PUBLISHED ON : அக் 27, 2026 12:00 AM
சுற்றுலா தலமாகும் கோவில்கள்!
எஸ்.ராமையா, சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ‘ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் பாதுகாப்பு மற்றும் ஆகம விதிகளின் அமலாக்கம் குறித்து, தீவிர விசாரணை நடத்த வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார், ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம.ரவிக்குமார்.
மேலும், ‘பிற மதத்தை சேர்ந்தவர்கள், ஹிந்து கோவிலுக்குள் நுழைவது தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை கிளை, உரிய வழிமுறைகளை வகுத்து தீர்ப்பளித்துள்ள நிலையிலும், இத்தகைய நிகழ்வு ஸ்ரீரங்கத்தில் அரங்கேறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
‘கேரள மாநில கோவில்களில் பின்பற்றப்படுவதைப் போல, பிற சமயத்தவர் கோவிலுக்குள் நுழைவதை கட்டுப்படுத்த சட்டபூர்வமான விதிகளை அறநிலையத்துறை தமிழகத்திலும் கடுமையாக அமல்படுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளார், ரவிக்குமார்.
கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது; ஆனால், கேரளாவில் உள்ள கோவில்கள் எல்லாம் இறைவன் அருள்பாலிக்கும் இடமாக, புனித தலமாக கருதப்படுவதால், அதன் ஆகம விதிகளில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் பரா மரிக்க ப்படுகின்றன.
ஆனால், தமிழக கோவில்களின் நிலை என்ன...
பிரசித்தி பெற்ற கோவில்கள் எல்லாம் திராவிட கட்சிகளின் கைங்கரியத்தால், வியாபார கேந்திரங்களாக அல்லவா மாறியுள்ளன!
கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலுக்குள் செல்ல வேண்டுமானால், பிரதமரே ஆனாலும், கோவில் விதிகளை கடைப்பிடித்தால் தான் உள்ளே நுழைய முடியும். ஆனால், தமிழகத்தில் கோவில் விதிகள் எல்லாம், ஹிந்து மத துவேஷிகளால், திட்டமிட்டே அழிக்கப் பட்டு அல்லவா வருகின்றன!
முன்பெல்லாம் கோவிலின் கொடிமரம் அருகில், 'ஹிந்துக்கள் அல்லாதவர்கள் உள்ளே நுழையக் கூடாது' என்று ஒரு போர்டு மாட்டி இருக்கும். இப்போது அந்த போர்டு எந்த கோவிலிலும் இல்லை.
இவை எல்லாவற்றிற்கும் மேல், கேரளாவிலுள்ள கோவில்களில் கலைநயம் மிக்க சிற்பங்களோ, சிலைகளோ எதுவும் இருக்காது; கோவில்கள் பக்தி கூடங்களாக மட்டுமே உள்ளன.
ஆனால், தமிழக கோவில்களில் கோபுரத்திலிருந்து, உற்சவ விக்கிரங்கள் வரை அனைத்திலும் கலைநயமும், அழகும், நளினமும் மிளிர்ந்துள்ளன.
இதனால், வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணியரை, இந்திய அரசின் சுற்றுலா கழகமும், தமிழக அரசின் சுற்றுலா கழகமும், தமிழக கோவில்களுக்கு தான் முதலில் அழை த்து வருகின்றன.
வழிகாட்டிகளின் துணையோடு, அவர்களை சுவாமியை தரிசிக்க வைத்து, புகைப்படங்கள் எடுக்கவும் அனுமதிக்கின்றன.
எனவே, தமிழக கோவில்கள் ஹிந்துக்களின் வழிபாட்டு தலம் என்பதை கடந்து, அது, வர்த்தக இடமாகவும், சுற்றுலா தலமாகவும் எப்போது மாறியதோ, அப்போதே, இதுபோன்ற அத்துமீறல் நுழைவுகள் ஆரம்பமாகிவிட்டன.
அதனால் தான், மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தின் போதும், கடந்த சில நாட்களுக்கு முன், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்திற்குள்ளும் இஸ்லாமியரை அறநிலையத் துறை அமைச்சரே அழைத்து சென்றுள்ளார்.
கோவில் விதியை கடைப்பிடிக்க வேண்டிய அறநிலையத் துறை அமைச்சரே அதை அலட்சியம் செய்கிறார் என்றால், அவர், கோவிலை புனித தலமாக பார்க்கவில்லை; சுற்றுலா தலமாக பார்க்கிறார் என்று தானே அர்த்தம்?
lll
கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
ஏ.ஸ்ரீவாஸ், சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: டில்லியில் நடந்த கரப்பான் கட்சி பேரணியில், அக்கட்சியின் முக்கிய தலைவரான துருவ் ரத்தீ, ‘எங்கள் போராட்டத்திற்கு ராணுவத்தினரும், போலீசாரும் ஆதரவு தர வேண்டும்’ என்று அறைகூவல் விடுத்துள்ளார்.
கோடிக்கணக்கான மக்கள் சேர்ந்து தேர்ந்தெடுத்த ஓர் அரசை, ராணுவத்தை உசுப்பி விட்டு, வங்கதேசம், இலங்கை, நேபாளம் போன்று, இந்தியாவிலும் ஆட்சி கவிழ்ப் பை அரங்கேற்ற துடிக்கிறது, இந்த கரப்பான் கூ ட்டம்!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசை கவிழ்க்க வேண்டும் என்றால், அதற்குத் தான் தேர்தல் என்ற ஒன்று இருக்கிறதே... நேர்வழியில் சென்று இந்த அரசை நீக்க வேண்டியது தானே... எதற்கு குறுக்கு வழியை நாட வேண்டும்?
தேர்தலில் நின்றால், தாங்கள், ‘டிபாசிட்’ இழந்து விடுவோம் என்று எண்ணியே, இக்கூட்டம் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க நினைக்கிறது .
அதிலும், இந்த துருவ் ரத்தீ, ஜெர்மன் குடியுரிமை பெற்றவர். இவருக்கு இந்தியாவின் உள்விவகாரங்களில் என்ன வேலை?
இதுபோன்ற, அந்நிய கைக்கூலிகளை அடையாளம் கண்டு, மத்திய அரசு களையெடுக்கவில்லை என்றால், இந்தியாவின் நிலைத்தன்மை கேள்விக்குறியாகிவிடும்!
lll
