sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

உதவினால் உயரங்களை எட்டலாம்!

/

உதவினால் உயரங்களை எட்டலாம்!

உதவினால் உயரங்களை எட்டலாம்!

உதவினால் உயரங்களை எட்டலாம்!

2


PUBLISHED ON : செப் 24, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 24, 2024 12:00 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கே.குமார், சென்னையில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: 'ஆடிட், யோகாவுக்கு பிராமணர் வேண்டுமா?' என்ற தலைப்பில்,20ம் தேதி இதே பகுதியில், அன்பு சகோதரர்,ராமநாதபுரம் ஆர்.முகம்மது இஸ்மாயில் அவர்கள் தெரிவித்திருந்த கருத்துகளுக்காக,லட்சக்கணக்கான பிராமணர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுவரை ஒரு சிலரை தவிர்த்து, யாருமே பிராமணர்களுக்காக குரல் கொடுத்ததில்லை.இதே கருத்தை, ஒரு பிராமணர் எழுதியிருந்தால், பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு குரல்கள் எழும்பியிருக்கும்.தோழர் இஸ்மாயில் கூறியிருப்பது போல, திராவிட மாடல் தலைவர்களுக்கு, நீங்கள்சொன்ன அனைத்தையும் செய்ய பிராமணன் தேவை.

ஆனால், காரியம் முடிந்தவுடன் குழம்பில் உள்ள கறிவேப்பிலையை துாக்கி போடுவது போல், துார எறிந்து விடுவர். பிராமணர்கள் இடஒதுக்கீடு, உதவித்தொகை போன்ற எந்த சலுகைகளையும் பெற்றதில்லை. தங்கள் கடும் உழைப்பாலும், அறிவு திறமையாலுமே சமூகத்தில் முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.

என் தந்தை கடும் கஷ்டத்திலும் என்னை பொறியியலும், என் சகோதரிகளைபி.காம்., - எம்.ஏ., என்றும் படிக்க வைத்தார்.நாங்களும் நன்கு படித்து, ஒரு படிமுன்னேறி, எங்கள் பிள்ளைகளை, இன்னும் அதிக அளவு படிக்க வைத்துள்ளோம்.

பொதுவாகவே, நாங்கள் யார் வம்புக்கும்போக மாட்டோம். பலன்களை பகவான்தருவான் என்றெண்ணி, எங்கள் கடமையை கண்ணும் கருத்துமாக நிறைவேற்றியபடி இருப்போம். அனைத்து தீவினையாளர் செய்த செயல்களை தண்டிக்கும் பொறுப்பை இறைவனிடமே விட்டு விடுவோம்.

ஓரே குறை... நல்ல வசதியான பிராமணர்கள், ஏழை பிராமணர்களுக்கு ஓரளவு உதவிகள் செய்தால், எங்கள் சமூகம் இன்னும் முன்னேறும். என்னால் இயன்ற உதவிகளை நான் செய்து வருகிறேன். இதுபோல இந்த சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் நினைத்தால், பிராமணர் சமூகம் இன்னும் பல உயரங்களை எட்டும் என்பதில் சந்தேகமில்லை.



ஆசிரியர்களே... மனது வையுங்கள்!


டாக்டர் டி.ராஜேந்திரன்,அனுப்பானடி, மதுரை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி மாணவி ஒருவர், முதலாமாண்டு இறுதித் தேர்வில் தோல்வி அடைந்ததற்காக, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வருத்தம் அளிக்கிறது.

தேர்வில் தோல்விஅடைந்து விட்டால்,வாழ்க்கையே அஸ்தமித்துவிட்டதாக எண்ணுவது மிகப்பெரிய தவறு. மருத்துவக் கல்லுாரியில் ஒவ்வொரு ஆண்டும் பின்தங்கி, 10 ஆண்டுகளில்மருத்துவப்படிப்பை முடித்தோர், பிற்காலத்தில்அத்துறையில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த வரலாறுகள் ஏராளம்.

உலகிலேயே, மிகப்பெரியபணக்காரரான பில்கேட்ஸ்ஒரு பேட்டியில், 'நான் சில பாடங்களில், 'பெயில்' ஆகிஇருக்கிறேன். ஆனாலும்,இன்று மிகப்பெரிய நிறுவனம் ஒன்றின் உரிமையாளராக உள்ளேன்.ஆனால், என்னுடன் பயின்று, அனைத்து பாடங்களிலும் மிகச் சிறப்பாக தேர்ச்சி பெற்ற, சக மாணவர் ஒருவர், என் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிகிறார்' என, அவர் கூறியிருந்தார்.

தோல்வி என்பது, வெற்றியின் துவக்கம் என்பதை, பில்கேட்சின்வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.

