sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

காலத்தின் கட்டாயம்!

/

காலத்தின் கட்டாயம்!

காலத்தின் கட்டாயம்!

காலத்தின் கட்டாயம்!

1


PUBLISHED ON : ஜன 06, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 06, 2025 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.சந்திரகாந்தன், நீலகிரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கடந்த 44 மாத தி.மு.க., ஆட்சியில், தமிழகம் குற்ற பூமியாக மாறி விட்டது. தினமும் நடக்கும்குற்றச் சம்பவங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகள் முதல், பாலியல் வன்கொடுமைகுற்றவாளிகள் வரை பலர் ஆளும் தி.மு.க.,வைச் சேர்ந்தவர்களாக இருப்பதும், அவர்களை காப்பாற்ற, தி.மு.க., அரசு முயற்சிப்பதும் கொடுமையானது.

'அண்ணா பல்கலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி, ராமநாதபுரத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு நேர்ந்த கூட்டு பாலியல்வன்கொடுமை, சென்னை வில்லிவாக்கத்தில்,10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்,ஓசூரில், 80 வயது மூதாட்டிக்கு பாலியல்வன்கொடுமை என, ஊடகங்களில் வரும்செய்திகள் கவலை அளிக்கின்றன' என, அங்கலாய்த்துள்ளார், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி.

கூடவே, 'பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள, தற்காப்புக்காக ஸ்பிரே, எமர்ஜென்சி அலாரம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வைத்துக் கொள்ள வேண்டும்' என்று ஐடியா வேறு கொடுத்துள்ளார்.

பழனிசாமியின் இந்த ஐடியா ஒர்க் அவுட்ஆகுமா என்றால், நிச்சயம் ஆகாது.

தனி மனிதன் என்றால், இந்த ஐடியா உபயோகமாகும். கூட்டமாக வருவோரிடம்அவை வேலைக்கு ஆகாது.

கழகத்தினரின் கல்யாண குணமறிந்து தான், 50 ஆண்டுகளுக்கு முன்னரே, அ.தி.மு.க., தொண்டர்களிடம், 'உங்களைபாதுகாத்துக் கொள்ள, ஆளுக்கொரு கத்தியைகையில் வைத்துக் கொள்ளுங்கள்' என, ஆலோசனை கூறினார், எம்.ஜி.ஆர்.,

கத்தி செய்யும் காரியத்தை, பெப்பர் ஸ்பிரே செய்து விடுமா என்ன?

அ.தி.மு.க., தொண்டர்களுக்கு எம்.ஜி.ஆர்., கொடுத்த அறிவுரையை, தற்போது வெளியிடங்களுக்கு செல்லும் பெண்கள் மட்டுமல்ல; வீட்டிலிருக்கும் பெண்களும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

'பேய் அரசாண்டால், பிணம் தின்னும் சாஸ்திரங்கள்' என்றார், பாரதியார்.

எனவே, குற்றம் நடந்தபின், கிடைக்காதநீதிக்கு போராடுவதை விட, பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வது சாலச் சிறந்தது!

அரசு ஒத்துழைக்க வேண்டும்!


வெ.சீனிவாசன், திருச்சியில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'கடிதம்: தமிழகத்தில் பல பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்கள் பணி இடம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதால், பல்கலைக் கழகங்களின் செயல்பாடுகள் பல விதங்களில் முடங்கியுள்ளன.

இதற்கு என்ன காரணம்?

துணைவேந்தர் தேடுதல்குழுவில், பல்கலைக் கழகங்கள் மானியக் குழு சார்பில், ஒருவரை நியமனம்செய்ய தமிழக அரசு தொடர்ந்து மறுத்து வருவதுதான்!

இதை, கவர்னர் சுட்டிக்காட்டியும், மாநில அரசு தன் போக்கை மாற்றிக் கொள்ளாமல் பிடிவாதம் பிடிக்கிறது.

புதிய அமைச்சர் வருகைக்குப் பின், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்பி இருந்த நிலையில், இன்னமும் பிரச்னை முடிவுக்கு வந்தபாடில்லை.

இதனால் பாதிக்கப்படுவது, பல்கலைக் கழகங்களின் அன்றாட செயல்பாடுகளும், கல்வியின் தரமும், மாணவர்களின் எதிர்காலமுமே!

கழகங்களின் ஆட்சிக்கு முன், தமிழகம் அதிக அளவிலான, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்.,- ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகளையும், திறமையான நிர்வாகிகளையும் தேசத்திற்கு அளித்து வந்தது.

இன்றைய நிலைமை என்ன என்பதை நாம் அனைவரும் அறிவோம்!

கல்வியில் அரசியல் செய்யாமல், கவர்னர் மற்றும் மத்திய அரசோடு ஒத்துழைத்து, கல்வியின் தரம், மாணவர்களின் எதிர் காலம் கருதி, எந்த வித பாரபட்சமுமின்றி, தகுதி மற்றும் திறமையான துணைவேந்தர்களை நியமனம் செய்ய, மாநில அரசுதன் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்!

