தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/அழியா புகழ் பெறலாம் விஜய்!

அழியா புகழ் பெறலாம் விஜய்!

அழியா புகழ் பெறலாம் விஜய்!


PUBLISHED ON : அக் 24, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 24, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ‘கிருஷ்ணா -– கோதாவரி- – காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த, ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம், தமிழக முதல்வர் விஜய் நேரில் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் விவசாயத்திற்கு மட்டுமல்ல, குடிநீர் பிரச்னையும் நிலவுவதால், நீர் பற்றாக்குறை என்பது தீராத பிரச்னையாக உள்ளது.

இந்நிலையில், கிருஷ்ணா- – கோதாவரி – காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், அது தமிழகத்திற்கு வரப்பிரசாதம் என்றே கூறலாம்!

அதேநேரம், இத்திட்டத்தை விரைவாக முடித்து, செயல்பாட்டிற்கு கொண்டு வர மற்ற மாநிலங்களும், மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஏனெனில், ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்கள் இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து இதுவரை பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை.

மத்திய அரசும் மாநிலங்களின் ஒத்துழைப்பு இன்மையால், இத்திட்டத்தை விரைந்து முடிக்க, நடவடிக்கை எடுக்கவில்லை.

மும்பை -– ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டம், 2.1 லட்சம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது. அதனுடன் ஒப்பீடு செய்தால், இத்திட்டத்திற்கான நிதி தேவை மிகவும் குறைவுதான்.

மேலும், ஆந்திர அரசு, கோதாவரி - – கிருஷ்ணா நதிகளை இணைக்கும், ‘பட்டசீமா’ திட்டத்திற்கு, 1,660 கோடி ரூபாய் மட்டுமே செலவிட்டுள்ளது. இதன் பயனோ, 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான விவசாய உற்பத்தி திறனை அம்மாநிலம் பெற்றுள்ளது.

தமிழக அரசும், இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, காவிரி -– வைகை –- குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

கிருஷ்ணா – கோதாவரி – காவிரி நதி நீர் இணைப்பு மற்றும் காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு என, இந்த இரு திட்டங்களும் செயல்பாட்டிற்கு வந்தால், தமிழகத்தில், 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்; விவசாய உற்பத்தி அதிகரித்து, மாநிலத்தின் பொருளாதாரம் உயரும்!

எனவே, முதல்வர் விஜய், மத்திய மற்றும் பிற மாநில அரசுகளுடன் இணக்கமான போக்கை கடைப்பிடித்து, இத்திட்டத்தை தன் ஆட்சி காலத்துக்குள் முடித்து, செயல்பாட்டிற்கு கொண்டு வந்தால், தமிழக வரலாற்றில், அவர் பெயரும் அழியா புகழ் பெறும்! lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us