தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/பக்தர்களின் காணிக்கை பக்தர்களுக்கே!

பக்தர்களின் காணிக்கை பக்தர்களுக்கே!

பக்தர்களின் காணிக்கை பக்தர்களுக்கே!

2


PUBLISHED ON : அக் 24, 2026 12:23 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 24, 2026 12:23 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் உள்ள பொன்னாட்சியம்மன் கோவில் சொத்தை, அதன் தற்காலிக அறங்காவலர், தாலுகா அலுவலகம் கட்ட அரசுக்கு தானமாக கொடுத்துள்ளார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 'பக்தர்களால் கோவிலுக்கு வழங்கப்பட்ட சொத்துக்கள், இறைவனுக்கு மட்டுமே சொந்தம்; அச்சொத்திற்கு அரசு வெறும் பராமரிப்பாளர் தானே தவிர, உரிமையாளர் அல்ல' என்று கூறி, தமிழக அறநிலையத் துறைக்கு குட்டு வைத்துள்ளது, உச்ச நீதிமன்றம்.திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, மூன்று வேலையும் அன்னதானம் வழங்கப்படுகிறது. அனைத்து வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதி, சுத்தமான கழிப்பறைகள், குளியல் அறைகள் என அனைத்து வசதிகளையும் பக்தர்களுக்கு இலவசமாக செய்து கொடுக்கிறது, திருப்பதி தேவஸ்தானம்.

இதில், ஒரு சதவீதம் கூட, தமிழக அரசின் கீழ் இயங்கும் அறநிலையத் துறை,

பக்தர்களுக்கு செய்து கொடுப்பதில்லை என்பதுடன், உண்டியல் பணத்தையும், 'ஆட்டைய'ப் போடுகிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, இனியாவது, திருப்பதி கோவிலைப் போன்று, தமிழக கோவில்களிலும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் இலவசமாக செய்து தர வேண்டும்.

மேலும், கோவிலுக்கு வரும் உபரி வருவாயை, நீதிமன்ற அனுமதியுடன், அக்கோவிலை சுற்றியுள்ள ஒருவேளை பூஜைக்கு கூட வழியில்லாத கோவில்களின் பூஜைக்கும், இடிந்த நிலையில் உள்ள கோவில்களை சீரமைக்க மட்டுமே செலவு செய்யப்பட வேண்டும்.

ஊழல் இல்லாமல் நேர்மையுடன் அறநிலையத் துறை செயல்பட்டால், கோவில் சொத்துக்கள் மற்றும் உண்டியல் வருவாயே போதும்; தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் புதுப் பொலிவு பெற்றுவிடும்!

போர் தீர்வு அல்ல!


முனைவர் சே.சுப்பிரமணி, பெரியகுளம், தேனி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

வரலாறு நெடுகிலும் நாடுகள், தங்கள் எல்லையை விரிவாக்கம் செய்யவும், இயற்கை வளங்களைக் கைப்பற்றவும், தங்களின் அரசியல் சித்தாந்தங்களை நிலைநாட்டவும் போர்களில் ஈடுபட்டு வருகின்றன. மனித நாகரிகத்தின் தொடக்க காலத்திலிருந்தே, இந்த மோதல்கள் இருந்தாலும், இன்றைய நவீன யுகத்தில் போர்களின் வடிவம் முற்றிலும்

மாறிவிட்டது.

அதிநவீன ஆயுதங்களும், அணுசக்தி தொழில்நுட்பமும் பெருகியுள்ள

இன்றைய காலகட்டத்தில், உலக நாடுகள் அனைத்துமே, ஒரு மறைமுகப் பதற்றத்துடனேயேஇருக்கின்றன. காரணம், ஒரு பிராந்தியத்தில் தொடங்கும் சிறிய மோதல் கூட, வல்லரசு நாடுகளின் தலையீட்டால், மீண்டும் ஒரு உலகப் போராக மாறி விடுமோ என்ற பயத்தை ஏற்படுத்துவதால்!

அண்மைக்காலமாக, உலக அரங்கில் நடந்து வரும் சர்வதேச மோதல்கள், மனித நேயத்திற்கும், உலகப் பொருளாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. குறிப்பாக, ரஷ்யா - உக்ரைன்; இஸ்ரேல் - ஈரான் நாடுகள், தங்களின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைக் காரணம் காட்டி, தொடர்ந்து மோதி வருகின்றன. இந்த நீண்டகாலப் போரினால் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களும், அப்பாவி பொதுமக்களும் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.

Image 1635018

அதேபோல், மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவி வரும் தீராத எல்லைப் போர்களும், தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளும் அந்தப் பிராந்தியத்தையே சிதைத்து வருகின்றன.

இத்தகைய போர்கள் குறிப்பிட்ட நாடுகளின் எல்லைக்குள் மட்டும் நின்றுவிடுவதில்லை; மாறாக, அவை உலகளாவிய வினியோகச் சங்கிலியைத் துண்டித்து, சர்வதேச அளவில் விலைவாசி உயர்வை ஏற்படுத்துகின்றன.

இதனால், பாதிக்கப்படுவது எப்போதும் போல், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தான்!

வளரும் நாடுகளோ, தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், மக்களின் பசியை போக்க, கல்வி வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டிய நிதியை, ஆயுதங்களை வாங்குவதற்கும், படைகளைப் பலப்படுத்துவதற்கும் செலவிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றன.

சர்வதேச அமைதியைக் காக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையோ, அமெரிக்காவின் ஏவல் அமைப்பாக உள்ளதே தவிர, இவற்றை

எல்லாம் கண்டுகொள்வதில்லை.நாடுகள், தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை துப்பாக்கி முனையில் தீர்த்துக் கொள்ளாமல், துாதரகப் பேச்சு மற்றும் சர்வதேச சட்டங்கள் வாயிலாக தீர்க்க முன் வந்தால் மட்டுமே, மக்கள் இப்பூமியில் அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ முடியும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us