/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
நாரோடு சேர்ந்து பூவும் நாறுகிறது!
/
நாரோடு சேர்ந்து பூவும் நாறுகிறது!
PUBLISHED ON : நவ 07, 2024 12:00 AM

க.வேலுமணி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொதுவாக,'பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்' என்பதுஇயல்பு. நம் நாட்டு அரசியலில் என்னவென்றால், நாரோடு சேர்ந்த பூவும் நாறுவதுபோல இருக்கிறது.
நாடு விடுதலை அடைந்தபோது நடைபெற்ற தேர்தலில், ஓட்டு போடும் மக்களுக்கு,5 ரூபாய் கொடுக்கும் திட்டத்தை, காங்., கட்சித் துவக்கியது.
அது தேர்தலுக்கு தேர்தல், பரிணாம வளர்ச்சி அடைந்து, மதுரை திருமங்கலம் இடைத்தேர்தலில், ஓட்டுக்கு 2,000 ரூபாய் என்று உயர்ந்தது. மேலும் உயர்ந்து, 2021 சட்டசபை தேர்தலின் போது, ஈரோடு பகுதிகளில், 10,000 ரூபாய்; ஓட்டுப்பதிவு நாளன்று, 'சரக்கு' மற்றும் பிரியாணி என்ற நிலையை எட்டியது.
இந்த இலவச வாக்குறுதிகளின் உபயத்தால்ஆட்சியில் அமர்ந்த கட்சி, பெண்களுக்கு இலவச பஸ் பயணம், மகளிர் உரிமைத் தொகை, கல்லுாரி மற்றும் உயர்நிலை பள்ளிமாணவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய், பள்ளியில் காலை சிற்றுண்டி, மதியஉணவு மற்றும் முட்டை என வாரி வழங்கி, மக்களை இலவசங்களுக்காக ஏங்க வைத்துள்ளதோடு, பிற அரசியல் கட்சிகளையும், கலவரத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகில் எதுவுமே இலவசம்கிடையாது; ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை உண்டு. அந்த வகையில், அரசிடமிருந்து மக்கள் பெறும் இலவசங்களுக்கு, வரிகள் வாயிலாக விலை கொடுத்தாக வேண்டும்.
இது புரியாமல், 'கழகம் தருகிறது; திராவிடமாடல் ஆட்சி தருகிறது' என்று சிலர், குதித்துகும்மாளம் அடித்து கொண்டிருக்கின்றனர்.
மூன்றாண்டுகளுக்கு முன் தமிழக சட்டசபை தேர்தல் நடந்தபோது, பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'ஓட்டளிப்போருக்கு பணம் பரிசளிப்பதோ, வெற்றி பெற்றால் அதைத் தருவோம், இதைத் தருவோம் என இலவச வாக்குறுதிகள் வழங்கும் வழக்கமோ, பா.ஜ.,வில் கிடையாது' என முழங்கினார்.
ஆனால், ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில்,பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்குமாதம் 2,100 ரூபாய் உதவித்தொகை; 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு; தீபாவளி மற்றும் ரக் ஷா பந்தன் திருவிழாக்களின்போது, இலவசமாகவே இரண்டு காஸ்சிலிண்டர்கள் உட்பட இன்னும் சில இலவச வாக்குறுதிகளையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
'பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்' என்ற பழமொழியே மாறும் வகையில், நம்மூர் திராவிட கட்சிகளைப் பார்த்து, நாரோடு சேர்ந்த பூவும் நாறுகிறது!
எவ்வளவு தான் பொறுப்பது நாங்கள்?
கா.வீர
உமாசங்கர், சென்னையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: மலேஷியாவின்,
கோலாலம்பூர் தமிழ்ச் சங்கம்சார்பாக, கடந்த 4ல் நடந்த நிகழ்ச்சியில், தமிழக
சட்டசபை சபாநாயகர் அப்பாவுபங்கேற்றார்.
'தமிழக பெண்களுக்கு முதல்வர்
மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்குகிறார். அந்ததொகை, கடனில்
தத்தளிக்கும்ஏழை பெண்கள் தங்கள்குழந்தைகளுக்கோ, பேரன்- பேத்திகளுக்கோ,
தின்பண்டம் வாங்கிக் கொடுக்கமிகவும் உதவியாக இருக்கிறது.
'பேரன் -
பேத்திகள் கேட்டதை வாங்கிகொடுக்கும் அளவுக்கு, பெண்களின் வாழ்வாதாரத்தை
தமிழக அரசு உயர்த்தியுள்ளது' என்று அப்பாவு பேசினார்.
பெண்களின்
வாழ்வாதாரத்தை மேம்படுத்த, கைத்தொழில், பனைப் பொருட்கள், விவசாய அறிவியல்,
கிராமந்தோறும்கல்வி, மாவட்டம் வாரியாகஉள்ள புராதன மற்றும் நலிந்துவரும்
தொழில்களைமேம்படுத்துதல், தையல் இயந்திரம் கொடுத்தல், அயர்ன் வண்டி
மற்றும்காய்கறி விற்பனை தள்ளுவண்டி, சோப்பு, வாசனைதிரவியம், சலவைத்துாள்,
ஊதுபத்தி, கற்பூரம், குங்குமம் தயாரித்தல் போன்றதொழில்களை ஊக்குவிப்பதை
விட்டுவிட்டு, தின்பண்டங்களில் ஒரு அரசு கவனம் கொடுத்தால் நாடு உருப்படுமா?