பாரா ட்ட வழியில்லையே!


என்.வைகைவளவன், மதுரையில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: 'திருவள்ளுவர் சிலைக்கு விழாவா என்று சில அதிமேதாவிகள் கேள்வி கேட்கின்றனர்' என்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

இந்நாட்டில் எத்தனையோதலைவர்களுக்கு சிலைகள்நிறுவப்பட்டுள்ளன; ஆனால், எந்தச் சிலைக்கும்விழா எடுத்ததாக வரலாறு இல்லை.

தமிழகத்தில் தனிமனிதனுக்கு சிலை வைக்கும் கலாசாரத்தைப் பரப்பியவர்களே இந்த திராவிடச் செம்மல்கள் தான்!

திருவள்ளுவருக்கு சிலைஅமைத்தனர்; அவர் பெயரில் சென்னையில்வள்ளுவர் கோட்டம் கட்டினர். ஆனால், மனிதர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய நெறியாகஅவர் கூறிய, கள்ளுண்ணாமையை மட்டும் கண்டுகொள்ளாமல், மூலை முடுக்குஎல்லாம் டாஸ்மாக் கடைகளைத் திறந்தனர்.

'திருக்குறள் தமிழின் பொக்கிஷம்' என்று புகழும்அதே வாயால், திருக்குறளை தங்கத் தட்டில் வைக்கப்பட்டுள்ள மலம் என்று அசிங்கப்படுத்தியவரை தான், தங்கள் கொள்கைத் தலைவராக பறைசாற்றுகின்றனர்!

திருவள்ளுவர் சொன்னதைஎல்லாம் புறக்கணித்து விட்டு,அவருக்கு சிலை எடுப்பதாலோ, கோட்டம் அமைப்பதாலோ என்ன பெருமை கிடைத்து விடப் போகிறது?

ஈ.வெ.ரா., திருக்குறளைமட்டுமா அவமதித்தார்... செம்மொழி என்று போற்றப்படும் தமிழை, காட்டுமிராண்டி மொழி என்று இகழ்ந்தவர் தானே!

இவர் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறும் ஸ்டாலின், திருவள்ளுவருக்குவிழா நடத்துவது கேலிக்குரிய செயல் இல்லாமல், பாராட்டுக்குரிய செயலாக எப்படி மதிக்கப்படும்?



நீதியை எதிர்பார்க்க முடியுமா?


வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: -----------------------------------------------அண்ணாமலையின்சாட்டையடி, ரசிக்கும்படிஇருந்ததாக கூறியுள்ளார்,ம.தி.மு.க., பொதுச்செயலர்,வைகோ.

அதை மட்டும் தான் வைகோ ரசித்தாரா இல்லை...மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தையும் கேட்டு ரசித்து மகிழ்ந்தாரா?

கட்சி துவங்கி, 30 ஆண்டுகள் முடிந்து விட்டது. ஒருமுறை கூட தேர்தல் களத்தில் தனித்து நின்று வெற்றி பெற முடியவில்லை... ராப்பிச்சைக்காரன் திருவோடை துாக்கிக் கொண்டு, அந்த வீட்டுக்கும், இந்த வீட்டுக்கும் அலைவதைப் போல், தி.மு.க., - அ.தி.மு.க., என மாறி மாறி கூட்டணிவைத்தும், கழுதை தேய்ந்துகட்டெறும்பான நிலையில்உள்ளது கட்சி!

அதையெல்லாம் சீர்துாக்கிப் பார்க்க மாட்டார்; எதிர்க்கட்சித் தலைவர் சாட்டையால் அடித்துக் கொண்டால் அதை ரசித்துப்பார்ப்பார்!

அதுசரி... தன் மகன் எம்.பி., ஆக வேண்டும் என்பதற்காக, கட்சிக்காக உழைத்த ஈரோடு கணேசமூர்த்தியை கண்டு கொள்ளாமல் அலட்சியப் படுத்தி, அவர் தற்கொலை செய்து இறந்து போக காரணமாக இருந்த பெருந்தலைவர் அல்லவா...

இவருக்கு அண்ணாமலையின் சாட்டை அடி மட்டுமல்ல... தமிழகத்தில் நடக்கும் அத்தனை சட்ட விரோத செயல்களும் ரசிக்கும்படி தான் இருக்கும்!

ஏனென்றால், அவர் கட்சி நடத்துவது, மக்களுக்காக அல்ல; தன் மகன் துரை வைகோவிற்காக!

தானும், தன் மகனும் பதவி சுகத்தை அடைய, ஸ்டாலின் காலில் விழுந்து கிடப்பவரிடம், ஒரு பெண்ணிற்கான நீதியை எதிர்பார்க்க முடியுமா?

சிலருக்கு வாழ்வின் இறுதிக் கட்டத்திலாவது ஞானம் பிறக்கும்; இவர் போன்றோருக்கு கடைசி வரை அது கிட்டவே கிட்டாது!






      Dinamalar
      Follow us