PUBLISHED ON : நவ 17, 2026 12:00 AM

மணல் கொள்ளைக்கு
முற்றுப்புள்ளி
எப்போது?
செ.சுப்பிரமணி, பெரியகுளம், தேனி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, ‘இ –மெயில்’ கடிதம்: தமிழகத்தில், மணல் குவாரி முறைகேடு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட 27 பேர் மீது, லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,427 கோடி ரூபாய், அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் ஒரு கட்சியையோ, ஒரு தனிநபரையோ மட்டும் சார்ந்ததல்ல. இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் அரசின் பொறுப்பையும், நிர்வாகத்தின் நேர்மையையும் கேள்விக்குள்ளாக்குகிறது.
மணல் எடுப்பதற்கு அனுமதி வழங்கும் நடைமுறைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்.
ஒப்பந்தங்கள் முறை யாக அறிவிக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு விதிமுறைகளின்படி வழங்கப்பட வேண்டும்.
குவாரிகளில் கண் காணிப்பு கேமராக்கள், எடை அளவீட்டுக் கருவிகள், வாகனங்களுக்கான மின்னணு அனுமதிச் சீட்டுகள் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.
மணல் எடுத்துச் செல்லும் வாகனங்களின் விபரங்களை இணையத்தில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் வெளியிடலாம்.
மணல் கொள்ளையால், ஆறுகளின் நீரோட்டம் பாதிக்கப்படுகிறது; நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது; விவசாயம் பாதிக்கப் படுகிறது; பாலங் கள், நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
எனவே, இது வெறும் வருவாய் இழப்பு பிரச்னை அல்ல; எதிர்காலத் தலைமுறையின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் பிரச்னையுமாகும்.
இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும், சட்டப்படி நியாயமான விசாரணை நடைபெற வேண்டும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேநேரத்தில், நிரபராதிகள் பாதிக்கப் படாமல் இருப்பதும் உறுதி செய்யப்பட வேண்டும்.
அரசியல் அதிகாரம் என்பது இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்கான உரிமம் அல்ல; அவற்றை பாதுகாப்பதற்கான பொறுப்பு!
