PUBLISHED ON : டிச 11, 2024 12:00 AM

எஸ்.உதயம் ராம், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: 'தமிழன் என்று சொல்லடா; தலை நிமிர்ந்து நில்லடா' என்ற நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்,இன்று உயிருடன் இருந்திருந்தால், 'தமிழன்என்று சொல்லடா; தள்ளாடி தலைக் குப்புற வீழடா' என்று பாடியிருப்பார். அந்த அளவுக்கு, மது மற்றும் போதைப் பொருட்களால் தமிழகம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
ஆண்களும், பெண்களும், ஏன் பள்ளி மாணவ - மாணவியர் கூட, போதைக்கு அடிமையாகி, நடு ரோடு என்றும் பாராமல்,ரகளையில் ஈடுபடுவதை அவ்வப்போது, தொலைக்காட்சியில் பார்க்கிறோம்.
தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் மதுக்கடைகள்... பிஞ்சுக் குழந்தைகள் சாப்பிடும் பஞ்சு மிட்டாயில் இருந்து, எல்லாவற்றிலும் விதவிதமாய் போதைப் பொருட்கள் கலந்துள்ளதற்கு யார் காரணம்?
அரசு நடத்த வேண்டிய கல்விக் கூடங்களைத் தனியாரும், தனியார் நடத்த வேண்டிய மதுக்கடைகளை அரசும் நடத்துவதற்கு காரணம் என்ன?
மதுக்கடைகளை நடத்தினால், கோடி கோடியாய் பணம் வந்து கஜானாவில் குவிவதன்றி வேறென்ன காரணம் இருக்க முடியும்!
அதனால் தான், 'மது விலக்கு அறிவிப்பால்,பல தொகுதிகளை இழந்தோம்' என்று சில அமைச்சர்கள், சாராய விற்பனைக்கு சாமரம்வீசுகின்றனர்.
மது விற்பனை குறைந்து விடக் கூடாது என்பதில் காட்டுகிற அக்கறையை, மதுவால்சீரழியும் இளைய சமுதாயத்தினரின் எதிர்காலத்தின் மீது அரசு ஏன் காட்டுவதில்லை?
'போதையில்லாத தமிழகம்' என்று மேடைகளில் பேச முடிகிறவர்களால், தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டம், விற்பனை, கடத்தல் போன்றவற்றை தடுக்க முடியவில்லையே... ஏன்?
இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படுவதாக கூறியும், மூலை முடுக்குகளில் எல்லாம் போதைப் பொருட்கள் புழங்குகின்றனவே... அது எப்படி?
'குடித்தால் அரசுக்கு வருமானம்; கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் குடும்பத்துக்கு வெகுமானம்' என்ற அரசியல் சித்தாந்தம் மாறாதவரை, மதுவுக்கு எதிராக அரசியல் கட்சிகள் எழுப்புகிற கோஷங்கள் அத்தனையும் பகல் வேடங்களே!
வியாதி நாடகம்!
அ.சேகர், கடலுாரில்
இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இன்று அரசியல்வாதிகள் பலர்,
ஊழல்வழக்கில் தண்டிக்கப்பட்டாலும், தொடர்ந்து, அரசியல் கட்சித் தலைவர்களாக
வலம் வந்து கொண்டுதான் உள்ளனர். உதாரணமாக, பீஹாரின் லல்லு பிரசாத் யாதவ்,
ஆம் ஆத்மிஅரவிந்த் கெஜ்ரிவால்!
இவர்களுக்கு சிறையில் இருக்கும்போது
மட்டும், பெயர் தெரியாத வியாதிகள்எல்லாம் வந்து விடும். அதையே காரணமாக
வைத்து,நீதிமன்றத்தில் ஜாமின் கேட்பர்.ஜாமினில் வெளிவந்தவுடன்,அடுத்த
வினாடியே நோய் பறந்து ஓடிவிடும்; மீண்டும்திடகாத்திரமாக உலா வருவர்!
கடந்த,
471 நாட்களாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, ஜாமின் மனு போடும் போது
எல்லாம், சக்கர நாற்காலியில் வந்து, ஜாமின் கேட்டதும், பின், காவிரி
மருத்துவமனையில்,அவருக்கு உயர் தர சிகிச்சை அளிக்கப்பட்டதும்நாம் அறிந்ததே!
சிறையில் கூட ராஜ மரியாதை தான்; அது வேறகதை!
தற்போது, ஜாமின் கிடைத்து, வெளிவந்துள்ளசெந்தில்பாலாஜிக்கு, இப்போது எந்த சிகிச்சையும் தேவைப்படவில்லை.
இந்த
தமிழகத்தில் தான்,சொத்து என்று சொல்லிக்கொள்ள, கட்டிய வேட்டியைத் தவிர,
கால் அணா காசு சேர்த்து வைக்காதகாமராஜர், கக்கன் போன்ற கர்ம வீரர்களும்
வாழ்ந்தனர்.
அவர்களும் தான் தலைவர்கள்... இவர்களும் தான், தங்களை தலைவர்கள் என்று சொல்லிக் கொள்கின்றனர்!
எப்படியோ
நோயாளி நாடகத்தை வெற்றிகரமாக நடத்தி, ஜாமின் பெற்று, அவர் வெளியே வந்தது
தான் தாமதம்... 'வாராது வந்த மாமணியே...'என்பது போல், சிகப்பு கம்பள
வரவேற்பு கொடுத்து, அமைச்சரவையில் இடமும் கொடுத்து, அவரை அரவணைத்துக்
கொண்டது, திராவிட மாடல் அரசு!
