாட்களில் சலுகை உண்டா?
ப.ராஜேந்திரன், சென்னையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்:
ஒவ்வொரு பண்டிகை விடுமுறைக்கும், போக்குவரத்து நெரிசல் மிகுதியாகிறது. பல்வேறு இடங்களில், வண்டிகள் ஊர்ந்து செல்ல வேண்டிய நெருக்கடியில் உள்ளன; பயண நேரமும் கூடி விடுகிறது. இதில் சுங்கச் சாவடிகளில் காத்திருக்க வேண்டிய நேரமும்,பயண நேரத்தை களைப்பாக்கி விடுகிறது.
தீபாவளியை முன்னிட்டு,சென்னை- -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏழுசுங்கச்சாவடிகளில், கட்டைத்தடுப்புகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அகற்றி உள்ளது. போக்குவரத்தை எளிதாக்கும் முடிவில், இந்ததடுப்புகள் அகற்றப்பட்டு உள்ளன.
தினசரி வாகனப் போக்குவரத்து எண்ணிக்கை, வழக்கமான 35,௦௦௦த்திலிருந்து 50,000மாக உயரும்என்பதால் சிந்தித்து செயல்படுகின்றனர்.
ஆனால், கட்டை தான் அகற்றப்பட்டதே ஒழிய, டோல் கட்டண வசூலிப்பு வழக்கம் போல் நடக்கிறது.
'சுங்கச் சாவடிகள் விரைவில்அகற்றப்படும்' என்ற செய்தி, சில மாதங்களுக்கு முன் பரவியது. ஆனால், மூச்சு பேச்சின்றி கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது தான் உண்மை.
எல்லா நாட்களிலும்என்றில்லா விட்டாலும், இதுபோன்ற பண்டிகைகளுக்கான,முன்னே இரண்டு நாட்கள், பண்டிகை நாள், பின்னே இரண்டு நாட்கள் என, சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து, கட்டணத்தை நிறுத்தி வைக்கலாம். வாகனங்களுக்கான டீசல் செலவும் மிச்சமாகும். நடக்குமா?
நதிகளை வணங்கி பாதுகாப்போம் !
அ.அப்பர் சுந்தரம், மயிலாடுதுறையில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்:
வட மாநிலங்களில் நதிகள் வழிபாடு அதிக அளவில் இருப்பதால், வறட்சி என்னும்சொல்லுக்கே இடமில்லாமல்தொடர்ந்து தண்ணீர் கிடைக்கிறது. பல்வேறு மாநிலங்கள் வளம் பெருகி, விவசாயம் செழிப்பதை அனைவரும் பார்க்கிறோம்.
தென் மாநிலங்களிலும் குறிப்பாக காவிரியின் உற்பத்தி இடமான கர்நாடகமாநிலம், குடகு மலை, தலைக்காவிரியில் துவங்கி, காவிரி பாய்ந்தோடி தமிழகத்தில் பூம்புகாரில் கடலில்கலக்கும் இடம் வரை, சுவாமி ராமானந்த மகராஜ் தலைமையில், 2010 முதல் யாத்திரை நடத்தி பூஜை செய்கின்றனர்.
நதிக்கு ஆங்காங்கே ஆரத்தி வழிபாடு நடத்தி, பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை நேரில் சந்தித்து, நதிகளை பாதுகாக்கவலியுறுத்தி, விழிப்புணர்வும்மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நதிகளில் பிளாஸ்டிக், குப்பை, கூளங்களை கொட்டக்கூடாது. பழைய கிழிந்த அசுத்தமான துணிகளையும், தேவையற்ற பொருட்களையும், இறைச்சி கழிவுகளையும் வீசி செல்வது; மல, ஜலம் கழிப்பது ஆகியவை பாவச்செயல்கள்.
