தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/எவராலும் வீழ்த்த முடியாது!

எவராலும் வீழ்த்த முடியாது!

எவராலும் வீழ்த்த முடியாது!


PUBLISHED ON : அக் 15, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 15, 2026 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

க.சண்முகசுந்தரம், பொள்ளாச்சி, கோவை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: இன்று பெரும்பாலான உலக நாடுகள், மிகப் பெரிய அளவில் பொருளாதார சிக்கல்களை சந்தித்து வருகின்றன.

ஒருபுறம், உக்ரைன், ‘ட்ரோன்கள்’ வாயிலாக, ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை தாக்கி அழித்து வருகிறது. அதனால், பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடால் ரஷ்யா தத்தளிக்கிறது.

மறுபுறம், ஏமன் நாட்டு தீவிரவாத குழுவான ஹவுதிகள், சவுதி அரேபியாவின் எண்ணெய் குழாய்களையும், கிடங்குகளையும் தாக்கி, அந்நாட்டின் அடிப்படை பொருளாதாரத்தை சிதைத்து வருகின்றன.

செங்கடல் வழியாக, சவுதி அரேபிய எண்ணெய் கப்பல்கள் செல்வதையும் முடக்கி விட்டன, ஹவுதிகள். இதனால், ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி தடைபட்டுள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேல் – ஈரான் – அமெரிக்காவிற்கு இடையே நடந்து வரும் போரால், உலக நாடுகளின் வர்த்தக போக்குவரத்து பாதையான, ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு விட்டது. இதனால், வணிக கப்பல்களின் போக்குவரத்து முடங்கி, கத்தார், ஈராக், குவைத் நாடுகளின் எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது.

இதன் காரணமாக, உலக நாடுகள் எல்லாம் பெட்ரோல் – டீசல் விலைகளை தாறுமாறாக ஏற்றி விட்டன. பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகள் பெட்ரோல், டீசல் கிடைக்காமல், கிட்டத்தட்ட முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டன. உலகம் முழுதும் பணவீக்கம் ஏறி வருகிறது.

நம் நாட்டிலும் ரசாயன உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், 140 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு பெரிய நாட்டை, புயல்களுக்கு இடையே சிக்கிக் கொண்ட கப்பலை சீராக இயக்கும் மாலுமி போல், இந்திய பொருளாதாரத்தை ஒரே சீராகவும், மக்கள் மீது கூடுதல் வரி எனும் சுமையை ஏற்றாமலும், சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார், பிரதமர் மோடி.

மேலும், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெயை பெருமளவில் வாங்கி, நம் நாட்டில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களில், பெட்ரோல் – டீசல் தயாரித்து, உள்நாட்டு உபயோகத்திற்கு போக, மீதமுள்ளவற்றை ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்து, பெருமளவில் லாபம் ஈட்டுகிறோம்.

அதுமட்டுமல்ல... 85 சதவீதம் கச்சா எண்ணெயை, வெளிநாடுகளிடமிருந்து பெற்று, அதை சுத்திகரிப்பு செய்து, பிற நாடுகளுக்கு விற்று, வலுவான பொருளாதார அடித்தளத்தை நம் நாட்டில் ஏற்படுத்தி உள்ளார், பிரதமர் மோடி.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், அமெரிக்க பொருளாதாரம் லேசாக தும்மினால் கூட, நம் நாட்டின் பங்குச் சந்தை, 30 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டு வந்தது. அந்நிலை, இன்று முற்றிலும் மாறி, உலகமே இந்தியாவை பார்த்து வியக்கும் அளவிற்கு, நம் நாட்டின் உள்நாட்டு பொருளாதாரம், 7.8 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.

இதனால் தான், ‘இந்தியா வீழாதா’ என, சில வெளிநாட்டு சக்திகள் காத்துக் கொண் டிருக்கின்றன.

அந்த அந்நிய சக்திகளுக்கு துணை போகும் சில அரசியல் கட்சிகளும், தேச விரோதிகளும், இந்திய பொருளாதாரம் எப்போது வீழ்ச்சியடையும், அதைப் பயன்படுத்தி தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து விட மாட்டோமா என்று பகல் கனவு கண்டு, ஏதாவது உப்பு சப்பு இல்லாத காரணங்களுக்காக, அரசுக்கு எதிராக போராடி வருகின்றன!

மக்கள் இந்த சுயநலவாதிகளின் உண்மை நோக்கத்தை புரிந்து கொண்டால், நம் நாட்டை எவராலும் வீழ்த்த முடியாது!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us