'ஆன்-லைன்' முறையில்எம்.பி.பி.எஸ்., தேர்வுக்கானவிடைத்தாள்களை திருத்துதல் நடைமுறைக்குவந்த பின், கருணை மதிப்பெண்ணான, 5 மதிப்பெண் வழங்கப்படுவது, மறு கூட்டல், மறு மதிப்பீடு போன்றவை ரத்து செய்யப்பட்டு விட்டன.இதனால், வெறும் அரை மார்க், ஒரு மார்க்கில்தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.

கடந்தாண்டு, நெல்லை அரசு மருத்துவக் கல்லுாரியில் இறுதியாண்டு தேர்வில் ஒரே பாடத்தில், 105 மாணவர்கள் தோல்வி அடைந்தனர். அது, பெற்றோர் மத்தியில் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

வகுப்பறையில் மிகவும்பின்தங்கிய மாணவர்களைக்கண்டறிந்து, அவர்கள்மீது தனி கவனம் செலுத்த ஆசிரியர்கள் முன்வரவேண்டும்.

'வெற்றி பெற்றோரை பாராட்டுவதில் நேரத்தை செலவிடும் நாம், தோல்வியுற்றவர்களை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துவதில்லை' என, பிரபல அமெரிக்க எழுத்தாளர் கூறியதை படித்த பின், இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., பயிற்றுவிக்கும் பேராசிரியரான நான், ஒரு புதிய முயற்சியில் இறங்கினேன்.

உள்மதிப்பீடு தேர்வில் நுாற்றுக்கு, 17 மதிப்பெண் பெற்ற மாணவனை அழைத்து, மீண்டும் ஒருமுறை அனைத்து வினாக்களுக்கும் விடை எழுதி வரச் சொன்னதுடன், அழகான பேனா ஒன்றை பரிசளித்து, 'அடுத்த தேர்வில், 60 மதிப்பெண் பெற்றால், இதைவிடச் சிறந்த பரிசு கொடுப்பேன்'என, கூறினேன்.

அம்மாணவன், அதேபோல அடுத்த தேர்வில், 65 மதிப்பெண் பெற்று, எனக்கு இன்ப அதிர்ச்சியைஏற்படுத்தி விட்டான்.இதைவிட பெருமைக்குரியவிஷயம், ஒரு ஆசிரியருக்கு என்ன இருக்க முடியும்!

ஆசிரியர்கள் மனது வைத்தால், பின்தங்கிய மாணவர்களையும் எளிதில் முன்னேற்ற முடியும்.



அமெரிக்க சேட்டை சொல்லி மாளாது!


ராமானுஜதாசன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய அரசுக்கு சம்மன் அனுப்பிய அமெரிக்கா; காலிஸ்தான் பயங்கரவாதி வழக்கில் விஷமம்; 'பொய்க் குற்றச்சாட்டு' என இந்தியா கண்டனம்.

உலகில் இஸ்லாமிய பயங்கரவாதம் பெருகியதற்கும் காலிஸ்தான் சீக்கியவக்கிர பயங்கரவாதம் பெருகியதற்கும், அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய வெள்ளைக்கார நாடுகளே மூல காரணம் என்ற உண்மையை, நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

சரித்திரத்தைப் பின் நோக்கி ஆராய்ந்தால், ஆப்கானிஸ்தானில்தலிபான் உருவானதற்கும், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளே மூல காரணம்.

'அமெரிக்கா ஒரு பெரிய சைத்தான்' என்று கூறியது யார்... ஈரான் நாட்டின் ஷியா பிரிவு முன்னாள் தலைவர் அயதுல்லா கொமேனி.

உலகில் ஆயுத விற்பனைவாயிலாக, பல மில்லியன் டாலர்களில் கொள்ளை பணம் சம்பாதித்து, ஆசிய - ஆப்ரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டு, ஒருவரை ஒருவர் கொலை செய்து கொள்ள ஊக்குவிப்பதே அமெரிக்கா என்பது, அனைவருக்குமே தெரியும்.

தவிர, ஆசியா, ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளில் கிறிஸ்துவ மதத்தைப் பரப்பி, கோடிக்கணக்கானவர்களை மதமாற்றம்செய்யும் அமெரிக்காவின்,'சீரிய' பணி என்பதும் அனைவருக்கும் தெரியும்.மதமாற்றம் உட்பட அனைத்துமே, வணிக நோக்கத்தின் அடிப்படையிலானது என்பது மட்டும் தான் பெரும்பாலானோருக்குத் தெரியாது.

சீக்கிய, இஸ்லாமிய பயங்கரவாதப் படுகொலைகள் நீங்க வேண்டுமானால், அமெரிக்காவின் வணிக நோக்கம் தடைபட வேண்டும். அதற்கானமுயற்சியில், நம் நாடு இறங்கினால் நல்லது.








      Dinamalar
      Follow us