தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/இது உங்கள் இடம்: அக். 15

இது உங்கள் இடம்: அக். 15

இது உங்கள் இடம்: அக். 15

3


PUBLISHED ON : அக் 15, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 15, 2026 12:00 AM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்டாலின்



ஒத்துக்கொள்வாரா?



பொ.ருக்மணி, கூடங்குளம், நெல்லை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளின் ஒரு பகுதியான, பூந்தமல்லி- –போரூர்- – வடபழனி வழித்தட சேவையை பிரதமர் மோடியும், முதல்வர் விஜயும் இணைந்து கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

இவ்விழா நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன், ‘திராவிட மாடல் அரசால் கட்டி முடிக்கப்பட்ட, பூந்தமல்லி- – போரூர்- – வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடத்தை, தேர்தல் வந்துவிட்டதால், நம் ஆட்சிக் காலத்திலேயே முடிக்க முடியவில்லை. இருந்த போதிலும், ஆண்டுக் கணக்கில் நான் சுமந்து வளர்த்தெடுத்த சென்னை மெட்ரோ ரயில் எனும் குழந்தை, அடியெடுத்து வைப்பதில் தாய்மை உணர்வுடன் பெருமை கொள்கிறேன்’ என்று, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நல்லவேளை... ‘நாங்கள் கட்டியது, நாங்கள் போட்ட பிச்சை’ என்றெல்லாம் கூறாமல், ‘திராவிட மாடல் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது’ என்று கூறியுள்ளார்.

மெட்ரோ ரயில் திட்டத்தை கட்டியது குறித்து பெருமிதம் கொள்ளும் ஸ்டாலின், தமிழகத்தில் நிலவும் மின் தடை, தமிழகத்தின் கடன் சுமை, கொலை, கொள்ளை, போதை கலாசாரம், விலைவாசி உயர்வு, லஞ்சம், ஊழல் போன்றவைகளுக்கும், ஆட்சிக்கு வந்து வெறும் ஐந்து மாதங்களே ஆன, த.வெ.க., அரசை காரணமாக கூறாமல், அதற்கும் முந்தைய, தி.மு.க., அரசுதான் பிள்ளையார் சுழி போட்டது என்ற உண்மையை ஒத்து கொள்வாரா?



அரசியல்



ஆதாயத்திற்கான



போராட்டம்!



அ.சேகர், கடலுாரில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: கடந்த 2014ல், மோடியின் தலைமையில், மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்தது முதல், ஓட்டுத் திருட்டு செய்தும், ஓட்டு மிஷினில் முறைகேடுகள் செய்தும், பா.ஜ., தொடர்ந்து வெற்றி பெற்று வருவதாக கூறி வருகிறார், காங்., – எம்.பி., ராகுல்.

ஓட்டு மிஷின் மற்றும் தேர்தல் முறைகேடுகள் குறித்து, உச்ச நீதிமன்றத்தில் இருமுறை வழக்கு தொடுத்து குட்டுப்பட்டாகி விட்டது; ஆனாலும், ‘முதலையும், மூர்க்கனும் கொண்டது விடா’ என்பது போல், திரும்பத் திரும்ப ஒரே பாட்டை பாடிக் கொண்டிருக்கிறார், ராகுல்.

மே.வங்கத்தில் கம்யூ., கட்சி தொடர்ந்து, 34 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போதும், மம்தா பானர்ஜி தொடர்ந்து, 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போதும், ஒடிசாவில் நவீன் பட்நாயக் தொடர்ந்து, 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போதும், தேர்தல் ஆணையம் மீது ஏன் புகார் கூறவில்லை?

தற்போது, கர்நாடகா, கேரளா, தெலுங்கானாவில், காங்., ஆட்சி நடைபெற்று வருகிறது; தேர்தல் முறைகேடுகளால் தான் காங்., வெற்றி பெற்றதா?

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், வெறும் வாயை மென்று கொண்டிருந்த எதிர்க்கட்சியினருக்கு அவலைக் கொடுத்தது போல் ஆகிவிட்டது.

தேர்தல் ஆணையத்தின் பெரும்பாலான உத்தரவுகள், தேர்தல் கமிஷனர்களின் ஒருமித்த கருத்து அல்லது பெரும்பான்மை முடிவு என்ற அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.

ஆலோசனைகளின் போது மாறுபட்ட கருத்துக்களும், ஆட்சேபங்களும் வெளிப்படுவது இயல்பானது. அதை வைத்து, ‘இண்டி’ கூட்டணி யினர் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய் வது, ஜனநாயகத்தை கேலி செய்வதற்கு ஒப்பாகும்!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us