பின்னே... மக்களை பட்டியில் அடைத்து ஓட்டு வாங்கும் ரகசியம் தெரிந்த விஞ்ஞானி ஆச்சே... வரவேற்பு பலமாகத் தானே இருக்கும்?
தற்போது,
உச்ச நீதிமன்றத்தில் அவரது ஜாமின் மனுவை ரத்து செய்ய தொடரப்பட்ட வழக்கில்,
'தற்போது தான் அமைச்சர் இல்லை என்று கூறி ஜாமின் பெற்ற செந்தில் பாலாஜி,
தற்போது அமைச்சராக பதவி ஏற்றுள்ளதால், அவர் மீது உள்ள முறைகேடு வழக்கில்,
சாட்சிகள் சாட்சி சொல்ல அச்சப்படுவர்' என்று கூறியுள்ளது அமலாக்கத்துறை.
'ஜாமின் கிடைத்தவுடன்,அமைச்சர் பதவி ஏற்றதுஏன்?' என்று உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜியிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
உச்ச
நீதிமன்றம் அவருக்குகொடுத்த ஜாமினை ரத்து செய்வதன் வாயிலாக, ஊழல்
குற்றச்சாட்டில் பிணையில் வரும் இவரைப்போன்றோருக்கு ஆட்சியாளர்கள் பதவி தர
யோசிப்பர்; மக்களும் ஓட்டு போட சிந்திப்பர்!
தோற்றுப்போன தேர்தல் வியூகம்!
ரா.சேதுராமானுஜம், விருதுநரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாகி விட்டது, தேர்தல்
வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் நிலைமை!
தன் தேர்தல்
வியூகத்தின்வாயிலாக, பிரதமர் நரேந்திரமோடி, குஜராத்தில் மூன்றாவது முறை
முதல்வராகவும், 2014ல் முதல் முறையாக இந்திய பிரதமராகவும் மிக
முக்கியகாரணமாக இருந்தவர் தான்,இந்த பிரசாந்த் கிஷோர்.
அத்துடன்,
தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட, பீஹார் - நிதிஷ்குமார், பஞ்சாப் -
அம்ரீந்தர்சிங், மே.வங்கம் - மம்தா பானர்ஜி, ஆந்திரபிரதேசம் - ஜெகன்
மோகன்ரெட்டி போன்றோர் முதல்வராக தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்தவரும்
இவரே!
'ஐ பேக்' என்ற தேர்தல்கருத்து கணிப்பு நிறுவனத்தின் வாயிலாக,
ஆலோசனைகள் வழங்கி, அதற்கு சன்மானமாக பல நுாறு கோடி ரூபாய் பெற்று வந்த
இவர், 'நம் தேர்தல் வியூகத்தால் மற்றவர்களை முதல்வராக்குவதற்கு பதில்
நாமே ஏன் முதல்வராக கூடாது' என எண்ணி, ஜன் சுராஜ் எனும் பெயரில் கட்சி
ஆரம்பித்து, கல்லா கட்ட நினைத்தார்.
பாவம்... சமீபத்தில் பீஹாரில்
நடந்த, நான்கு சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்டு, நான்கிலும் மண்ணைக்
கவ்வினார். இதில், மூன்று தொகுதிகளில், டிபாசிட்டேவாங்கவில்லை!
காரணம், பீஹாரிகளுக்குநிதிஷ்குமாரை தெரிந்த அளவுஇவரைத் தெரியவில்லை.
அத்துடன்,
மற்றவர்களுக்கு சரியான முறையில்தேர்தல் வழிமுறைகளைவகுத்து கொடுத்தவர்,
தன்கட்சிக்கான தேர்தல் வாக்குறுதிகளில் கோட்டைவிட்டு விட்டார்...
அதிலும்,'நாங்கள் ஆட்சிக்கு வந்தால்,மூடிக் கிடக்கும் மதுக்கடைகளை மீண்டும்
திறப்போம்' என்று கொடுத்த வாக்குறுதி, அவர் கட்சிக்குமூடுவிழா காண வைத்து
விட்டது.
நிதிஷ்குமார் மதுவிலக்கைஅமல்படுத்திய பின், பீஹாரில்
பெண்கள் நிம்மதியாகவும், ஆண்கள் குடிப் பழக்கத்திலிருந்து மீண்டு வரும்
நிலையில், பிரசாந்த் கிஷோர் தந்த வாக்குறுதி, அரசியலில்இவர் எடுத்த வைத்த
முதல் அடிக்கே ஆப்பாக போய் விட்டது.
மக்களோடு மக்களாகநெருங்கிப்
பழகாமலேயே,கட்சி ஆரம்பித்து, ஆட்சியைபிடிக்கத் துடித்த பிரசாந்த்
கிேஷாருக்கு, மக்கள் தங்கள்பாணியில் பதில் சொல்லிஉள்ளனர்.
நான்கு
சுவர்களுக்குள் உட்காந்து அரசியல் வியூகம்வகுப்பது வேறு; களத்தில்மக்களை
சந்திப்பது வேறு என்பது தேர்தல் வியூக நிபுணருக்கு இப்போது
புரிந்திருக்கும்!