தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/இது உங்கள் இடம்: நவ. 25

இது உங்கள் இடம்: நவ. 25

இது உங்கள் இடம்: நவ. 25


PUBLISHED ON : நவ 25, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 25, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாற்றத்திற்கான அரசாக



வேண்டும்!



வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ‘அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், செயற்கையாக மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது’ என்று, தமிழக வெற்றிக் கழக அமைச்சர்கள் அடிக்கடி கூறி வருகின்றனர்.

அந்தக் கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக, சமீபத்தில் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பங்கேற்ற நிகழ்ச்சியில், வேண்டுமென்றே மின்வெட்டை ஏற்படுத்திய குற்றச்சாட்டில், மின்துறை இளநிலை பொறியாளர் ஒருவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

பொதுவாகவே, அரசு அலுவலர்கள், தி.மு.க., ஆதரவாளர்களாக இருப்பது உண்டு. அவர்களை தங்களுக்கான ஓட்டு வங்கியாகவே, தி.மு.க., இன்று வரை கருதுகிறது. அதனாலேயே, தி.மு.க., ஆட்சியின் போது, ஆட்சியாளர்களுக்கு பெரிய அளவில் நெருக்கடி கொடுக்க மாட்டார்கள், அரசு பணியாளர்கள்.

தமிழகத்தில் காங் கிரஸ் ஆட்சிக் காலத்தில் தகுதி, திறமை, அனுபவம் போன்றவைகளின் அடிப்படையில் தான், அரசு பணிகள் நியமனம் செய்யப்பட்டு வந்தன. அதற்கு மூடுவிழா நடத்தி, அரசு பணிகளை, பணம் சம்பாதிக்கும் கேடயமாக மாற்றியது, தி.மு.க.,

அதுமட்டுமல்ல... அரசு அளிக்கும் விருதுகளாகட்டும், விசாரணைக் கமிஷன்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், பாட நுால் கழக தலைவர், மாநில மனித உரிமைகள் கமிஷன், அரசு வக்கீல்கள் என்று எங்கெல்லாம் தங்கள் ஆதரவாளர்களை நியமிக்க முடியுமோ, அங்கெல்லாம் நியமனம் செய்வர்.

அப்போது தானே ஆட்சியில் இல்லாவிட்டாலும், அதிகாரிகளின் துணையுடன், நிழல் ஆட்சி நடத்தலாம்!

தி.மு.க.,வின் இந்த ஆபத்தான போக்கு, தமிழகத்தைப் பீடித்துள்ள கொடிய நோய் போன்றது. இது கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தை அரித்துக் கொண்டு இருக்கிறது. தி.மு.க.,வை தன் முதல் எதிரி என்று சொல்லும், த.வெ.க., இந்த நோயை அழித்து, தமிழகத்தை காப்பாற்றும் போது தான், மாற்றத்திற்கான அரசாக இருக்கும்!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us