PUBLISHED ON : டிச 13, 2024 12:00 AM

ஆர்.இளமாறன், தென்காசியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மதுரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி தர மாட்டோம்; மீறி சுரங்கம் தோண்டப்பட்டால், முதல்வர் பொறுப்பில் இருக்க மாட்டேன்' என, சட்டசபையில் முதல்வர்ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் திட்டவட்டமாக செய்யும்எந்த சபதங்களும், நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்ததில்லை என்பது நமக்கு தெரியாதா என்ன!
'மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டியில்டங்ஸ்டன் சுரங்க உரிமம் வழங்க, பிப்., மாதமே நடைமுறை துவங்கிய நிலையில், தி.மு.க., அரசு மவுனமாக இருந்துள்ளது. பிளாட்டினம், டங்ஸ்டன் உள்ளிட்ட, 20 கனிமங்களை எடுக்க, மாநில அரசின் அனுமதி தேவையில்லை என, பார்லிமென்டில் மத்திய அரசு கடந்த ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அப்போது,கூட்டணியில் இருந்த, 38 எம்.பி.,க்களும் அமைதியாக இருந்து விட்டனர். அப்போதே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தி இருந்தால், சுரங்கத்திற்கான ஒப்பந்தம் இறுதி நிலையை எட்டி இருக்காது.
'டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஒப்பந்தத்தைஅறிவித்தது முதல், இறுதி செய்யும் வரை தமிழக அரசு அமைதி காத்தது' என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, சட்டசபையில்,முதல்வருக்கு அடுத்து மூன்றாவது இருக்கையில் அமர்ந்து இருந்த அமைச்சர் நேரு, ஒரு இருக்கை தள்ளி, நான்காவது இருக்கையில் அமர்ந்து இருந்தாராம். நேரு அமர்ந்திருந்த மூன்றாவது இருக்கையில் உதயநிதி அமர, கட்சி தலைவர்களும், எம்.எல்.ஏ.,க்களும் அவரவர் இருக்கைகளில் இருந்து எழுந்து வந்து, உதயநிதிக்கு வாழ்த்து கூறினராம்!
கூட்டணி பலத்தால், 234 தொகுதிகளிலும்வெல்வோம் என்று உதார் விட்டுக் கொண்டிருந்தாலும், வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெறாது என்பது, ஸ்டாலினுக்கு தெரிந்து விட்டதோ என்னவோ, ஆட்சியில் இருக்கும்மிச்ச மீதி காலத்திற்காவது, மகனை முதல்வர்ஆசனத்தில் அமர வைத்து, அழகு பார்க்க நினைத்து விட்டார்.
அதற்கான முன்னேற்பாடு தான், இருக்கையை மாற்றி அமர வைத்து, 'பல்ஸ்' பார்த்ததும், 'டங்ஸ்டன் சுரங்கம் தோண்டப்பட்டால், முதல்வர் பொறுப்பில்இருக்க மாட்டேன்' என்ற சபதமும்!
அரசு களை எடுக்குமா?
பி.மணியட்டி
மூர்த்தி, கோவையில் இருந்து எழுதுகிறார்: விவசாயிகள், தாங்கள்பயிரிடும்
விளை பொருட்களை, இடைத்தரகர்கள் இன்றி, பொதுமக்களுக்கு நேரிடையாக விற்பனை
செய்வதற்காக, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, 1998 ல் விவசாய
உற்பத்தி சந்தைப்படுத்துதல், வரி மீளாய்வுக் குழு ஒன்றை அமைத்தார்.
அக்குழுவின்
தலைவராகநியமிக்கப்பட்ட தமிழ்நாடுவர்த்தக மற்றும் தொழில் துறைகளின் தலைவர்
ரத்தினவேலு, பல்வேறு மாநிலங்களின் விவசாயிகளை நேரடியாக சந்தித்து, அவர்கள்
தங்கள்விளை பொருட்களை எவ்வாறு விற்பனை செய்கின்றனர் என்பதை ஆய்வு செய்து,
அரசுக்குஅளித்த அறிக்கையின் அடிப்படையில், 1999 - 2000ம் ஆண்டு,
மாநிலத்தின் முதல் உழவர்சந்தையை, மதுரை அண்ணாநகரில் திறந்து வைத்தார்,
கருணாநிதி.
இத்திட்டம், பொதுமக்கள்மற்றும் விவசாயிகளால் பெரிதும்
வரவேற்க படவே, படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, உழவர் சந்தைகளின்
எண்ணிக்கை, 103 ஆக உயர்ந்தது, நாம் அறிந்ததே!
