/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
அடுத்த கட்சிக்கு தயாராகி விட்டனர்!
/
அடுத்த கட்சிக்கு தயாராகி விட்டனர்!
PUBLISHED ON : அக் 19, 2024 12:00 AM

ஆர். ஜனனி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கும்' என்று ஒரு சொலவடை உண்டு. அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறுவது அந்த சொலவடையைத் தான் ஒத்துள்ளது.
'வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. மக்கள் மத்தியில் ஒரே பேச்சு என்னவென்றால், அ.தி.மு.க., ஆட்சிஎப்போது வரும் என்பது தான். அ.தி.மு.க., ஒரு தோல்வியை சந்தித்தால், அடுத்து மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பது,கடந்த கால சரித்திர உண்மை' என, கதை அளந்து விட்டு இருக்கிறார்.
இந்த சரித்திர கால உண்மைகள்எல்லாம், எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா காலத்தோடு மலையேறி விட்டது வேலுமணி அண்ணே!
தவிர, அ.தி.மு.க., ஆட்சி எப்போது வரும் என்றும், பழனிசாமி என்றைக்கு முதல்வர் நாற்காலியில் அமருவார் என்றும், இங்கு தமிழக மக்கள் ஒருவரும் கனவு காணவில்லை. 'திராவிட கட்சிகளின்தாக்குதலில் இருந்து எப்போது விடுபடுவோம்' என்று தான் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
என்னமோ அ.தி.மு.க., ஆட்சி காலத்திலும், தொடர்ந்த பழனிசாமியின் ஆட்சி காலத்திலும் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடியது போலவும், மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்ததுபோலவும் கதையளந்து கொண்டுஇருக்கிறீர்கள்.
உங்கள் இருவரின் ஆட்சியில், தமிழக மக்கள் அனைவரும் சற்றேறக்குறைய பிச்சைக்காரர்களாக ஆக்கி வைத்திருப்பது தான் இருவரும் செய்த மகத்தான சாதனை.
இலவசங்களை கொடுத்துக் கொடுத்து ஏமாற்றி, மக்களை சோம்பேறிகளாக்கி வைத்திருப்பது ஒன்று தான் உங்களின் சாதனை.
தீர்க்கதரிசியான பெருந்தலைவர் காமராஜர், 50 ஆண்டுகளுக்கு முன்னரே, 'இரண்டு கழகங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்' என்று கூறி விட்டார். அதை அட்சரம் பிசகாமல், இரு கழகங்களும் நிரூபித்து நிறைவேற்றி விட்டீர்கள்.
இவ்வளவு காலம் ஓட்டு போட்ட மக்கள், இப்போது, தாங்கள் செய்து கொண்டிருந்த தவறை உணர்ந்து விட்டனர்; அடுத்த கட்சிக்கு ஓட்டு போடத் தயாராகி விடுவர் போலிருக்கிறது!
பா.ஜ.,வை எதிர்ப்பது கடினம்!
அ.குணா,
கடலுாரில்இருந்து அனுப்பிய'இ - மெயில்' கடிதம் : நடந்து முடிந்த இரண்டு
மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள், கருத்துக் கணிப்புகளை தோல்வி அடைய
செய்துள்ளது உண்மையே.
ஹரியானாவில் மிகப்பெரிய வெற்றியை,
காங்கிரஸ்கட்சி பெறும் என்றும்,ஜம்மு - காஷ்மீரில்யாருக்கும்
பெரும்பான்மைகிடைக்காது என்றும்,தேர்தல்களுக்கு பிந்தைய கருத்துக்
கணிப்புகள் தெரிவித்தன.
அவ்வாறே, தேர்தல் முடிவுகள் வெளிவந்த போது,
முதல் இரண்டு மணி நேரத்திற்கு ஓட்டு எண்ணிக்கை சென்றது. அதிலும்,
ஹரியானாவில், 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில்இருந்த காங்.,
கட்சியை அப்படியே பின்னுக்கு தள்ளி, பா.ஜ., முன்னிலை பெற்றது.
இறுதியில், தனிபெரும்பான்மைக்கு தேவையான இடங்களைதாண்டி, 48 இடங்களிலும்வெற்றி பெற்றதை பா.ஜ.,வேநம்பியிருக்காது.
ஏனெனில்,
கடந்த 2019தேர்தலில், 40 இடங்களில்மட்டுமே வெற்றி பெற்ற பா.ஜ., ஜனநாயக
ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து தான் ஆட்சி நடத்தியது.
