தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/இது உங்கள் இடம்: நவ. 11

இது உங்கள் இடம்: நவ. 11

இது உங்கள் இடம்: நவ. 11

2


PUBLISHED ON : நவ 11, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 11, 2026 12:00 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மின் தடை ஏன்... புரிந்து கொள்ளுங்கள்!


கோ. மாரி சேர்வை, ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர், வரலாற்று ஆர்வலர், ராமநாதபுரத்திலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: சமீபத்தில், இதே பகுதியில், மின்வாரியத் துறை அமைச்சர், நிர்மல் குமாரின் மின்துறை சார்ந்த விஷயங்களில் பொய் சொல்கிறார் என்று ஒரு வாசகர் எழுதி இருந்தார்.
நான், விஜய் கட்சி உறுப்பினர் கிடையாது; ஆனால், மின்வாரியத்தில்பணிபுரிந்து, 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்றவன்; என் வயது, 81.
இந்த ஆண்டு, தென் மேற்கு பருவக் காற்றினால், மழை சரியாக பெய்யவில்லை; அதனால் நீர் மின் திட்ட மின்சாரம் குறைந்து போனது; அத்துடன், விவசாயமும் சரியாக நடைபெறவில்லை.
மின்துறை அமைச்சர், கடந்த ஆண்டில், ஏப்ரல் 2026 முதல் ஜூலை மாதம் வரை எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது என்றும், இந்த ஆண்டு அதே காலகட்டத்தில், எவ்வளவு கூடி உள்ளது என்பதையும், வாரம்தோறும் பதிவு செய்திருந்தார்; அதை பார்த்து இருந்தால், அமைச்சர் சொல்லும் காரணத்தை மறுத்துச் சொல்லி இருக்க முடியுமா?
அடுத்து, கடந்த ஆட்சியில் மின்வாரிய அலுவலகத்தில் இருந்த, ‘ஹார்டு டிஸ்க்’குகள் திருடப்பட்டன என அமைச்சர் சொன்னார்; ‘அப்படி நடக்கவில்லை’ என, சம்பந்தப்பட்ட யாராவது மறுத்தனரா?
பல இடங்களில், ‘பியூஸ் கேரியர்’களை, சில விஷமிகள் எடுத்துச் சென்றதால், மின் தடை ஏற்பட்டது உண்மை தானே! தலைமைச் செயலகத்தில் மின் தடை ஏற்பட்டதே... அது மின் வாரியத்தாலா ஏற்படுத்தப் பட்டது?
அந்த வளாகத்துக்குள் மின்சாரத்தைப் பாராமரிக்க சில பணியாளர்கள் உள்ளனர்; அவர்களால் தான் மின் தடை ஏற்பட்டது. இதற்கு மின் வாரியத்தைக் குறை சொல்வதைப் போன்ற அபத்தம் வேறு ஏதும் கிடையாது.
துணை ஜனாதிபதி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தபோதும், மின் தடை ஏற்பட்டது. அதற்கும் மின் வாரியத்துக்கும் என்ன சம்பந்தம்?
இந்த நிகழ்வு குறித்து, அமைச்சர் நிர்மல் குமார் விலாவாரியாக பதிவு செய்த பின்பும், அவரைக் குற்றம் சொல்வது சரியா?
மிக முக்கியமாக, இன்று வரை சிலரால் சொல்லப்படும் குற்றச்சாட்டு, ‘புதிய அரசு வந்ததும், வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்ந்து விட்டது’ என்பது தான்; இதில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை.
விஜய் ஆட்சிக்கு வந்த பின், மின் கட்டணம் ஒரு பைசா கூட கூடவில்லை. நான் சொல்வது தவறு என்று, யாராவது ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா? என் தொலைபேசி எண்: 94889 44975. இதில் தொடர்பு கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்!

மத்திய அரசின் நோக்கத்தை
வரவேற்போம்!
எஸ்.ஏ.ஸ்ரீனிவாச சர்மா, கோயம்புத்துாரிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: புற்று நோய் மருந்து விலை குறைப்பு, மிகப் பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். சமுதாயச் சிந்தனையோ, பொறுப்போ இல்லாமல், லாபம் தான் முக்கியம் என்று கருதும் மருத்துவமனை மற்றும் மருந்துத் தொழில் நிறுவனங்கள், அன்பு, கருணை, தர்மம் அடிப்படையில் செயல்பட வேண்டும்.
விஞ்ஞான ஆராய்ச்சி மூலம் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களின் உடல்நலம் காக்கப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு, மத்திய அரசு களமிறங்கி உள்ளது வரவேற்கத்தக்கது.




தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us