sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 20, 2026 ,தை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

 எங்கள் கனவுகள் இவை தான்!

/

 எங்கள் கனவுகள் இவை தான்!

 எங்கள் கனவுகள் இவை தான்!

 எங்கள் கனவுகள் இவை தான்!

3


PUBLISHED ON : ஜன 17, 2026 04:12 AM

Google News

PUBLISHED ON : ஜன 17, 2026 04:12 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெ.சீனிவாசன், திருச்சியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'உங்களின் கனவுகளைச் சொல்லுங்கள்' என்று தி.மு.க., தலைவர் மக்களிடம் கேட்டிருக்கிறார். மக்களாகிய நாங்கள், கீழ்க்கண்டவாறு கனவு கண்டோம்...

*இன, மொழி, மதச் சார்பான, பிரிவினைவாத அரசியல் வேண்டவ ே வேண்டாம்

*பெரும்பான்மையினர் விரோத, மை னாரிட்டிகள் தாஜா செய்யும் அரசியல் வேண்டாம்

*ஹிந்துக்களின் பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்லி மகிழ்ந்து, விழாக்களில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் வரவேண்டும்

* கட்சிக்காரர்களின், கூட்டணி கட்சிகளின் அராஜகம், வன்முறைகளை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்

* ஆட்சி நிர்வாகத்தில், கட்சியினரின் தலையீட்டை, அழுத்தத்தை, அறவே ஒழிக்க வேண்டும்; தலையீடு செய்பவர்கள் கட்சியிலிருந்து தயவு தாட்சண்யமின்றி நீக்கப்பட வேண்டும்

* ஊழலில்லாத, திறமையான ஆளுமை தேவை; 'கட்டிங், வெட்டிங்' இல்லாத, திறமையான ஒப்பந்ததாரர்கள் வாயிலாக மக்கள் பணிகள் செவ்வனே நிறைவேற்றப்பட வேண்டும்

* வாரிசு அரசியல் வேண்டவே வேண்டாம்; உழைப்பவர்கள், தகுதியானவர்கள், திறமையானவர்களுக்கே கட்சியில் பதவியும், பொறுப்பும் கொடுக்கப்பட வேண்டும்

* லஞ்சமே கேட்காத அரசு ஊழியர்கள், பொதுமக்களை அனாவசியமாக அலைக்கழிக்காமல் விரைந்து பணிகளை செய்து கொடுக்கும் அரசு அலுவலகங்கள் வேண்டும்

* அனைவருக்கும் பொதுவான, பாரபட்சமற்ற நிர்வாகம், ஆளும் கட்சி எடுபிடிகள் போல் செயல்படாத காவல் துறை வேண்டும்

* பூரண மதுவிலக்கு, போதைப் பொருட்களே கிடைக்காத தமிழகம், பெண்கள் இரவிலும் தனியாக நடந்து செல்லக்கூடிய அளவுக்கு பாதுகாப்பு வேண்டும்

* தரமான கல்வி, சுகாதாரம், சாலைகள் வேண்டும்

* அனைவருக்கும், 100 சதவீதம் பாதுகாப்பான குடிநீர், எவ்வளவு மழை பெய்தாலும், வீடு தேடி வராத மழைநீர், அதிகப்படியான மழைநீர் வீணாகக் கடலுக்குள் செல்லாமல், பல இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்

* ஹிந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை அரசின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும்

* ஓட்டுக்குப் பணம், இலவசங்கள், நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகள் போன்றவை வேண்டவே வேண்டாம்.

கனவுகளை சொல்லி விட்டோம்; நிறைவேற்றுவாரா முதல்வர்?

மீண்டும் ஏமாறுவரா மக்கள்?


எஸ்.ராமகிருஷ்ணன், கோ வையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வரும் சட்டசபை தேர்தலிலும் தி.மு.க., வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்து, தன் மகன் உதயநிதியை முதல்வராக்கி அழகு பார்க்க ஆசைப்படுகிறார், முதல்வர் ஸ்டாலின்.

கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற காரணமே, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிேஷார் வகுத்துக் கொடுத்த, 'தேர்தல் வாக்குறுதி' எனும் புரட்டுகளால் தான்!

கடந்த 2021 தேர்தலின் போது, தமிழகத்தின் நிதிநிலை மிக பலவீனமாக இருந்த நிலையில், எப்படி பழைய ஓய்வூதியம் அமல்படுத்த முடியும்; நகைக்கடனை தள்ளுபடி செய்ய முடியும்?

