தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/இது உங்கள் இடம்: நவ. 14

இது உங்கள் இடம்: நவ. 14

இது உங்கள் இடம்: நவ. 14


PUBLISHED ON : நவ 14, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 14, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முதல்வர் எனில்

இப்படி தான்

இருக்க வேண்டும்!

சி.ஸ்ரீதேவி, பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: 'மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

'இருள்நீங்கி ஒளிபிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை, பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத் தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம்.

'இல்லங்கள் தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்...' என்று மிக நீண்ட, மிகவும் அருமையான தீபாவளி வாழ்த்தை கூறியிருந்தார் முதல்வர் விஜய்.

ஒரு கட்சியின் தலைவர், தன் தொண்டர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறலாம், கூறாமலும் இருக்கலாம்; அது அவரது விருப்பம். ஆனால், ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பவர், மாநிலத்தில் வாழும் அனைத்து தரப்பு மக்களுக்குமானவர் என்பதால், எல்லா தரப்பு மக்களையும் சரிசமமாக நடத்த வேண்டும்; அதுதான் தர்மம்.

ஆனால், முந்தைய, தி.மு.க., ஆட்சியில் முதல்வராக இருந்த ஸ்டாலின், கடவுள் நம்பிக்கை இல்லை என்பார்; ஹிந்து மதத்தை இழிவாக பேசுவார்; ஹிந்து பண்டிகைகளுக்கு ஒரு வரியில் கூட வாழ்த்து சொல்ல மாட்டார்; ஆனால், ஓட்டுக்காக பிற மதங்களை போற்றுவதுடன், அவர்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்தும் கூறு வார்... அதை பகுத்தறிவு என்று வேறு பிதற்றுவார்.

ஆனால், இன்றைய முதல்வர் விஜய், அப்படி போலி வேஷம் போடவில்லை. 'எம்மதமும் சம்மதம்' என்பதையும் கடந்து, 'எம்மதமும் நம் மதம்' என்று கூறுகிறார் விஜய்.

அவர் ஒரு கிறிஸ்துவராக இருந்த போதிலும், எல்லா மத நம்பிக்கைகளையும் மதிக்கிறார். எல்லா கடவுளையும், வெளிப்படையாகவே வணங்குகிறார். எல்லா மத பண்டிகைகளுக்கும் வாழ்த்தும் கூறுகிறார். முதல்வர் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும்!

காங்., செய்தால்

பெருமிதம்;

பா.ஜ.,வெனில்

இளப்பமா?



எஸ்.ராதிகா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்தியாவின் பாரம்பரியமிக்க நிறுவனமான, 'டாட்டா சன்ஸ்' அமைப்பில் ஏற்பட்டுள்ள விவாதமும், அதைச் சுற்றி நடக்கும் அரசியல் நிகழ்வுகளும், அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. ஒரு தனிப்பட்ட நிறுவனத்தின் உள் விவகாரம் என்ற எல்லைகளைத் தாண்டி, அதற்கு அரசியல் சாயம் பூசுவதும், அரசியல் தலைவர்கள் தலையிடுவதும் கவலையளிக்கிறது.

டாட்டா சன்ஸ் தலைவராக இருக்கும் நடராஜன் சந்திரசேகரன், இந்நிறுவனத்தில் பொதுமக்களும் பங்குதாரர்களாகப் பங்கேற்கும் வகையில் பங்குச் சந்தையில் பட்டியலிட, தொலைநோக்கு எண்ணத்துடன் செயல்படுகிறார்.

இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனம், எதிர்காலத்தில் பல துறைகளில் கால்தடம் பதிக்கும்போது, அது ஒரு தனிப்பட்ட குடும்பச் சொத்தாக மட்டுமே நீடிக்காமல், பொதுமக்களின் பங்களிப்புடன் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும், என்ற நிலைப்பாடு வரவேற்புக்குரியது.

இருப்பினும், இந்த விவகாரத்தில் கருத்து வேறுபாடுகள் எழும்போது, அரசியல் கட்சிகளும், வழக்கறிஞர்களும் இரு பிரிவுகளாகப் பிரிந்து வாதாடும் சூழல் உருவாகியுள்ளது. இதில் காங்கிரஸைச் சேர்ந்த ராகுல் போன்றவர்கள், மத்திய அரசு மீதும், மத்திய நிதிஅ மைச்சர் நிர்மலா சீதாராமன் மீதும் வீண் பழி சுமத்துவது வேதனையளிக்கிறது.

கடந்த காலத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்தில் சொத்துத் தகராறு எழுந்தபோது, அப்போதைய மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் நேரடியாகத் தலையிட்டு, குடும்பச் சொத்தைப் பிரித்துக் கொடுத்ததை பெருமை யாகப் பேசிய காங்கிரசார், இன்று டாடா சன்ஸ் விவகாரத்தில், மத்திய அரசின் மீதும், நிதியமைச்சர் மீதும் பழிசுமத்துவது முரண்பாடாக உள்ளது.

மேலும், மே.வங்கத்தைச் சார்ந்த, திரிணமுல் காங்., - எம்.பி., மஹுவா மொய்த்ரா, நிதிஅமைச்சரை விமர்சிக்கிறேன் என்ற பெயரில், 'வெங்காயத்தை, டாடா சன்ஸ் சாம்பாரில் கலக்கப் பார்க்கிறார் நிர்மலா' என்று கிண்டலடித்து, தமிழர்களின் பண்பாட்டைக் கொச்சைப்படுத்தும் வகை யில் பேசியுள்ளார்.

ஒரு பெரிய நிறுவனத்தின் வணிக முடிவுகளில் அரசியல் தலையீடு இருப்பது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில் துறைச் சூழலுக்கும் மாபெரும் கேட்டை விளைவிக்கும். அரசியல் லாபத்திற்காகத் தொழில்துறையைக் குழப்ப நினைக் கும் காங்கிரசின் செயல் கள் கண்டிக்கத்தக்கவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us