/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
போராட்டத்தை தடுத்து நிறுத்தணும்!
/
போராட்டத்தை தடுத்து நிறுத்தணும்!
PUBLISHED ON : நவ 16, 2024 12:00 AM

கு.அருண், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உயிர் காக்கும் மருத்துவம்எப்போது வணிகமாக மாறியதோ, அப்போதே மருத்துவத் தொழில் ஒரு சேவை என்பதை மறந்து, பல மருத்துவர்கள் வியாபாரிகளாக மாறிவிட்டனர்.
மருத்துவப் படிப்பு என்பது, செல்வந்தர்கள்மட்டுமே படிக்கும் படிப்பாக மாறியதால், தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், பல லட்சங்கள் செலவு செய்து படித்து வெளிவரும் மருத்துவர்கள், சேவை மனப்பான்மையுடன்மருத்துவம் பார்க்கும் போக்கு குறைந்து விட்டது.
உண்மையில், 1990களுக்கு முன், இந்த தனியார் மருத்துவக் கல்லுாரிகள் பெரியளவில்வருவதற்கு முன், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் படித்து வெளிவந்த மருத்துவர்களிடம் இருந்த சேவை மனப்பான்மை, தற்போது உள்ள மருத்துவர்களிடம் உள்ளதாஎன்பது மிகப் பெரிய கேள்வி.
அதிலும், 'நீட்' தேர்வு வருவதற்கு முன், 1990- - 2017க்கு இடைப்பட்ட காலத்தில், நம்அரசு மருத்துவக் கல்லுாரிகளில் அதிகளவில்இடம் பிடித்து படித்தவர்கள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பல லட்சங்கள் கொடுத்து, பிளஸ் 2 படித்த செல்வந்தர்களின்குழந்தைகளே!
இவர்களில் பெரும்பாலான மாணவர்கள்,மேல்படிப்பு படிக்க வெளிநாடுகள் சென்று விட்டதும், அங்கேயே மருத்துவத் தொழில் செய்து, அதிகளவில் பணம் சம்பாதிப்பதே குறிக்கோளாகவும் இருந்து விட்டனர்.
நம் வரிப்பணத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் படித்த இவர்கள், இங்கு அரசு மருத்துவமனைகளில் வேலைக்கு சேர்ந்து, ஏழை, எளியவர்களுக்கு மருத்துவ சேவை செய்ய முன்வரவில்லை.
இன்று ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும், போதிய மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படாமல், இருக்கும் மருத்துவர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது.
பெரும்பாலும், நர்ஸ்களே டாக்டர்கள் செய்ய வேண்டிய சிகிச்சைகளை, ஒவ்வொருஅரசு மருத்துவமனையிலும் செய்து வருவதை, நாம் அனைவரும் நன்கு அறிவோம்.
ஒரு ஏழை எளியவர், உயிர் போகும் நிலையில் அரசு மருத்துவமனைக்கு வந்தால், அவருக்கு முதல் உதவி சிகிச்சை செய்யக் கூட யாரும் இருப்பது இல்லை என்பது தான் உண்மை.
கிண்டி அரசு மருத்துவமனை விவகாரத்தால்,அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவருக்கு பாதுகாப்பு இல்லை என்று, தமிழகம் முழுதும் வேலை நிறுத்தம் செய்ததில்,ஆம்பூரில், கர்ப்பிணி துர்காதேவி என்பவர், தருமபுரி மற்றும் சேலம் என்று அலைய விடப்பட்டு, உயிர் இழந்து விட்டார்.
இதற்கு யார் முழு காரணம்?
இதுவே ஒரு அமைச்சரின் மனைவியோ அல்லது எம்.எல்.ஏ., - எம்.பி.,யின் மனைவியாகவோ இருந்திருந்தால், இந்த கதி நேர்ந்திருக்குமா அல்லது அவர்கள் தான் இத்தகைய அரசு மருத்துவமனையை நாடி வந்திருப்பரா!
டாக்டர் பாலாஜி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய விக்னேஷ் குற்றவாளி தான்; ஒப்புக் கொள்கிறோம். அதே நேரத்தில், துர்காதேவியின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த தருமபுரி, சேலம் மருத்துவமனைகளில் பணிபுரியும் அத்தனை மருத்துவர்களும்கொலை குற்றவாளிகள் தானே?
அந்த விக்னேஷ், கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட என்ன காரணம் என்பதையும் ஆராயத்தானே வேண்டும்?
மேலும், அரசு மருத்துவர்கள், சிகிச்சைக்குவரும் நோயாளிகளிடம், முடிந்த வரை சாந்தமாக நடந்து கொண்டாலே, உயிர் போகப் போவது தெரிந்தாலும், மகிழ்ச்சிஉடன் அதை ஏற்றுக் கொள்வர் அல்லவா!
அரசு மருத்துவர்களுக்கும் நிம்மதி இல்லை; மக்களுக்கும் நிம்மதி இல்லை.
ஒரு பக்கம் ஆசிரியர்கள் போராட்டம், இப்போது அரசு மருத்துவர்கள் போராட்டம்...அரசு ஊழியர்களும், தங்களுக்குரிய பணப் பலன்கள் கிடைப்பதில்லை என்று குமுறிக் கொண்டிருக்கின்றனர்.
மற்றொரு துர்காதேவி சம்பவம் நிகழ்வதற்குள்,மருத்துவர்களின் போராட்டத்தை அரசு தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும்.
அதிகாரிகள் உணர வேண்டும்!
