தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/இது உங்கள் இடம்: நவ. 23

இது உங்கள் இடம்: நவ. 23

இது உங்கள் இடம்: நவ. 23


PUBLISHED ON : நவ 23, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 23, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நீதிமன்றங்கள் தடை விதிக்க வேண்டும்!



பா.அஸ்வின், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: கோவையில், ஈ.வெ.ரா., நுாலகத்திற்காக நுால்கள் கொள்முதல் செய்ததில், ஊழல் நடந்துள்ளது வெட்டவெளிச்சமாகி விட்டது.

தமிழக மக்களை அடிமுட்டாள்களாக நினைத்து, இதிலும் தன் விஞ்ஞான ஊழலை அரங்கேற்றியுள்ளது, தி.மு.க.,

முதலில், மக்கள் வரிப்பணத்தில் கட்டும் பொது கட்டடங்களுக்கு எதற்கு கட்சி மற்றும் கொள்கை சார்ந்த தலைவர்களின் பெயர்களை வைக்க வேண்டும்?

இவர்கள் என்ன சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களா அல்லது தங்கள் சொத்துக்களை மக்களுக்காக தானம் செய்த வள்ளல்களா?

ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி, ஜெயலலிதா என, கட்சி தலைவர்களின் பெயர்களை வைப்பதே, அவர்கள் சார்ந்த பிம்பத்தை மக்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கும் ஜனநாயக விரோத செயல் தானே!

எனவே, மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படும் பொது கட்டடங்களுக்கு, கட்சி தலைவர்களின் பெயரைச் சூட்டி, தங்கள் கட்சியையும், அதன் தலைவர்களையும் விளம்பரப்படுத்த நினைக்கும் அரசியல் கட்சிகளின் தந்திரச் செயலுக்கு, நீதிமன்றங்கள் தடை விதிக்க வேண்டும்!

lll

காங்கிரசை அழிக்கும் ராகுல்!



பா.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ‘என் மீது சுமத்தப்பட்ட தேச விரோதி, வெளிநாட்டு சக்திகளின் கட்டுப்பாட்டில் இருப்பவர் போன்ற குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்க, நான் விடுத்த சவால் இன்னும் நிலுவையில் உள்ளது.

‘இந்த விவாதத்திற்கு பின், எந்தவொரு படை வீரரின் முன்பும் மீண்டும் நிற்பதற்கான துணிச்சல் பிரதமருக்கு இருக்காது’ என்று கூறியுள்ளார், காங்கிரஸ் எம்.பி.,ராகுல்.

இதுபோன்ற அவரது அசட்டுத்தனமான பேச்சுகளும், நடவடிக்கைகளும் எரிச்சல் மூட்டுவதாக இருக்கின்றன.

ராகுலின் பேச்சில் ஏதாவது முதிர்ச்சி உள்ளதா?

இவரை தேச விரோதி, வெளிநாட்டு சக்திகளின் கைக்கூலி என்று ஆளுங்கட்சி சொன்னால், அது உண்மையல்ல என்பதை ஓட்டு போடும் மக்களிடம் தான் நிரூபிக்க வேண்டுமே தவிர, பிரதமர் மோடியுடன் விவாதிப்பதால் என்ன பயன்?

சரி அப்படியே விவாதிப்பது என்றாலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளது போல், பார்லிமென்ட் இருக்கிறதே... இப் படி சமூக வலைதளங்களில் சவால் விடுவதற்கு பதில், பார்லிமென்டில், பிரதமர் மோடியிடம் விவாதிக்க வேண்டியது தானே?

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து, இஷ்டத்திற்கு கதையளந்து கொண்டிருக்கிறார் ராகுல். அது குறித்து பார்லிமென்டில் விவாதிக்க தயாரா என்று ராகுலுக்கு, மத்திய அமைச்சர் அமித் ஷா சவால் விடுத்ததும், அந்த சவாலை எதிர்கொள்ள முடியாமல், பிரதமருக்கு எதிர் சவால் விடுகிறார்.

பஹல்காம் தாக்குதல், இந்திய பொருளாதாரம், ராணுவம் மற்றும் பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா, தேர்தல் தலைமை கமிஷனர் ஞானேஷ்குமார் என்று சகட்டு மேனிக்கு அனைவர் மீதும், அனைத்து துறைகளின் மீதும் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருவதற்கு, ராகுல் எத்தனை முறை அவர்களிடம் விவாதித்து, தான் கூறிய குற்றச்சாட்டை அவர்களிடமும், மக்களிடம் தான் நிரூபித்துள்ளார்?

சிந்திக்கும் திறன் பிறழ்ந்தவர்கள் போன்று, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவது, பின், அதற்கு சப்பைக் கட்டு கட்டுவது போன்று, விவாதிக்க தயாரா என்று சவால் விடுவது! இவர் என்ன மாதிரியான அரசியல்வாதி?

ஏற்கனவே, பல மாநிலங்களில் காங்., கட்சி தேய்ந்து கொண்டு வருகிறது. இதுபோன்ற வெட்டி பேச்சுகளால் மேலும் பொதுமக்களின் வெறுப்பை தான் சம்பாதிக்க முடியும்.

இனியும் ராகுலின் தலைமையில் காங்., கட்சி இயங்கினால், இவரது செயல்பாடுகளாலேயே, காங்கிரசை அழித்து துடைத்தெறிந்து விடுவார்!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us