அதிலும்
தொடர்ச்சியாக,10 ஆண்டுகள் ஆட்சிசெய்த கட்சி மீண்டும்மக்கள் நம்பிக்கை
பெற்று,மூன்றாவது முறை ஆட்சியில்அமர்வதற்கு காரணம், மோடியின் சிறந்த
நிர்வாகமே.
நடந்து முடிந்த லோக்சபாதேர்தலில், ஹரியானா மாநிலத்தில்,
10ல் ஐந்துஇடங்களில் மட்டும் பா.ஜ.,வெற்றி பெற்றிருந்த சூழலில்,இந்த இமாலய
வெற்றி பா.ஜ.,வுக்கு, வரவுள்ள சில மாநில தேர்தல்களைநம்பிக்கையுடன்
எதிர்கொள்ள உதவும்.
மேலும், 10 ஆண்டுகளுக்குபின்னர், ஜம்மு -
காஷ்மீரில்நடந்த சட்டசபை தேர்தலில்கூட பா.ஜ.,வுக்கு முன் எப்போதும் இல்லாத
அளவிற்கு, 29 இடங்கள் கிடைத்துள்ளது மட்டும்அல்லாமல், ஓட்டு சதவீதம்கூட
காங்., கட்சியை விட அதிகமாகி உள்ளது.
காங்., கட்சி, ஜம்மு -
காஷ்மீரில் 2014ல் நடைபெற்ற தேர்தலில், 12 இடங்களில் வெற்றி பெற்றது.
தற்போது வெறும் ஆறு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, பின்னடைவை
சந்தித்துஉள்ளது; நிச்சயம் அக்கட்சிக்கு இது மகிழ்ச்சிஅளிக்காது.
ஜம்மு
- காஷ்மீரில்மத ரீதியாக ஓட்டு வங்கி பிரிந்து போயிருந்தாலும்,பா.ஜ.,வின்
வளர்ச்சி அங்கு அபரிமிதமான வளர்ச்சியாகத் தான் பார்க்கப்படுகிறது.
எது
எப்படியோ, காங்., கட்சி இப்போது உள்ள சூழலில், பா.ஜ.,வை தனியாக எதிர்த்து
எந்தவொரு மாநிலத்திலும்வெற்றி பெறுவது கடினம் என்பதற்கு, இந்த இரண்டு மாநில
தேர்தல் முடிவுகளும் பாடமாக இருக்கும்.
முடியுமா முதல்வரால்? சந்தேகம் தான்!
ஆர்.பாலமுருகன்,
மதுரையில்இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில்,
இப்பகுதியில்வாசகர் ஒருவர், 'ஐடியாகொடுக்க ஆள் இல்லையோ...' என்று மிகவும்
வருத்தப்பட்டு கடிதம் எழுதி இருந்தார்.
ஐடியா கொடுக்க,
திறமையானவர்கள் பலர் இருக்கின்றனர்; நம்மிடையே திறமைக்கு பஞ்சமில்லை என்பது
எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை, லஞ்சம் வாங்குவதற்கும் பஞ்சமில்லை
என்பதும்!
'தமிழகத்தில் இளைஞர்களுக்கு பஞ்சமில்லை' என்று முன்பு
சொல்வது வழக்கம்; தற்போது, தமிழகத்தை மிஞ்சி லஞ்சம் வாங்க ஆளில்லை என்ற
நிலை ஆகி விட்டது; இது வெட்கப்பட வேண்டிய விஷயம்.
இங்கு,
திறமைசாலிகள் அனைவரும், பதவிக்கு வந்த உடனேயே லஞ்சவாதிகளாக மாறி
விடுகின்றனர். வேலைக்கு ஏற்ப, லஞ்சத்தின் மதிப்பு கூடுகிறது, குறைகிறது.
தமிழக
அரசு அலுவலகங்களில் லஞ்சம்இல்லாமல், ஒரு குண்டூசி கூட நகராது என்பது,
தமிழகத்தில் உள்ள படித்த, படிக்காத அனைவருக்கும் தெரியும். எனவே, இங்கே
தேவைப்படுவது ஐடியா இல்லை; மாற்றம் மட்டுமே!
லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை களை எடுத்தால் போதும்;தமிழக அரசு கூன் நிமிர்ந்து விடும்.
'நாட்டிலேயே சிறந்த மாநிலம் நான் தான்' என, தமிழகம் மார்தட்டி சொல்ல வேண்டும்என்றால், இங்கே லஞ்சம் இல்லாத நிலை உருவாக வேண்டும்.
லஞ்சம்
வாங்கியவர்கள்,சட்டத்தின் ஓட்டை வழியாக தப்பி விடலாம் என்ற நடைமுறை
இருக்கும் வரை, முதல்வரால் இதை அமல்படுத்த முடியுமா என்பது சந்தேகம் தான்!