பி.மணியட்டிமூர்த்தி,
தேரம்பாளையம், கோவை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: நீதிமன்ற
உத்தரவுகளை, அரசு அதிகாரிகள் சரியாக செயல்படுத்துவதில்லை என, சென்னை உயர்
நீதிமன்றம் அடிக்கடிதன் கண்டனத்தையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி
வருகிறது. அரசு அதிகாரிகள், சில காவல்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற
அவமதிப்பு வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
ஆளுங்கட்சியை நம்பி
நீதிமன்றத்தை பகைப்பது,அரசு அதிகாரிகளுக்கு எக்காலத்திலும் சிக்கலில்
முடியும். ஏனெனில், ஒருஆட்சியின் அதிகாரம் ஐந்துஆண்டுகள்தான். அதன்பின்வேறு
ஆட்சி அமையும் போது, யாருக்கு நாம் விசுவாசமாக இருந்தோமோ,அவர்களே நம்மை
சிக்கலில் மாட்ட வைத்து விடுவர் என்பதை அதிகாரிகள் புரிந்து கொள்ள
வேண்டும்.
நீதிமன்ற உத்தரவுகளைஒரு பொருட்டாகவே கருதாமல், மனம்
போனபடி செயல்படும் அரசு அதிகாரிகள், தாங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளைதன்
கீழ்பணிபுரிபவர்கள் மதித்து செயல்பட வேண்டும்என்று நினைக்கின்றனர்.
ஆளுங்கட்சியின்
அந்தரங்கவிஷயங்களை, அக்குவேறாக தெரிந்து வைத்திருக்கும் அரசு
அதிகாரிகளில்சிலர், ஆளுங்கட்சியில் நடக்கும் ஊழல் மற்றும் முறைகேடுகள்
தொடர்பானஆவணங்களை, ரகசியமாகதிருடி எதிர்க்கட்சியைச் சேர்ந்தமுக்கிய
நபர்களுக்கு அளித்து,பிரச்னையை கிளப்பி வேடிக்கை பார்ப்பர்.
தனக்கு
உறுதுணையாகஇருக்கும் ஆளுங்கட்சியின் அதிகாரத்தை மீறி, நீதிமன்றங்களால்
தங்களை என்ன செய்து விட முடியும் என்று, சில அரசு அதிகாரிகள் தப்புக்கணக்கு
போட்டு, எதையும் தப்பாகசெய்துவிட்டு, தப்பிக்கும்வழியையும் தெரிந்து
வைத்திருக்கின்றனர்.
அரசு கொண்டு வரும் திட்டங்களை முறையாக
செயல்படுத்தி, மக்களிடம்சேர்ப்பதுதான் தங்கள் கடமை என்பதை, அரசு அதிகாரிகள்
உணராதவரை,அவர்களை திருத்தும் அதிகாரமும், திருந்தாத அதிகாரிகளுக்கு
தண்டனைவழங்கும் அதிகாரமும், நீதிமன்றத்திற்கு உள்ளது.
அரசு அதிகாரிகளின் அலட்சியம், மெத்தனப்போக்கை களையும் வகையில், சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
நம்மால் உயர முடியவில்ையே?
எம்.எஸ்.சேகர்,
அவனியாபுரம்,மதுரை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
சமீபத்தில் ஹிந்தி குறித்த வெறுப்பு திணிப்பு பற்றி வாசகர் எழுதி
இருந்தார். கேரளாவின் சிற்பி என்று அழைக்கப்பட்ட நம்பூதிரி பாட், கம்யூ.,
கட்சியைச் சேர்ந்தவர்.
கடந்த 1957ல் முதல்வராக பதவி ஏற்றபோதே,
ஹிந்தியை ஒரு பாடமாக படிக்க ஏற்பாடு செய்தார். இதன் விளைவுதான், கேரள
மாநிலத்தவர்கள் வடமாநிலங்களிலும், மத்திய அரசிலும், ராணுவத்திலும் முன்னேறி
இருக்கின்றனர்.
புதுடில்லியில், ஜி.பி.பந்த் மருத்துவமனையில், 850 செவிலியர்களில், 400க்கும் மேற்பட்டவர்கள்மலையாளிகளே!
ராணுவத்தில், திட்டம், பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்திற்குரியதான, எம்.என்.எஸ்., பிரிவில், 60 சதவீதத்திற்கும் மேல் கேரளத்தவர்களே!
இதுமட்டுமல்ல...கேரளாவில்,
சேவலுார் எனும்கிராமத்தில், 100 சதவீதம் பேரும், ஹிந்தியில் படிக்கவும்,
எழுதவும் செய்கின்றனர். தெருவிற்கு இரண்டு ஹிந்தி பண்டிட்களை நியமித்து
படிக்க வைத்துள்ளார் நம்பூதிரிபாட்.மத்திய அரசும் இந்த கிராமத்து மக்களை
பாராட்டி இருக்கிறது.
சில ஆண்டுகளுக்குமுன்பே, இந்தியாவிலேயே,எர்ணாகுளம் மாவட்டம்,முழு கல்வி அறிவு பெற்றதாக செய்திகள் வந்துள்ளன.
ஆட்சி முக்கியமா, மக்கள்முன்னேற்றம் முக்கியமா?
நம் மக்கள், ஹிந்தி தெரியாத காரணத்தால், பிரதமராகவோ, ராணுவத்தில்உயர் அதிகாரிகளாகவோ உயர முடிவதில்லை.