உழவர் சந்தைகளில்,
ஒவ்வொரு விவசாயிக்கும்தனித்தனி கடைகள் ஒதுக்கப்பட்டு, இலவசமாக எடை
கருவிகள் வழங்கப்பட்டன.விவசாயிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில்,
அவர்களின்குடும்ப உறுப்பினர்களின்படங்களும் இடம் பெற்றிருந்தன.
ஒவ்வொரு
கடையிலும்,அன்றைய விலை பட்டியல்இருக்கும். அரசு நியமித்த அதிகாரிகள்,
உழவர் சந்தையில் நிர்ணயித்த விலையில், சரியான அளவில் பொருட்கள்
விற்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பர். மேலும், பொருட்களின் விலையை அந்த
அதிகாரிகளே நிர்ணயிப்பர்.
அத்துடன், விவசாயிகள்தாங்கள் விளைவித்த
பொருட்களை அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல், இலவசமாகவேஉழவர் சந்தைக்கு
எடுத்து செல்ல, அரசு அனுமதி வழங்கியதால், கட்டண செலவும் அவர்களுக்கு
மிச்சமானது.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்ட உழவர்சந்தைகளையும், தற்போது,அரசியல்வாதிகள் விட்டு வைக்கவில்லை.
இன்று,
உழவர் சந்தைகளை ஆய்வு செய்தால், உண்மையான விவசாயிகள்என்று யாரையும்
சொல்ல முடியாது. எல்லாம், 'பசுதோல் போர்த்திய புலி'யாக, அரசியல்
செல்வாக்கு மிக்க வணிகர்களே, அதிகாரிகளை வசப்படுத்தி, கடைகளை
ஆக்கிரமித்துள்ளனர்.
இவர்கள், விவசாயிகளிடம் குறைந்த
விலைக்குகொள்முதல் செய்து, அதிகவிலைக்கு விற்று, கொள்ளைலாபம்
சம்பாதிக்கின்றனர்.இதனால், பாதிக்கப்படுவதுவிவசாயிகளும், பொதுமக்களும்
தான்.
இத்திட்டத்தின் நோக்கம்சிதைந்து விடாமல் இருக்க,மாநிலத்தில்
உள்ள அனைத்து உழவர் சந்தைகளையும், நேர்மையான அதிகாரிகளை வைத்து ஆய்வு
செய்து, போலி விவசாயிகளை அரசு களைஎடுக்க வேண்டும்!
அம்போ என நிற்கும் காங்.,
வி.எச்.கே.ஹரிஹரன்,
திண்டுக்கல்லிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: 'மத்தியஅரசு அதன்
நண்பர்களுக்கு,விமான நிலையங்களை தங்கத்தட்டில் வைத்து, தாரை வார்த்து
விட்டது' என, காங்., ராஜ்யசபா எம்.பி., சையது நசீர் ஹுசைன் குற்றம்
சாட்டிஉள்ளார்.
'ஏர் அத்தாரிட்டி ஆப் இந்தியா' என்பதை, 'அதானிஅத்தாரிட்டி ஆப் இந்தியா'என, பெயர் மாற்றலாம்.
எட்டு
விமான நிலையங்கள் அதானி குழுமம் வசம் உள்ளன. தனியார்வசம் இரு விமான
நிலையங்கள் மட்டுமேஒப்படைக்கலாம் என, பொருளாதார விவகார துறையும், நிதி
ஆயோக்கும்நிர்ணயித்துள்ளன.
தனியார் மயமான பின்,விமானங்கள் தரையிறங்க,பார்க்கிங் செய்ய, 400 சதவீதத்துக்கும் மேல் கட்டணம் உயர்த்தப்பட்டது.
மக்கள் எதிர்ப்பு காரணமாக,கென்யா நாட்டில் அதானி வசம் ஒப்படைக்க இருந்த விமான நிலையம் ரத்து செய்யப்பட்டது.
அதையே,
இந்தியாவில், பார்லிமென்டில் காங்., செய்தால், யாரும் ஆதரவுதரவில்லை என,
சக எதிர்க்கட்சிகளை குத்தி காட்டியுள்ளார், இந்த காங்., - எம்.பி.,
அவரது
கூற்றை மெய்ப்பிக்கும் வண்ணம்,பார்லிமென்ட் வாசல் முன்,இது தொடர்பாக
காங்., முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தில், உமர் அப்துல்லா, மம்தா
பானர்ஜி,அகிலேஷ் யாதவ் கட்சிகள்பங்கேற்கவில்லை; தி.மு.க.,வும் காங்.,
பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது!
அது சரி... 'ஆற்றைக் கடக்கும் வரை தான் அண்ணன், தம்பி;ஆற்றைக் கடந்து விட்டால்நீ யாரோ, நான் யாரோ!'

