தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/இது உங்கள் இடம்: அக். 25

இது உங்கள் இடம்: அக். 25

இது உங்கள் இடம்: அக். 25


PUBLISHED ON : அக் 25, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 25, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கல்வி அமைச்சர் கவனத்தில் கொள்வாரா?



வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, வாரந்தோறும் மூன்று பாட வேளைகளும் , மேல்நிலைக் கல்வி மாணவர்களுக்கு இரண்டு பாட வேளைகளும் உடற்கல்வி வகுப்புகள் நடைபெறும் என, திருத்தப்பட்ட புதிய கால அட்டவணையை வெளியிட்டுள்ளார், கல்வி அமைச்சர் ராஜ் மோகன்.

உண்மையில், இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்!

அதேநேரம், பல அரசு தொடக்கப் பள்ளிகளில் விளையாட்டு மைதானம் என்பதே இல்லை; இன்னும் சில பள்ளிகளிலோ, மைதானங்கள் புதர் மண்டியும், சீமைக்கருவேல மரங்கள் அடந்தும் காணப்படுகின்றன.

மேலும், பெரும்பாலான நடுநிலை பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களே கிடையாது; மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் இருந்தாலும், விளையாட்டு வகுப்பை, பிற பாட ஆசிரியர்கள் தான் எடுத்துக் கொள்கின்றனர்.

எனவே, பள்ளிக் கல்வித் துறை முதலில் இந்த இரண்டு விஷயங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். பின், மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள், அதற்கான பாட நுால்களை வழங்க வேண்டும்.

விளையாட்டு பாடவேளைகளை அதிகரிப்பதுடன் நின்று விடாமல், கல்வி அமைச்சர் இந்த அடிப்படை விஷயங்களையும் சரி செய்ய வேண்டும்.

அப்போது தான், மாணவர்களிடம் விளையாட்டு ஆர்வத்தை மட்டுமல்ல; அவர்கள் மனநிலையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும்!

கல்வி அமைச்சர் கவனத்தில் கொள்வாரா?

Image 1635574



'இண்டி'



கூட்டணியினர்



பதில் கூறுவரா?



த.யாபேத்தாசன், பேய்க்குளம், துாத்துக்குடி மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: தேர்தல் கமிஷனருக்கு எதிராக, டில்லியில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு முன், பார்லிமென்ட் செயல்பாடுகளை முடக்குவதில் குறியாக இருந்தனர், லோக்சபா எதிர்க் கட்சி தலைவர் ராகுல் தலைமையிலான, 'இண்டி' கூட்டணியினர்.

இப்போதோ, தேர்தல் கமிஷனருக்கு எதிராக தெரு போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவது குறித்து, இவர்களுக்கு சிறிதும் கவலை இல்லை.

இதில், 'மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் இல்லாமல், ஓட்டுச் சீட்டின் மூலம் தேர்தல் நடத்தப்பட வேண்டும்' என்கிறார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே!

மொத்தத்தில், இவர் கள் தேர்தல் நடைமுறையை கேள்விக்குறியாக்கும் தீவிரவாத இடதுசாரி சிந்தனைக்கு சொந்தக்காரர்களாகி விட்டனர்.

இந்தியா முழுதும், 13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டு விட்டனர் என்பது தான், தேர்தல் ஆணையம் மீது இவர்கள் கூறும் குற்றச்சாட்டு!

தேர்தல் கமிஷனும், இதை மறுக்கவில்லை.

முகவரியில் இல்லாதோர் அல்லது கண்டறிய முடியாதோர், நிரந்தரமாக வேறு இடத்திற்கு குடி பெயர்ந்தோர், உயிரிழந்தோர், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்போர் என, 13 கோடி பேர் நீக்கப்பட்டுள்ளதாக விளக்கம் கொடுத்து விட்டது, தேர்தல் கமிஷன்.

இதில், கரப்பான் கட்சியினருக்கும், இண்டி கூட்டணிக் கும் என்ன பிரச்னை?

நீக்கப்பட்டவர்களை சேர்க்க வேண்டும் என்றால், மேலே குறிப்பிட்டவர்களில் எவரை சேர்க்க வேண்டும்?

'தமிழகத்தில், 1967க்கு பின்பும், மே.வங்கத்தில், 1977க்கு பின், இன்னும் பல மாநிலங்களில், காங்., ஆட்சியை இழந்த பின்பு, அங்கு அவர்களால் ஆட்சியை பிடிக்கவே முடியவில்லை. இதற்கெல்லாம் ஓட்டு பதிவு இயந்திரமும், வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தமும் தான் காரணமா?' என்று கேட்டுள்ளார், உள்துறை அமைச்சர் அமித் ஷா.

இதற்கு, ராகுல் மற்றும் கரப்பான்களின் பதில் என்ன?

அதுமட்டுமல்ல... ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஓட்டு சீட்டு முறையில் தான் தேர்தல் நடந்தது. ஆனாலும், பா.ஜ., மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளதே எப்படி?

உழுகிற நாளில் ஊர் சுற்றிவிட்டு, அறுக்கிற நாளில் அரிவாளை எடுத்துக் கொண்டு வந்தால், தானியம் வீடு வந்து சேர்ந்து விடுமா?

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us