ஆனாலும், 'பாம்புக்கும், கீரிக்கும் சண்டை விடுகிறேன்' என்று சொல்லி கூட்டத்தைக் கூட்டி, தாயத்து விற்று செல்லும் பாம்பாட்டி போல், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மணலை கயிறாக திரித்து, வானத்தில் தோரணம் கட்டுவோம்...' என்ற ரீதியில் வாக்குறுதிகளை அளந்து, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது தி.மு.க.,

ஆட்சிக் கட்டிலில் ஏறியதும், 'அது நல்ல வாய்; இப்போது இருப்பது நாற வாய்' என்பது போல், தி.மு.க., வாக்குறுதிகளை நிறைவேற்றாததுடன், நாள்தோறும் ஒரு திட்டம் அறிவிப்பதும், அதற்கொரு விழா எடுத்து, பாராட்டு பத்திரம் வாசிப்பது என்று நான் கரை ஆண்டுகால ஆட்சியை ஓட்டி வி ட்டார், முதல்வர் ஸ்டாலின்.

இப்போது, சட்டசபை தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், 'உங்கள் கனவை சொல்லுங்கள்' என்று கேட்டுக் கொண்டு வருகிறார்.

தமிழக மக்கள் தங்கள் கனவை கூறிவிட்டால் மட்டும் நிறைவேற்றி விடுவாரா, இந்த திராவிட மாடல் முதல்வர்!

'மகளிர் உரிமை தொகை தருகிறோம் என்று தான் கூறினோம்; எப்போது தருகிறோம் என்று சொன்னோமா...' என்று தி.மு.க., அமைச்சர்கள் கேட்டது போல், இதற்கும், 'உங்கள் கனவை சொல்லுங்கள் என்று தான் கேட்டோம்; கனவை நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதி கொடுத்தோமா...' என்று கேட்கப் போகின்றனர்.

அதற்கு, தி.மு.க., எனும் பருத்தி மூட்டை கிடங்குக்குள் இருப்பதே சிறப்பு!

தி.மு.க., டிபாசிட் இழப்பது நிச்சயம்!

அ.சேகர், கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'திருப்பரங்குன்றம் கோவில் தீபத்துாணில் தீபம் ஏற்றலாம்' என்று மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, எந்தவொரு இஸ்லாமியரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், இஸ்லாமியரின் ஓட்டு வங்கிக்காக, சட்டம் - ஒழுங்கு பிரச்னை வந்து விடும் என்று பொய்யான காரணம் சொல்லி, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மறுத்து, தடை விதித்தது, தி.மு.க., அரசு.

அதுமட்டுமா... ஹிந்துக்கள் மனம் புண்படும் வகையில், அத்தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்தது. கூடவே, நீதிபதி சுவாமிநாதன் பதவி விலக வேண்டும் என்று சபாநாயகரிடம், தி.மு.க., - எம்.பி.,க்கள் மனு கொடுத்தனர்.

மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய நீதிபதிகள் மீது தான் இப்படி மனுக்கள் கொடுக்கப்படுவது வழக்கம். ஆனால், வழக்கின் தீர்ப்புக்காக நீதிபதியை அவதுாறாக பேசியதுடன், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் மனுக் கொடுத்தது, இந்திய அரசியல் வரலாற்றில் இதுதான் முதல் முறை.

தி.மு.க.,வின் ஒருதலைப்பட்சமான இந்த பாசிச நடவடிக்கை, ஹிந்துக்கள் மனதில் கோபத்தை உண்டு செய்தது; முருக பக்தர்களை கொதிப்படைய வைத்தது.

விளைவு... தி.மு.க.,வை சேர்ந்த முருக பக்தரான, 40 வயதான பூர்ண சந்திரன் தீக்குளித்து இறந்தார்.

இறப்பதற்கு முன், அரசியல் லாபம் கருதி, தி.மு.க., அரசு தீபம் ஏற்ற தடை செய்து வருவதாக மனம் நொந்து கூறியிருந்தா ர்.

அதையே, தற்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். அத்துடன், நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பை உறுதி செய்தது மட்டுமல்லாமல், 'தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில் தான் தீபத் துாண் உள்ளது; கலெக்டர் மேற்பார்வையில் கோவில் நிர்வாகம் தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும்' என்றும் உத்தரவிட் டுள்ளனர்.

'இதை எதிர்த்து, தி.மு.க., உச்ச நீதிமன்றம் செல்லும்' என்கிறார், சட்ட அமைச்சர் ரகுபதி. தி.மு.க.,வின் இந்த கேவலமான செயலால், பூர்ணசந்திரன் போன்ற தி.மு.க., குடும்பத்தினர்கள் கூட வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,விற்கு ஓட்டுப் போடப் போவதில்லை!

கடைசியில், அரசனை நம்பி புருஷனை இழந்த கதியாக, சிறுபான்மை ஓட்டுக்காக ஹிந்துக்களின் ஓட்டுகளை இழந்து, தி.மு.க., டிபாசிட் இழக்கப் போவது நிச்சயம்!






      Dinamalar
      Follow us