sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

இது உங்கள் இடம்

/

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

1


PUBLISHED ON : பிப் 23, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : பிப் 23, 2024 12:00 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்., கட்சி தேய்பிறையாவது ஏன்?

அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காங்கிரஸ், தேசத்தையே ஆண்ட கட்சி; சாதனைகளை விட, நிறைய சோதனைகளை கண்ட கட்சி... வாரிசுகள் ஆதிக்கத்தால் வளராமல், வாடி வதங்கி வரும் கட்சி... காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் அதிகம்; தொண்டர்கள் குறைவு.

காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கையான தலைவர்களாக நாடே அறிந்தவர்கள் சோனியா, ராகுல், பிரியங்கா... இவர்களை துதி பாடி அரசியல் செய்யும் பல மாநில தலைவர்கள், அவர்கள் வாரிசுகள் என பட்டியல் நீண்டு கொண்டே போகும்...

இந்த கட்சியில், தேசிய தலைவரையோ, மாநில தலைவரையோ கவுரவிக்க ஒரு பெரிய கூட்டத்தை கூட்ட தொண்டனுக்கு சம்பளம் தர வேண்டும். இல்லை என்றால், யாரும் வர மாட்டார்கள்.

உதாரணம், பிரதமரின் ஜாதி பற்றி தரக்குறைவாக பேசிய வழக்கில், ராகுலுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால், அவரது எம்.பி., பதவி பறிப்பு என, தீர்ப்பு வந்த அன்று, தமிழக காங்கிரஸ்சார்பில் ரயில் மறியல் போராட்டம்நடத்த, அன்றைய மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி சென்ற போது, அவருடன் போன அந்த நான்கு பேர் சாதனை அல்ல; வேதனை.

தேசிய அளவில் காங்கிரசை காப்பாற்ற, அக்கட்சியின் வரலாற்றை விளக்க, ராகுல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடந்தார்; பலன் பூஜ்யம்... பா.ஜ.,வை எதிர்க்க தேசம் முழுதும் உள்ள மாநில எதிர்க்கட்சிகள் இணைந்து, 'இண்டியா' கூட்டணியை உருவாக்கினர்.

ஆனால், தொகுதி பங்கீட்டில் மாநில கட்சிகளுடன் கருத்து வேறுபாடு உருவாக்கி, அக்கூட்டணி உதிர்ந்து போகும் நிலையில் உள்ளது.

இனியும், காங்கிரஸ் தொண்டர்களை நம்பி, களத்தில் இறங்கினால் தோல்வி தான் மிஞ்சும் என்பதை உணர்ந்து, சோனியா தேர்தல் அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு, ராஜ்யசபா எம்.பி.,யாக பார்லிெமன்ட்டுக்குள் செல்ல முடிவு எடுத்து விட்டார்.

சோனியா குடும்பத்துக்கு இதுவரை விசுவாசம் காட்டிய கமல்நாத் போன்ற பல தலைவர்களும், இனி வற்றும் குளத்தில் வாழ முடியாது; வற்றாத குளத்தை தேடுவோம் என்று பா.ஜ., பக்கம் பார்வையை திருப்பியுள்ளனர். எது எப்படியோ... காங்., கட்சி தேய்பிறையாகி கொண்டிருக்கிறது என்பது மட்டும் உறுதி.



சுப்ரீம் கோர்ட்டை மனமுவந்து பாராட்டுவோம்!


அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தினமலர்' நாளிதழில், சமீபத்தில் வெளியான, 'தேர்தல் பத்திரம் திட்டம், மத்திய அரசுக்கு பின்னடைவு' என்ற தலையங்கம் படித்தேன்.

அதில், தேர்தல் பத்திரவிவகாரத்தில் மத்திய அரசு பின்னடைவை சந்தித்ததற்கு முக்கிய காரணம், அது, மற்ற அரசியல் கட்சிகளுடனும்,பொது மக்களுடனும் கலந்து ஆலோசிக்காமலும், அவர்களின் கருத்துகளைப் பெறாமலும்திட்டத்தை அமல்படுத்தியதே.

