தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/இது உங்கள் இடம்: அக். 9

இது உங்கள் இடம்: அக். 9

இது உங்கள் இடம்: அக். 9


PUBLISHED ON : அக் 09, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 09, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காம்ரேடுகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!



பொ.ருக்மணி, கூடங்குளம், நெல்லை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரவு கொடுத்து, ஆட்சியிலும் பங்கு வகிக்கின்றன.

ஆனால், ‘அமைச்சர் பதவி வேண்டாம்; நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம்’ என்று கம்யூனிஸ்டுகள் கூறியபோது, ‘அடடே... இந்த காம்ரேடுகள் இவ்வளவு பெருந்தன்மையானவர்களா?’ என்று மக்கள் வியந்து போயினர்.

அப்படியெல்லாம் எங்களைப் பற்றி உயர்வாக நினைத்து விடாதீர்கள் என்பது போல், இப்போதெல்லாம் அடிக்கடி, ‘எங்கள் ஆதரவில் தான் இந்த ஆட்சி நடைபெறுகிறது என்பதை த.வெ.க., மறக்க வேண்டாம்; தான்தோன்றித்தனமாக செயல்பட்டால் வேறுவிதமான முடிவை எடுக்க வேண்டியிருக்கும்’ என்று மிரட்டல் விடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

இப்படி மிரட்டல் விடுக்கும் அளவுக்கு த.வெ.க., ஆட்சியில் அப்படி என்ன அநியாயம் நடந்துள்ளது?

கடந்த தி.மு.க., ஆட்சியில், கள்ளச்சாராயம் குடித்து, 90 பேர் உயிரிழந்த போதும்; துாய்மை பணியாளர்கள் போராட்டம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்ட போதும், வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த போதும், இந்த வர்க்கப் போராளிகள் தி.மு.க., அரசுக்கு எதிராக இப்படி போர் முழக்கம் இடவில்லையே ஏன்?

தி.மு.க., கொடுத்த, ‘நிதி’ கம்யூனிஸ்டுகளின் வாயை திறக்கவிடவில்லையா? தற்போது, அதுபோன்று, ‘நிதி’யோ, அந்த நிதியை அள்ளித் தரும் பதவியையோ ஆளுங்கட்சியிடம் இருந்து பெறாததால், காம்ரேடுகளுக்கு வாய் பூட்டு திறந்து கொண்டு விட்டது போலும்!

பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா சொல்வது போல், கட்டுச்சோற்றில் புகுந்த பெருச்சாளி போல் தான், கம்யூனிஸ்ட் கட்சியினர் த.வெ.க.,விற்கு குடைச்சல் தர நினைக்கின்றனர்; முதல்வர் விஜய் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

lll

காங்கிரசில் இணைவாரா மம்தா பானர்ஜி?



வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ஒரு மாநிலத்தில், பா.ஜ., ஆட்சியை பிடித்து விட்டால், அதன்பின், அக்கட்சியை அங்கிருந்து அவ்வளவு எளிதில் அகற்ற முடியாது.

இந்த உண்மை தெரிந்ததால் தான், நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், பா.ஜ.,வுக்கு எதிராக பிரசாரத்தை முன்னெடுத்தது, தி.மு.க.,

ஆனால், நடந்ததோ வேறு!

எதிரிகளின் கவனம் வேறு ஒரு திசையில் குவிந்திருக்க, பெரிய அளவிலான பிரசாரங்கள் இல்லாமலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்று விட்டது, த.வெ.க.,

தேர்தல் முடிவிற்கு பின், ‘ஐயோ... உண்மையான எதிரி யார் என்பதை கணிக்க தவறி விட்டோமே...’ என்று புலம்பி தவித்த போதும், த.வெ.க., ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாதபோது, கவர்னர் ஆட்சி வாயிலாக பா.ஜ., உள்ளே நுழைந்து விடுமோ என்று பயந்தது.

அதனால், த.வெ.க., ஆட்சிக்கு ஆதரவு கரம் கொடுக்க, தன் கூட்டணி கட்சிகளான, கம்யூ., விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒப்புதல் கொடுத்து அனுப்பி வைத்தது, தி.மு.க.,

தமிழகத்தில் பா.ஜ., விற்கு பெரிதாக ஓட்டு வங்கி இல்லாத போதே, அக்கட்சியை பார்த்து பயந்தது தி.மு.க., என்றால், மே.வங்கத்தில் பா.ஜ., வந்து விடக் கூடாது என்பதற்காகவே, பல்வேறு அடாவடிகளை அரங்கேற்றியும், வன்முறைகளை கட்டவிழ்த்தும் விட்டார், மம்தா.

ஆனாலும், இன்று அங்கு தன் காலடியை அழுத்தமாக ஊன்றி விட்டது, பா.ஜ., கூடவே, திரிணமுல் காங்கிரசை இரண்டு துண்டாக உடைத்து விட்டது. மம்தாவிற்கு இன்று அவர் துவக்கிய கட்சியே சொந்தம் இல்லை.

இந்நிலையில், எஞ்சியுள்ள எம்.எல்.ஏ., – எம்.பி.,க்களுடன் மீண்டும் காங்., கட்சியில் மம்தா இணைய வேண்டும் என்று விரும்புகிறது, காங்.,

சுருக்கமாக சொன்னால், மம்தாவின் நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள துடிக்கிறது, காங்.,

ஆனால், பார்லிமென்ட் தேர்தலில் மூன்று முறை தோற்ற காங்., ‘இண்டி’ கூட்டணிக்கு தலைமை தாங்குவதையே விரும்பாத மம்தா, தன் கட்சியை காங்கிரசுடன் இணைத்து விடுவாரா என்ன!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us