அப்பாவு,
ராதாபுரம் தொகுதியில் நான்குமுறை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர்.ஒரு பழுத்த
அரசியல்வாதியின் பேச்சு இவ்வாறு இருப்பது ஆரோக்கியமானவிஷயம் இல்லை.
நீங்கள்,
தமிழகத்தில் எப்படி வேண்டுமானாலும்நடந்து கொள்ளுங்கள்.வெளிநாட்டில் நம்
மானத்தைவாங்குவானேன்? உங்கள்தொகுதியில், 30 ஆண்டுகளாக உங்களுக்கு
ஓட்டளித்தபெண்களுக்கு நீங்கள் கொடுக்கும் பரிசு இதுதானா?மக்கள் மேம்பாடு
மற்றும்தொகுதி மேம்பாடு என்பதை, காற்றில் பறக்க விடுவீர்களா?
தமிழக
முதல்வர் உங்களைநம்பி, ஆஸ்திரேலிய காமன்வெல்த் மாநாட்டிற்கு வேறுஅனுப்பி
வைத்து உள்ளார்.உலகிற்கே வழிகாட்டக் கூடிய தமிழகத்தைப் பற்றி,ஆஸ்ரேலியா
சென்று என்ன பேசப் போகிறீர்களோ தெரியவில்லை.
தின்பண்டங்களை
வாங்க1,000 ரூபாய் கொடுப்பதற்குபதில், நியாய விலைக் கடைகளில், அவற்றை
இலவசமாக கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள். பணமாய் கொடுப்பதை விட, இது லாபகரமாக
இருக்கும்; உங்களுக்கும் பல கோடி ரூபாய் மிச்சமாகும்.
ஒரு நல்ல
அரசின் நலத்திட்டங்களை, சரியானமுறையில் செயல்படுத்துவதை விட்டு, '1,000
ரூபாயை வைத்து, பேர் அண்டு லவ்லி, முக பவுடர்வாங்கி பூசி விட்டீர்களா?'
என்று அசிங்கமாகவும், 'தின்பண்டங்கள் வாங்கி தின்பதற்கு தான் 1,000 ரூபாய்'
என்று அநாகரிகமாகவும், அடுக்கடுக்காக பேசியபடி இருக்கிறீர்கள்.
மக்களாகிய நாங்கள், எத்தனை விஷயத்தைத் தான் பொறுத்துக் கொள்வது?
பி.எ ஸ்.என்.எல்., பதிலளிக்குமா?
எஸ்.லக்
ஷ்மி நாராயணன்,சென்னையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: என்
பி.எஸ்.என்.எல்., லேண்ட் லைன் தொலைபேசியின் இணைப்பில் கடந்த வாரம் பழுது
ஏற்பட்டு, யாருடனும் தொடர்புகொள்ள முடியவில்லை.
நான்,
பி.எஸ்.என்.எல்.,புகார் மையத்தை, வேறு ஒரு போன் வாயிலாக தொடர்பு கொண்டு
பிரச்னையைத்தெரிவித்தேன். எதிர்முனையில் பேசியவர்,என் தொலைபேசி இணைப்பை,
'ஆப்டிக்பைபர்' முறைக்கு மாற்றி விட்டீர்களா எனக்கேட்டார்.
அதற்கு
நான்,'என்னிடம் கணினியோ,இன்டர்நெட் இணைப்போ இல்லை. என் தொலைபேசியை, வெறும்
அழைப்புகளுக்கு மட்டுமேபயன்படுத்துகிறேன். அதனால் எனக்கு,'ஆப்டிக் பைபர்'
தேவையில்லை; 'காப்பர் கேபிள்' ஏற்பாடே போதும்' என்றேன்.
அந்த
ஊழியர், நான் ஆப்டிக் பைபர் முறைக்கு மாறாதவரை, என் குறைகளை ஏற்றுக்
கொள்ளவோ, தீர்க்கவோ முடியாது என்று கூறியதோடு, புகார் கொடுத்த என்மீது
நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பயமுறுத்தினார்.
புகார் கொடுத்து
பல நாட்களாகியும், இன்னமும்என் லேண்ட்லைன் தொலைபேசியின் இணைப்பு
சரிசெய்யப்படவில்லை. மாறாக, 'உங்கள் குறைக்குமுடிவு காணப்பட்டு விட்டது'
என்று குறுஞ்செய்தி வந்துவிட்டது.
இது சம்பந்தமாக, பி.எஸ்.என்.எல்.,
நிர்வாகத்திடம் இருந்து, 'தற்போது காப்பர் கேபிள் இணைப்பு வைத்திருக்கும்
பயனாளிகள் அனைவரும் கண்டிப்பாக ஆப்டிக் பைபர் இணைப்புக்கு உடனடியாக மாற
வேண்டும்' என்று காலக்கெடு நிர்ணயித்து, எந்த உத்தரவும் வரவில்லை.
பி.எஸ்.என்.எல்., இதற்கு பதிலளிக்குமா?