எடுத்தோம், கவிழ்த்தோம் என்று 2017ல் அவசர கதியில் இந்த மசோதாவை கொண்டு வந்து, 2018ல் அமல்படுத்தியது சரியல்ல.

இதை எதிர்த்து, அப்போதே ஜனநாயக சீர்திருத்த சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் நிர்வாகி ஜெயா தாக்குர் தாக்கல் செய்த வழக்கில் தான், நம் உச்ச நீதிமன்றம் அதிரடியாக, 'தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது' என, தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும், இந்த தேர்தல்பத்திரங்கள் வாயிலாக, தற்போது மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு மட்டுமே அதிகபட்சமாக, 1,600 சொச்சம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

'ஊழல் இல்லாத ஆட்சி' என்று மேடைகளில் முழங்கும் பிரதமர் மோடிக்கு, இந்த தீர்ப்பு பெரிய பின்னடைவு தான். ஏனெனில், பல ஆயிரம் கோடிகளை மத்தியிலும், மாநிலங்களில் ஆட்சி செய்து வரும் அரசியல் கட்சிகளுக்கு, தனியார் நிறுவனங்கள் ஏன் வாரி வழங்க வேண்டும்.

இப்படி நிதியுதவி செய்வதே, ஆளுங்கட்சியால் லாபம் அடைவதற்கு தான் என்பதை சிறு குழந்தை கூட சொல்லி விடுமே. இதுவே, பிற்காலத்தில் பெரிய ஊழலுக்கும் வழி வகுக்கும்.

மேலும், 'கருப்பு பணத்தை ஒழிப்பேன்' என்று, சபதம் எடுத்து செயல்படுவதாகக் கூறும் நம் மத்திய அரசு, அந்த கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற, இந்த தேர்தல் பத்திரங்கள் உதவிஉள்ளன என்பதையும் மறுக்க முடியாது.

நல்ல வேளை, உச்ச நீதிமன்றம் சரியான நேரத்தில் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கி, நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பாதுகாவலர்களாக தன்னை மீண்டும் நிரூபித்து உள்ளது.

இதற்காக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்ட, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வை, எவ்வளவு பாராட்டினாலும் தகும்.



தி.மு.க., - அ.தி.மு.க., மறைமுக கூட்டு?


வீ.ராஜகோபால், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'டைம்ஸ் நவ்' எனும் ஆங்கில செய்திச் சேனல் எடுத்த கருத்துக் கணிப்பு ஒன்று, 'லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி 51 சதவீதமும், அ.தி.மு.க.,16 சதவீதமும் மற்றும் பா.ஜ., 21 சதவீத வாக்குகளையும் பெறும்' என்றும் கூறியுள்ளது.

இதன்படி, தி.மு.க., 38 லோக்சபா தொகுதிகளை கைப்பற்றும் எனவும், அ.தி.மு.க., - பா.ஜ., ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகள் பிரிவது தான்.

தி.மு.க.,வின் ஓட்டு வங்கி எப்போதும் போல, 40 -- 41 சதவீதம்இருப்பதை, மற்ற இரு கட்சிகளும் உணர வேண்டும். தி.மு.க.,வின் ஓட்டுகள் சற்றும் பிரியாத நிலையில் அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் என்ன செய்தாலும், ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியாது என்பதையும் அவர்கள் உணர வேண்டும்.

எனவே, தற்போதுள்ள நிலையில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டு சேர்ந்து தேர்தலை சந்தித்தால் மட்டுமே, தி.மு.க.,வை வெற்றி கொள்ள முடியும்.

அ.தி.மு.க., தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான் என்றும்,தான் தோற்றாலும் பரவாயில்லை, பா.ஜ., வெற்றி பெற்று விடக் கூடாது என்றும் நினைத்தால், அது தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட கதையாகவே முடியும்.

இந்த யோசனையை அ.தி.மு.க., ஏற்காதபட்சத்தில், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் மறைமுகமாக ஒப்பந்தம் போட்டு கொண்டு, லோக்சபா தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவே கருத வேண்டும்.








      Dinamalar
      Follow us