கழிவுநீர் மற்றும் ரசாயனகழிவுகளை ஆறுகளில் விடுவதால், தண்ணீர் அசுத்தமடைந்து வீணாகிறது.இந்த அசுத்தமான தண்ணீரைகுடிக்கும் கால்நடைகள், மனிதர்கள் அனைவருக்கும்நோய்கள் ஏற்படுகின்றன. அந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தினால், பயிர்களும் கெடுகின்றன.
இவற்றை தவிர்க்கவே, துறவிகள் விழிப்புணர்வு யாத்திரை மேற்கொள்கின்றனர்.
இனியாவது பெரியோர் சொல்லை மதித்து நீர்நிலைகளை சுத்தமாக்கி, நம் வாழ்வை வீணடிப்பதை தவிர்க்க சபதம் ஏற்போம்.
மது ரை மக்கள் பதிலடி தருவர்!
எஸ்.ஜி.பிரபு, மதுரையில்இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிசந்திரசூட், சமீபத்தில் அளித்தபேட்டியில்,
'அயோத்தி வழக்கில் ஒரு முடிவுக்கு வருவதற்கு சிரமமாக இருந்தது. நான் கடவுள் முன்அமர்ந்து, பிரச்னைக்குதீர்வு தேடினேன். ஒருவருக்குநம்பிக்கை இருந்தால், அவர்எப்போதும் ஒரு வழியைக் காட்டுவார்' என, கூறிஇருந்தார்.
இதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூ.,கட்சியின் மதுரை எம்.பி.,யான வெங்கடேசன், 'அதுதீர்ப்பு அல்ல; அருள்வாக்கு'என்று, 'எக்ஸ்' தளத்தில் விமர்சனம் செய்து இருந்தார்.
வெங்கடேசன் அவர்களே...மக்கள், உங்களை தேர்ந்தெடுத்தது, அன்றாடம் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை தீர்த்து வைப்பீர்கள்; மதுரை தொகுதியை சிறப்பாகமுன்னேற்றுவீர்கள் என்று நம்பிதான். ஆனால், நீங்களோ சமூக வலைதளப் போராளியாகவே உங்களுடைய நேரத்தை செலவிடுகிறீர்கள்.
குறிப்பாக, ஹிந்து மதம் குறித்தோ, சனாதன தர்மத்தையோ யாரேனும்நேர்மறையாக ஒரு விஷயத்தைக் கூறினால், அதற்கு சமூக வலைதளத்தில்எதிர்மறையாக பேசி, நெட்டிசன்களிடம் திட்டு வாங்குவதே உங்களுக்கு வாடிக்கையாக இருக்கிறது.
அதே தலைமை நீதிபதிசந்திரசூட் தலைமையிலானஅமர்வு, 'மதச்சார்பின்மை என்பது அரசியலமைப்பின்முக்கிய கூற்றாகும். அதை நீக்கமுடியாது' என்று ஒரு வழக்கில் சமீபத்தில் கூறியதே... அதெல்லாம் தங்களுடைய கண்ணுக்கு தெரியவில்லையா? அவர் வழங்கிய, பல வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகள், சமூகத்தின் அடித்தட்டு மக்களை முன்னேற்றுவதில் அக்கறை கொண்டுள்ளன.
உச்ச நீதிமன்ற நீதிபதியையே, அவர் சாமி கும்பிடுகிறார் என்ற கோணத்தில் பார்த்து, அவரை குறிப்பிட்டவட்டத்திற்குள் நிற்க வைக்கமுயற்சி செய்கிறீர்கள்; இது சரியல்ல.
தாங்கள் எம்.பி.,யாக இருக்கும் மதுரை தொகுதி, கடும் போக்குவரத்து நெரிசல்களையும், குண்டும்குழியுமான சாலைகளையும்,ஆக்கிரமிப்புகளையும் கொண்டுள்ளது. இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுங்கள். அதை விடுத்து, சமூக வலைதளத்திலேயே அரசியல் செய்து கொண்டு இருந்தால், அடுத்த தேர்தலில் மதுரை மக்கள்நிச்சயம் தங்களுக்கு பதிலடி கொடுப்பர்.